- வஞ்சிப்பவர்களிடம் சண்டை போடாதீர்கள் சாதித்துக்காட்டுங்கள்.
- வெறுப்பை வெறுப்பினால் அழிக்க முடியாது. வெறுப்பு வெறுப்பில்லாமல் இருப்பதனாலேயே அழியும்.
- பயந்த சுபாவம் உள்ளவர்கள் யாரை பார்த்தாலும் கோபப்படுவார்கள்.
- அன்பை குடும்பத்துக்கும் அறிவை செய்கின்ற தொழிலுக்கும் பயன்படுத்தக் கூடியவர்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பார்கள்.
- சும்மா இருப்பதும் ஒருவகை தோல்விதான்.
- ஒரு சிறந்த நிர்வாகியாக இருப்பது என்பது தொடர்ந்து கற்கும் அனுபவமே தவிர வேறில்லை.
- ஒருவர் செய்யும் வேலை அவருடைய புகைப்படம் போன்றது.
- உங்கள் பாராட்டு பொதுவாக இல்லாமல் தனிப்பட்டதாக இருக்கட்டும்.
- பிறந்தநாள் கொண்டாடுபவர்கள் அவர்களின் தாய்க்கும் சேர்த்து புது புடவை எடுத்துக்கொடுத்து கொண்டாட வேண்டும். ஏன் என்றால் தாயும் மறுபிறப்பு பிறப்பது போல் தான்.
- நான்கு விஷயங்களை இளமை என்று குறைத்து மதிப்பிடக் கூடாது வீரன், பாம்பு, நெருப்பு மற்றும் யோகி.
Sunday, 19 May 2013
பொன்மொழிகள் - 9
Saturday, 11 May 2013
உணவே மருந்து - 4
- பாகற்காயை கழுவி நறுக்கி தட்டில் மூடாமல் பிரிட்ஜில் வைத்து இரண்டு நாள் கழித்து சமைத்தால் கசப்பு இருக்காது.
- கேசரி, பாயசம் செய்யும் போது முந்திரிக்குப் பதில் பாதாம் போடலாம்.
- பச்சைப்பயிறை ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி மூடிவைத்தால் முளைத்துவிடும் . இதனை அப்படியே சாப்பிடலாம் . உடம்பு ஆரோக்கியமாக இருக்கும்.
- தயிர் வெங்காயம் செய்யும் போது வெள்ளை வெங்காயம் போட்டு செய்தால் நல்லது.
- அத்திக்காய், பச்சைப் பருப்பு போட்டு கூட்டு செய்தால் வயிற்றுப்புண்ணுக்கு நல்லது.
- முசு முசுங்கை கீரை தொகையல் செய்து சாப்பிட்டால் சளிக்கு நல்லது.
- காளான் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது.
- சுண்டைக்காய் காரக்குழம்பு வைத்து சாப்பிட்டால் சளி சரியாகும்.
- பால் சோறு சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.
- பொதுவாக எண்ணெயில் பொறித்த எதையும் சாப்பிடாமல் இருந்தால் மூட்டு வலி குணமாகும்.
Friday, 10 May 2013
பொன்மொழிகள் - 8
- மிக மிக நல்ல நாள் இன்று.
- மிகப் பெரிய வெகுமதி மன்னிப்பு.
- மிகவும் வேண்டாதது வெறுப்பு.
- மிகக் கொடிய நோய் பேராசை.
- மிகப் பெரிய தேவை சமயோஜிதபுத்தி.
- மிகவும் சுலபமானது குற்றம்காணல்.
- கிழ்த்தரமான விஷயம் பொறாமைப்படுதல்.
- நம்பக்கூடாதது வதந்திகளை.
- ஆபத்தை விளைவிப்பது அதிக பேச்சு.
- செய்யக் கூடாதது உபதேசம்.
- செய்ய வேண்டியது உதவி.
- விலக்க வேண்டியது விவாதம் .
- உயர்வுக்கு வழி உழைப்பு.
- நழுவவிடக்கூடாதது வாய்ப்புகள்.
Subscribe to:
Posts (Atom)