தேவையான பொருட்கள்:
- கொத்தமல்லி (தனியா) - 1 கிலோ
- நீட்டு மிளகாய் - 1/2 கிலோ
- குண்டு மிளகாய் - 1/2 கிலோ
- மஞ்சள் - 50 கிராம்
- கடுகு - 100 கிராம்
- மிளகு - 100 கிராம்
- சீரகம் -100 கிராம்
- வெந்தயம் - 25 கிராம்
- கடலை பருப்பு - 100 கிராம்
- சோயா பீன்ஸ் - 100 கிராம்
- புழுங்கல் அரிசி - 100 கிராம்
செய்முறை:
- கடலை பருப்பு, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், சோயா பீன்ஸ், புழுங்கல் அரிசி ஆகியவற்றை தனி தனியாக எண்ணெய் இல்லாமல் லேசாக வறுத்தெடுக்கவும்
- பின் வறுத்த இவற்றோடு கொத்தமல்லி (தனியா), நீட்டு மிளகாய், குண்டு மிளகாய், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து மிசினில் அரைத்து கொள்ளவும்.
- அரைத்ததும் சூடு ஆறும் வரை பாத்திரத்தை மூடாமல் திறந்து வைக்கவும். ஆறியபின் முடிவைத்துத் தேவையான பொழுது பயன்படுத்தவும்.
சாம்பார் மிளகாய் தூள் தயார் !!!
பின்குறிப்பு:
- நீட்டு மிளகாய், குண்டு மிளகாய் இரண்டும் கிடைக்காத பட்சத்தில் ஏதேனும் ஒரு வகை மிளகாயை ஒரு கிலோ பயன்படுத்தலாம்.
- இது அனைத்து விதமான சாம்பார், காரக்குழம்பு, வறுவல், பொறியல், மீன்குழம்பு, கறிக்குழம்பு போன்ற அனைத்து விதமான சமையலுக்கும் உபயோகப்படுத்தலாம்.
- இந்த மிளகாய் தூளை மூன்று மாதம் வரை வைத்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment