Friday, 10 May 2013

பொன்மொழிகள் - 7

  1. அழைப்பின்றி வேரொருவர் வீட்டிற்கு செல்பவர்கள் அது மரணத்திலும் மேலான துன்பத்தைத் தரும்.
  2. பணம் நல்லவர் கையில் இருந்தால் ஊர் நடுவில் நல்ல தண்ணிர் இருப்பதற்கு சமம்.
  3. பொருப்பு இருக்கிறவர்கள் பொருமையாக இருக்க வேண்டும்.
  4. கட்டுப்பாடு இல்லாமல் வாழ்கிறவன் கெளரவம் இல்லாமல் மடிந்து போவான்.
  5. கடன் இல்லாதவனே பணக்காரன. உடல் ஆரோக்கியம் உள்ளவனே செல்வந்தன்.
  6. வாக்குறுதி என்பது ஒருவகைக் கடன்தான்.
  7. எல்லோருடைய உபதேசங்களையும் காது கொடுத்துக் கேளுங்கள், ஒன்றை மட்டும் பின்பற்றுங்கள்.
  8. எல்லோருக்கும் மரியாதை செய்யுங்கள் ஆனால் ஒருவரை பின்பற்றுங்கள்.
  9. எல்லோரிடத்திலும் ஞானத்தை சேகரித்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு குருவினுடைய உபதேசத்தை மட்டும் சொந்தமாக்கிக்கொளுங்கள்.
  10. அனுபவம் அறிவின் முகம் பார்க்கும் கண்ணாடி.

Saturday, 4 May 2013

உணவே மருந்து - 3

  1. காரக்குழம்பு, மீன்குழம்பு செய்யும்போது ஒரு கட்டி பூண்டு உரிச்சிப்போட்டு செய்யலாம் .
  2. மிகவும் கலைப்பாக இருந்தால் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடித்தால் சுறுசுறுப்பாக இருக்கும் .
  3. சாம்பார், கூட்டு செய்து இரக்கும் போது ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கலந்து இரக்கவும் .
  4. தூதுவளை கீரை துவையல் வைத்து சாப்பிட்டால் காது வலி, காது அடைப்பு குணம் ஆகும் .
  5. கரி குழம்பு, குருமா குழம்பு செய்து இறக்கும் போது புதினா பொடி செய்து போடவும் .
  6. எந்த விதமான சமையல் செய்தாலும் ஒரு சிட்டிகை ஓமம் பொடி போட்டு கலந்து இரக்கவும் .
  7. எந்த வித ஜூஸ் செய்தாலும் கொதித்த தண்ணிரை ஆரவைத்து செய்யவும் . சளி பிடிக்காது .
  8. சாம்பார் செய்யும் போது புளிக்கு பதில் எலுமிச்சை சாறு ஊற்றி இரக்கவும்.
  9. பொரியல் கூட்டு வகைகளுக்கு தேங்காய், சீரகம் ஒன்றாக போட்டு கரகரப்பாக அரைத்து போட்டு கலந்து இரக்கவும் .
  10. சாம்பார் செய்யும் போது துவரம் பருப்புக்கு பதில் பச்சைபருப்பு போட்டு செய்யலாம் .

பொன்மொழிகள் - 6

  1. வருவதும் போவதும் இன்பமும் துன்பமும்.
  2. வந்தால் போகாதது புகழும் பழியும்.
  3. போனால் வராதது மானமும் உயிரும்.
  4. தானாக வருவது இளமையும் மூப்பும்.
  5. நம்முடன் வருவது பாவமும் புண்ணியமும்.
  6. அடக்க முடியாதது ஆசையும் துக்கமும்.
  7. தவிர்க்க முடியாதது பசியும் தாகமும.
  8. நம்மால் பிரிக்க முடியாதது பந்தமும் பாசமும்.
  9. அழிவை தருவது பொறாமையும் கோபமும்.
  10. எல்லோருக்கும் சமமானது பிறப்பும் இறப்பும்.