Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Sunday, 25 May 2014

அரைக்கீரை கடைசல்


தேவையான பொருட்கள்:
  1. அரைக்கீரை - 1 கட்டு 
  2. தக்காளி - 1
  3. வெங்காயம் - 1
  4. பூண்டு - 14 பல் 
  5. பச்சை மிளகாய் - 2
  6. காய்ந்த மிளகாய் - 2
  7. கடுகு - 1 ஸ்பூன் 
  8. எண்ணெய் - 1 குழி கரண்டி 
  9. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
  10. பெருங்காயம் - 1 சிட்டிகை 
  11. புளி - ஒரு சிறு நெல்லிக்காய் அளவு 
  12. தண்ணீர் - 1/2 லிட்டர்  
  13. உப்பு - தேவையான அளவு
 அரைக்கீரை கடைசல் செய்முறை:
  1. அரைக்கீரையின் வேரை நீக்கி, நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் (கத்திரிக்கோலால்-scissors நறுக்கிக் கொள்ளவும்).
  2. நறுக்கிய அரைக்கீரை, தக்காளி, நறுக்கிய வெங்காயம், 10 பல் பூண்டு (தோல் உரித்தது), பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயம், தண்ணீர் ஆகியவற்றை ஒரு சட்டியில் போட்டு நன்றாக வேகவைக்கவும்.
  3. வெந்தபின் புளியை போட்டு மேலும் 5 நிமிடம் வேகவைக்கவும்.
  4. வெந்த கீரையை மத்தால் மையக் கடையவும்.
  5. பிறகு, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், 4 பல் பூண்டு (தோலோடு நசுக்கியது) ஆகியவற்றை போட்டு தாலித்து கடைந்த கீரையில் கலந்து விடவும்.
அரைக்கீரை கடைசல் தயார்  !!!

Thursday, 22 May 2014

சாம்பார்

தேவையான பொருட்கள்:
  1. பச்சை பருப்பு (அ) துவரம் பருப்பு - 100 கிராம்
  2. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
  3. பெருங்காயம் - 1 சிட்டிகை 
  4. வெந்தயம் - 1 ஸ்பூன்
  5. பூண்டு - 4 பல் 
  6. நல்லெண்ணெய் - 1 ஸ்பூன் 
  7. தண்ணீர் - 1/2 லிட்டர் 
மேலே கூரிய பொருட்களை ஒன்றாக சேர்த்து நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.
  1. எண்ணெய் 
  2. கடுகு - 1 ஸ்பூன் 
  3. கருவேப்பிலை - 2 கொத்து 
  4. சின்ன வெங்காயம் - 1 கைபிடி 
  5. தக்காளி - 4
  6. முருங்கைக்காய் - 2
  7. முள்ளங்கி - 2
  8. பீன்ஸ் - 1 கைப்பிடி 
  9. காரட் - 2
  10. கத்திரிக்காய் - 4
  11. சாம்பார் மிளகாய் தூள் - 2 ஸ்பூன் 
  12. புளி - ஒரு சிறு நெல்லிக்காய் அளவு 
  13. கொத்தமல்லி தழை - சிறிது
  14. உப்பு - தேவையான அளவு 
  15. நெய் - 1 ஸ்பூன்
 செய்முறை:
  1. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்தபின் கடுகு, கறிவேப்பில்லை போட்டு பொறிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போடவும்.
  2. உடனே மிக்ஸியில் அரைத்த தக்காளியை இதில் போட்டு வதக்கவும்.
  3. பிறகு நறுக்கிய காய்களை இதில் போட்டு வதக்கவும்.
  4. இது வதங்கியதும், 2 ஸ்பூன் சாம்பார் மிளகாய் தூள் போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
  5. இப்பொழுது வேகவைத்த பருப்பு கலவையை இதில் சேர்க்கவும்.
  6. இதில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி, பின் புளி, தேவையான உப்பு, கொத்தமல்லி தழை போட்டு ஒன்றாகக் கலந்து காய்கள் வேகும் வரை கொதிக்க விடவும்.
  7. சாம்பார் தயாரானதும் நெய் விட்டுக் கலந்து இரக்கவும்.
சாம்பார் தயார்  !!!

Sunday, 8 September 2013

மூக்கடலை சுண்டல்

தேவையான பொருட்கள்:
  1. வெள்ளை (அல்லது) கருப்பு மூக்கடலை - 1 கப்
  2. எண்ணெய் - 1 ஸ்பூன் 
  3. கடுகு - 1 ஸ்பூன் 
  4. சீரகம் - 1 ஸ்பூன் 
  5. காய்ந்த மிளகாய் - 2
  6. பெருங்காயம் - 1 சிட்டிகை 
  7. கறிவேப்பிலை - சிறிதளவு
  8. தேங்காய் - 1/2 மூடி
  9. உப்பு - தேவையான அளவு 

செய்முறை:
  1. மூக்கடலையை இரவில் தண்ணிரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
  2. பிறகு காலையில் தண்ணீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் தண்ணீர், உப்பு, மூக்கடலை போட்டு மிருதுவாக வேகவைத்துக் கொள்ளவும்.
  3. மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு பொரிந்ததும் வேகவைத்த மூக்கடலையை போட்டு நன்றாகக் கலந்துக்கொள்ளவும்.
  4. இப்பொழுது தேங்காய், சீரகம், மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பொடியாக அரைத்து சுண்டலில் போட்டு ஒரு நிமிடம் கலந்து இறக்கவும்.

 மூக்கடலை சுண்டல் தயார் !!!

கேசரி

தேவையான பொருட்கள்:
  1. ரவை - 1 கப் 
  2. சர்க்கரை - 1 கப் 
  3. தண்ணீர் - 4 கப் 
  4. கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை 
  5. ஏலக்காய் - 4
  6. நெய் - 50 (அல்லது) 100 கிராம் 
  7. முந்திரி, பாதாம், திராட்ச்சை - தேவையான அளவு 

செய்முறை:
  1. ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி ரவையை போட்டு லேசாக வறுத்து எடுக்கவும்.
  2. மற்றொரு பத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் சர்க்கரை, கேசரி பவுடர், ஏலக்காய் தூள் போடவும்.
  3. சர்க்கரை கரையும்வரை கொதிக்க விடவும்.
  4. இப்பொழுது ரவையை சிறிது சிறிதாக தூவி கிளறவும்.
  5. தண்ணிர்  வற்றியவுடன் இறக்கி வைக்கவும்.
  6. ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி, பாதாம், திராட்ச்சை போட்டு பொன் நிறம் ஆனதும் இந்த இறக்கி வைத்த கேசரியில் ஊற்றி கலந்து விடவும்.

கேசரி தயார் !!!


பின்குறிப்பு:
  • பாதாம், முந்திரியை சிறிய துண்டுகளாக்கிப் போடவும்.

உளுந்து வடை (மெது வடை)

தேவையான பொருட்கள்:
  1.  உளுந்து - 1/4 கிலோ 
  2. பச்சை அரிசி (அல்லது) புழுங்கல் அரிசி - 1 ஸ்பூன் 
  3. வெங்காயம் - 2
  4. பச்சை மிளகாய் - 2
  5. கறிவேப்பிலை - சிறிது 
  6. உப்பு - தேவையான அளவு 
  7. எண்ணெய் - 1/2 லிட்டர் 

செய்முறை:
  1. உளுந்தையும் அரிசியையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊறவைத்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
  2. பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை அரைத்த மாவில் போட்டு கலாந்துக்கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய்  ஊற்றி காய்ந்ததும் ஒரு எலுமிச்சை அளவு மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து வட்டமாக தட்டி நடுவில் ஒரு விரலால் ஓட்டை போடவும்.
  4. சூடான எண்ணெயில் இதனை போட்டு இரண்டு பக்கமும் திருப்பிவிடவும்.
  5. பொன்னிறமானதும் எடுத்துப் பரிமாறவும்.

உளுந்து வடை தயார் !!!

பால் பாயாசம்

தேவையான பொருட்கள்:
  1. பால் - 1 லிட்டர் 
  2. தண்ணீர் - 1/2 லிட்டர் 
  3. சேமியா - 50 கிராம் 
  4. ஜவ்வரிசி - 50 கிராம் 
  5. சர்க்கரை - 1/4 கிலோ 
  6. ஏலக்காய் - 4
  7. நெய் - 25 கிராம் 
  8. முந்திரி, திராட்ச்சை - தேவையான அளவு

செய்முறை:
  1. ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் பால், 1/2 லிட்டர் தண்ணீர் கலந்து கொதிக்க விடவும்.
  2. கொதித்தவுடன் ஜவ்வரிசி போட்டு வேகவிடவும்.
  3. வெந்தவுடன் சேமியாவை போட்டு ஒரு கொத்தி வந்ததும் ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.
  4. பின் சர்க்கரை சேர்த்து கரைந்ததும் இறக்கிவிடவும்.
  5. ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி, திராட்ச்சை போட்டு பொன் நிறமானவுடன் பாயாசத்தில் ஊற்றி கலந்து பரிமாறவும்.

பால் பாயாசம் தயார் !!!

Saturday, 7 September 2013

சர்க்கரை பொங்கல்

தேவையான பொருட்கள்:
  1. பச்சை அரிசி - 1 கப் 
  2. பச்சை பருப்பு - 1/2 கப் 
  3. பாகு வெல்லம் - 1/4 கிலோ 
  4. நெய் - 50 கிராம் 
  5. முந்திரி, திராட்ச்சை, பாதாம் - தேவையான அளவு 
  6. ஏலக்காய் - 4
  7. கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை 
  8. தண்ணீர் - 5 கப் 

செய்முறை:
  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசி, பருப்பு சேர்த்து நன்றாக  வேகவிடவும்.
  2. வெந்தவுடன் அனலை சிறிதாக்கி வெல்லத்தை தூள் செய்து போட்டு கரையும்வரை நன்றாகக் கிளறவும்.
  3. பின் கேசரி பவுடர், ஏலக்காய் தூள் போட்டு கலந்துவிடவும்.
  4. இப்பொழுது ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி, திராட்ச்சை போட்டு பொன் நிறம் ஆனதும் பொங்கலில் ஊற்றவும்.
  5. நன்றாகக் கலந்து பரிமாறவும்.
சர்க்கரை பொங்கல் தயார் !!! 

பின் குறிப்பு :
  • வெல்லத்தில் மண் தூசி இருந்தால் வெல்லபாகு செய்து உபயோகப்படுத்தலாம்.
  • வெல்லபாகு செய்முறை
    1. பாத்திரத்தில் ஒரு கரண்டி தண்ணீர் ஊற்றி போடி செய்த வெல்லத்தை போட்டு நன்றாகக் கரையும்வரை கொதிக்கவிடவும்.
    2.  பிறகு இதனை ஒரு வெள்ளை துணியால் வடிகட்டினால் வெல்லப்பாகு தயார்.

Monday, 26 August 2013

பாரம்பரிய எள்ளு உருண்டை

தேவையான பொருட்கள்:
  1. எள்ளு - 1 கப் 
  2. வேர்கடலை - 1 கப் 
  3. கேழ்வரகுமாவு - 1 கப் 
  4. வெல்லம் - 1 கப் 
செய்முறை: 
  1. முதலில் எள்ளை வறுத்து போடி செய்து கொள்ளவும்.
  2. பின் வேர்கடலையை வறுத்துத் தோலை நீக்கி சின்ன சின்னதாக பொடித்துக் கொள்ளவும்.
  3. கேழ்வரகு மாவை தண்ணீர் உப்பு போட்டு பிசைந்து உருண்டை செய்து தட்டி தோசை கல்லில் அடை செய்து, பின் அதை துண்டு துண்டாக புட்டு வைத்துக் கொள்ளவும்.
  4. வெல்லத்தை போடி செய்துக் கொள்ளவும்.
  5. மிக்சியில் எள்ளு, வேர்கடலை, கேழ்வரகு அடை ஆகியவற்றை தனித்தனியாக பொடித்துக் கொள்ளவும்.
  6. பிறகு மிக்சியில் அரைத்து வைத்த எள்ளு, வேர்கடலை, கேழ்வரகு அடை ஆகியவற்றோடு வெல்லத்தையும் போட்டு மீண்டும் மிக்சியில் லேசாக விட்டுவிட்டு அரைத்தால் எல்லாம் ஒன்றாகக் கலந்து விடும்.
  7. இதனை எடுத்து ஒன்றாகக் கிளறி லட்டு போல் பிடித்து வைத்துக் கொள்ளவும்.
 எள்ளு உருண்டை தயார் !!!

Sunday, 25 August 2013

விநாயகர் சதுர்த்தி வெல்லம் பிடிக் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:
  1. பச்சை அரிசி மாவு - 1 கப் 
  2. தேங்காய் - 1 கப்
  3. வெல்லம் - 1/2 கப் 
  4. சர்க்கரை - 1/2 கப் 
  5. ஏலக்காய் - 4
  6. தண்ணீர் - 1 கப்
  7. பால் - 1 கரண்டி
கொழுக்கட்டை செய்முறை:
  1. அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி, வெல்லம், சர்க்கரை, தேங்காய், ஏலக்காய் போட்டு கொதிக்க வைக்கவும்.
  2. இது ஆறியபின் இதில் பால், அரிசி மாவு ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து பிசைந்துக் கொள்ளவும்.
  3. இவற்றை ஒரு கைப்பிடி அளுவுக்கு நன்றாக பிடித்து வைத்துக்கொள்ளவும்.
  4. இவற்றை ஒரு  இட்லி பாத்திரத்தில் ஐந்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
கொழுக்கட்டை தயார் !!!

பின்குறிப்பு:
  1. பச்சை அரிசியை ஒரு மணிநேரம் ஊர வைத்து பின் தண்ணிரை வடித்து ஒரு வெள்ளை துணியில் பரப்பி நிழலில் காய வைத்து அரைத்துக்கொள்ளவும்.
  2. கொழுக்கட்டையை  பிடிப்பதற்கு தண்ணிர் பற்றவில்லை என்றால் காச்சிய பாலை ஊற்றி கலந்து பிசைந்துக்கொள்ளவும்.
  3. தண்ணிர் அதிகமாகி விட்டால் அரிசி மாவு தேவையான அளவு போட்டு பிசைந்துக்கொள்ளலாம்.

Saturday, 24 August 2013

விநாயகர் சதுர்த்தி எள்ளு கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:
  1. பச்சை அரிசி மாவு - 1 கப் 
  2. எள்ளு - 1கப் (வறுத்துப் பொடித்தது)
  3. வெல்லம் - 1/2 கப் 
  4. சர்க்கரை - 1/2 கப் 
  5. ஏலக்காய் - 4
  6. நெய் - 1 ஸ்பூன் 
  7. எண்ணெய் - 1 ஸ்பூன்
  8. தண்ணீர் - 1 கப்
  9. பாதாம், பிஸ்தா, முந்திரி - தேவைப்பட்டால் 
  10. பால் - 1 கரண்டி
பூரணம் செய்முறை:
  1. ஒரு கடாயில் அடுப்பில் வைத்து வெல்லம், சர்க்கரை, எள்ளு, ஏலக்காய், நெய், பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை போட்டு கிளறி எடுத்து வைக்கவும்.
கொழுக்கட்டை செய்முறை:
  1. பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர், ஒரு கரண்டி பால், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைத்து அரிசி மாவை போட்டு கிளறி எடுத்து வைக்கவும்.
  2. கிளறிவைத்த அரிசி மாவை நன்றாகக் கட்டி இல்லாமல் பிசைந்துக் கொள்ளவும்.
  3. இதனை சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து தட்டையாக தட்டவும்.
  4. இதன்மேல் செய்துவைத்த பூரணத்தை சிறுது எடுத்து வைத்து மூடி உருண்டையாக பிடித்துக்கொள்ளவும்.
  5. இப்படி செய்துவைத்த கொழுக்கட்டை உருண்டைகளை ஒரு இட்லி பாத்திரத்தில் இட்லியை வேகவைப்பது போல் ஐந்து நிமிடம் வேகவைத்துக் கொள்ளவும். 
கொழுக்கட்டை தயார் !!!

பின்குறிப்பு:
  1. பச்சை அரிசியை ஒரு மணிநேரம் ஊர வைத்து பின் தண்ணிரை வடித்து ஒரு வெள்ளை துணியில் பரப்பி நிழலில் காய வைத்து அரைத்துக்கொள்ளவும்.

விநாயகர் சதுர்த்தி தேங்காய் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:
  1. பச்சை அரிசி மாவு - 1 கப் 
  2. தேங்காய் துருவல் - 1கப் 
  3. வெல்லம் - 1/2 கப் 
  4. சர்க்கரை - 1/2 கப் 
  5. ஏலக்காய் - 4
  6. நெய் - 1 ஸ்பூன் 
  7. எண்ணெய் - 1 ஸ்பூன்
  8. தண்ணீர் - 1 கப்
  9. பாதாம், பிஸ்தா, முந்திரி - தேவைப்பட்டால் 
  10. பால் - 1 கரண்டி 
பூரணம் செய்முறை:
  1. அடுப்பில் பாத்திரத்தை வைத்து வெல்லம், சர்க்கரை, தேங்காய், ஏலக்காய், நெய், பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை போட்டு கிளறி எடுத்து வைக்கவும்.
கொழுக்கட்டை செய்முறை:
  1. பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர், ஒரு கரண்டி பால், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைத்து அரிசி மாவை போட்டு கிளறி எடுத்து வைக்கவும்.
  2. கிளறிவைத்த அரிசி மாவை நன்றாகக் கட்டி இல்லாமல் பிசைந்துக் கொள்ளவும்.
  3. இதனை சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து தட்டையாக தட்டவும்.
  4. இதன்மேல் செய்துவைத்த பூரணத்தை சிறுது எடுத்து வைத்து மூடி உருண்டையாக பிடித்துக்கொள்ளவும்.
  5. இப்படி செய்துவைத்த கொழுக்கட்டை உருண்டைகளை ஒரு இட்லி பாத்திரத்தில் இட்லியை வேகவைப்பது போல் ஐந்து நிமிடம் வேகவைத்துக் கொள்ளவும். 
கொழுக்கட்டை தயார் !!!

பின்குறிப்பு:
  1. பச்சை அரிசியை ஒரு மணிநேரம் ஊர வைத்து பின் தண்ணிரை வடித்து ஒரு வெள்ளை துணியில் பரப்பி நிழலில் காய வைத்து அரைத்துக்கொள்ளவும்.

Wednesday, 14 August 2013

இட்லி மிளகாய் தூள்

தேவையான பொருட்கள்:
  1. கடலை பருப்பு - 100 கிராம் 
  2. உளுந்து - 100 கிராம் 
  3. காய்ந்த மிளகாய் - 4
  4. பூண்டு - 5 பற்கள் 
  5. பெருங்காய தூள் - ஒரு சிட்டிகை 
  6. எண்ணெய் - 1 ஸ்பூன் 
  7. உப்பு - தேவையான அளவு 
செய்முறை:
  1. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், பூண்டு, பெருங்காய தூள், கடலை பருப்பு, உளுந்து ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  2. வறுத்ததை ஆறவைத்து பின் தேவையானாளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  3. இட்லி, தோசைக்கு இந்த தூளை தேவையான அளவு எடுத்து எண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம்.
இட்லி மிளகாய் தூள் தயார் !!!

சாம்பார் மிளகாய் தூள்

தேவையான பொருட்கள்:
  1. கொத்தமல்லி (தனியா) - 1 கிலோ 
  2. நீட்டு மிளகாய் - 1/2 கிலோ 
  3. குண்டு மிளகாய் - 1/2 கிலோ 
  4. மஞ்சள் - 50 கிராம் 
  5. கடுகு - 100 கிராம் 
  6. மிளகு - 100 கிராம் 
  7. சீரகம் -100 கிராம் 
  8. வெந்தயம் - 25 கிராம் 
  9. கடலை பருப்பு - 100 கிராம் 
  10. சோயா பீன்ஸ் - 100 கிராம் 
  11. புழுங்கல் அரிசி - 100 கிராம் 
செய்முறை:
  1. கடலை பருப்பு, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், சோயா பீன்ஸ், புழுங்கல் அரிசி ஆகியவற்றை தனி தனியாக எண்ணெய் இல்லாமல் லேசாக வறுத்தெடுக்கவும் 
  2. பின் வறுத்த இவற்றோடு கொத்தமல்லி (தனியா), நீட்டு மிளகாய், குண்டு மிளகாய், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து மிசினில் அரைத்து கொள்ளவும்.
  3. அரைத்ததும் சூடு ஆறும் வரை பாத்திரத்தை மூடாமல் திறந்து வைக்கவும். ஆறியபின் முடிவைத்துத் தேவையான பொழுது பயன்படுத்தவும்.
சாம்பார் மிளகாய் தூள் தயார் !!!

பின்குறிப்பு:
  • நீட்டு மிளகாய், குண்டு மிளகாய் இரண்டும் கிடைக்காத பட்சத்தில் ஏதேனும் ஒரு வகை மிளகாயை ஒரு கிலோ பயன்படுத்தலாம்.
  • இது அனைத்து விதமான சாம்பார், காரக்குழம்பு, வறுவல், பொறியல், மீன்குழம்பு, கறிக்குழம்பு போன்ற அனைத்து விதமான சமையலுக்கும் உபயோகப்படுத்தலாம்.
  • இந்த மிளகாய் தூளை மூன்று மாதம் வரை வைத்துக்கொள்ளலாம்.

Tuesday, 13 August 2013

சுண்டைக்காய் காரக்குழம்பு

தேவையான பொருட்கள்:
  1. சுண்டைக்காய் - 200 கிராம் 
  2. வெங்காயம் - 200 கிராம் 
  3. தக்காளி - 200 கிராம் 
  4. பூண்டு - 10 பற்கள் 
  5. சாம்பார் மிளகாய்  தூள் - 2 ஸ்பூன் 
  6. புளி - ஒரு சிறு எலுமிச்சை அளவு 
  7. வெல்லம் - ஒரு சிறு நெல்லிக்காய் அளவு 
  8. எண்ணெய் - 100 கிராம்
  9. கடுகு - 1 ஸ்பூன் 
  10. வெந்தயம் - 1 ஸ்பூன் 
  11. கறிவேப்பில்லை - 2 கொத்து 
  12. கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு 
  13. உப்பு - தேவையான அளவு 
  14. தண்ணீர் - ஒரு லிட்டர் 
செய்முறை:
  1. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்தபின் கடுகு, வெந்தயம், கறிவேப்பில்லை போட்டு பொறிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  2. தக்காளியை பொடியாக நறுக்கி கையால் மசித்து வெங்காயம் வதங்கியவுடன் போடவும்.
  3. தக்காளி வதங்கிய பின் பூண்டை போடவும்.
  4. இரண்டாக நறுக்கிய சுண்டைக்காயை போட்டு சிறிது நிறம் மாறும் வரை வதக்கவும்.
  5. இப்பொழுது சாம்பார் மிளகாய் தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  6. பிறகு தண்ணிர் ஊற்றி கொத்தமல்லி, வெல்லம், தேவையான உப்பு ஆகியவற்றை போட்டு கலக்கவும்.
  7. மேலே எண்ணெய்  தானாக மிதந்து வரும் அளவுக்கு கொதிக்க விடவும்.
சுண்டைக்காய் குழம்பு தயார்  !!!

பின்குறிப்பு:
  1. சுண்டைக்காயை சமைப்பதற்கு முன் நிறம் மாறாமல் இருப்பதற்கு அதை இரண்டாக நறுக்கி தண்ணிரில் போட்டுவைக்கவும். 
  2. சாம்பார் மிளகாய் தூள்
      • கொத்தமல்லி (தனியா) - 1 கிலோ 
      • நீட்டு மிளகாய் - 1/2 கிலோ 
      • குண்டு மிளகாய் - 1/2 கிலோ 
      • மஞ்சள் - 50 கிராம் 
      • கடுகு - 100 கிராம் 
      • மிளகு - 100 கிராம் 
      • சீரகம் -100 கிராம் 
      • வெந்தயம் - 25 கிராம் 
      • கடலை பருப்பு - 100 கிராம் 
      • சோயா பீன்ஸ் - 100 கிராம் 
      • புழுங்கல் அரிசி - 100 கிராம் 
    • கடலை பருப்பு, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், சோயா பீன்ஸ், புழுங்கல் அரிசி ஆகியவற்றை தனி தனியாக எண்ணெய் இல்லாமல் லேசாக வறுத்து பின் கொத்தமல்லி (தனியா), நீட்டு மிளகாய், குண்டு மிளகாய், மஞ்சள் இவற்ற்றோடு சேர்த்து மிசினில் அரைத்து கொள்ளவும்.
    • மிளகாய் தூள் அரைத்ததும் சூடு ஆறும் வரை பாத்திரத்தை மூடாமல் திறந்து வைக்கவும். ஆறியபின் முடிவைத்துத் தேவையான பொழுது பயன்படுத்தவும்.
    • நீட்டு மிளகாய், குண்டு மிளகாய் இரண்டும் கிடைக்காத பட்சத்தில் ஏதேனும் ஒரு வகை மிளகாயை ஒரு கிலோ பயன்படுத்தலாம்.