Friday, 15 May 2020

பொன்மொழிகள்-34

1.           யோசிப்பதனால் நிதானமாக யோசிக்க வேண்டும்.

2.            செயல்புடுவதனால் உறுதியோடு செயல்படவேண்டும்.
 
3.            விட்டுக்கொடுப்பதனால் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்க
                வேண்டும்.

4.             வாழ்க்கை என்பது சங்கீதம் - படுக்க.

5.             வாழ்க்கை என்பது பயணம் - நிறைவு செய்க.

6              வாழ்க்கை என்பது புதிர் - விடை காண்க.

7.             வழக்கை என்பது வாய்ப்பு - பயன்படுத்துக.

8.             வாழ்க்கை என்பது கனவு - நனவாக்குக.

9.             சூழ்நிலைக்கு ஏற்றவாறு அறிவாளி மனதை மாற்றிக்கொள்வான்.   
                அறிவில்லாதவன் ஒருபோதும் மனதை மாற்றிக்கொள்ளமாட்டான்

10.           வெறும் வாய்ச்சொள்ளைவிட செயலோடு சேர்ந்த குரலே உரக்க
                கேட்கப்படும்,

Thursday, 30 April 2020

உடல் எடை குறைய அவியல்

                         உடல் எடை குறைய  அவியல்


  1. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
  2. அவரைக்காய் - 5
  3. பீன்ஸ் - 5
  4. கொத்தவரங்காய் - 10
  5. புடலங்காய் - 10 துண்டு  
  6. பீர்க்கங்காய் - 10 துண்டு  
  7. சுரைக்காய் - 10 துண்டு  
  8. பூசணிக்காய் - 10 துண்டு  
  9. கேரட் - 1
  10. உருளைக்கிழங்கு - 1
  11. கருணைக்கிழங்கு - 10 துண்டு  
  12. முள்ளங்கி - 1
  13. நூக்கல் - 1
  14. சவ்சவ் - 1
  15. காலிஃளவர் -10 துண்டு   
  16. ப்ரோக்கோலி - 10 துண்டு
  17. வாழைக்காய் - 10 துண்டு 
  18. முருங்கைக்காய் - 1  
  19. கறிவேப்பிலை - தேவையானவை 
  20. கொத்தமல்லி - தேவையானவை 
  21. பச்சைமிளகாய் அல்லது காய்ந்தமிளகாய் - 2
  22. சீரகம் - 1/2 ஸ்பூன் 
  23. தேங்காய் - 1/4 மூடி 
  24. முந்திரி -5
  25. ஆயில் - 3 ஸ்பூன் 
  26. கடுகு - 1/2 ஸ்பூன் 
  27. தண்ணீர் - 200 ml 
  28. உப்பு - தேவையானவ
     அனைத்து காய்கறிகளையும் கழுவிய  பிறகு 1இன்ச் அளவிற்கு நறுக்கி குக்கரில் போட்டு 200 ml  தண்ணீர், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை போட்டு கலந்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

     பிறகு தேங்காய், முந்திரி, மிளகாய், சீரகம் அனைத்தையும் அரைத்து விழுதாக காய்களில் கலந்து மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும்.

     ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பில்லை, கொத்தமல்லி தழை போட்டு தாளித்து இறக்கவும்.

     அவியல் ரெடி.

குறிப்பு: வீட்டில் உள்ள காய்கறிகளை வைத்தே இந்த அவியலை செய்யலாம்.
இது எல்லா வயதினரும் சாப்பிடலாம். திணம் ஒரு கப் சாப்பிடலாம். உடல் எடை குறையும். மலச்சிக்கல் சரியாகும்.