Sunday, 8 September 2013

மூக்கடலை சுண்டல்

தேவையான பொருட்கள்:
  1. வெள்ளை (அல்லது) கருப்பு மூக்கடலை - 1 கப்
  2. எண்ணெய் - 1 ஸ்பூன் 
  3. கடுகு - 1 ஸ்பூன் 
  4. சீரகம் - 1 ஸ்பூன் 
  5. காய்ந்த மிளகாய் - 2
  6. பெருங்காயம் - 1 சிட்டிகை 
  7. கறிவேப்பிலை - சிறிதளவு
  8. தேங்காய் - 1/2 மூடி
  9. உப்பு - தேவையான அளவு 

செய்முறை:
  1. மூக்கடலையை இரவில் தண்ணிரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
  2. பிறகு காலையில் தண்ணீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் தண்ணீர், உப்பு, மூக்கடலை போட்டு மிருதுவாக வேகவைத்துக் கொள்ளவும்.
  3. மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு பொரிந்ததும் வேகவைத்த மூக்கடலையை போட்டு நன்றாகக் கலந்துக்கொள்ளவும்.
  4. இப்பொழுது தேங்காய், சீரகம், மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பொடியாக அரைத்து சுண்டலில் போட்டு ஒரு நிமிடம் கலந்து இறக்கவும்.

 மூக்கடலை சுண்டல் தயார் !!!

கேசரி

தேவையான பொருட்கள்:
  1. ரவை - 1 கப் 
  2. சர்க்கரை - 1 கப் 
  3. தண்ணீர் - 4 கப் 
  4. கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை 
  5. ஏலக்காய் - 4
  6. நெய் - 50 (அல்லது) 100 கிராம் 
  7. முந்திரி, பாதாம், திராட்ச்சை - தேவையான அளவு 

செய்முறை:
  1. ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி ரவையை போட்டு லேசாக வறுத்து எடுக்கவும்.
  2. மற்றொரு பத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் சர்க்கரை, கேசரி பவுடர், ஏலக்காய் தூள் போடவும்.
  3. சர்க்கரை கரையும்வரை கொதிக்க விடவும்.
  4. இப்பொழுது ரவையை சிறிது சிறிதாக தூவி கிளறவும்.
  5. தண்ணிர்  வற்றியவுடன் இறக்கி வைக்கவும்.
  6. ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி, பாதாம், திராட்ச்சை போட்டு பொன் நிறம் ஆனதும் இந்த இறக்கி வைத்த கேசரியில் ஊற்றி கலந்து விடவும்.

கேசரி தயார் !!!


பின்குறிப்பு:
  • பாதாம், முந்திரியை சிறிய துண்டுகளாக்கிப் போடவும்.

உளுந்து வடை (மெது வடை)

தேவையான பொருட்கள்:
  1.  உளுந்து - 1/4 கிலோ 
  2. பச்சை அரிசி (அல்லது) புழுங்கல் அரிசி - 1 ஸ்பூன் 
  3. வெங்காயம் - 2
  4. பச்சை மிளகாய் - 2
  5. கறிவேப்பிலை - சிறிது 
  6. உப்பு - தேவையான அளவு 
  7. எண்ணெய் - 1/2 லிட்டர் 

செய்முறை:
  1. உளுந்தையும் அரிசியையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊறவைத்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
  2. பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை அரைத்த மாவில் போட்டு கலாந்துக்கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய்  ஊற்றி காய்ந்ததும் ஒரு எலுமிச்சை அளவு மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து வட்டமாக தட்டி நடுவில் ஒரு விரலால் ஓட்டை போடவும்.
  4. சூடான எண்ணெயில் இதனை போட்டு இரண்டு பக்கமும் திருப்பிவிடவும்.
  5. பொன்னிறமானதும் எடுத்துப் பரிமாறவும்.

உளுந்து வடை தயார் !!!