Saturday, 27 April 2013

பொன்மொழிகள்

  1. மகத்தான பண்பு என்பது மற்றவர்களுக்கு நாம் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது.
  2. மலைக் குலைந்தாலும் நிலை குலையாமல் இருக்கவேண்டும்.
  3. படித்த படிப்பை பயன்படுத்தாதவன் தரிசு நிலத்திற்கு சமமானவன்.
  4. கடவுள் உனக்குள் இருக்கிறான்; உன்  முச்சு காற்றுதான் கடவுள்.
  5. ஒருவரின் வியர்வை காயும்முன் அவன் ஊதியத்தைக் கொடு.
  6. விதைக்கும் போது அழைகப்படுவேன் அறுவடையின் போது விலகப்படுவேன்.
  7. தாய்க்கு பாத்து பிள்ளை இருந்தாலும் தன கணவன் தான். மூத்தபிள்ளையாய் நினைத்தால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.
  8. கூடா நட்பு கேடாய் முடியும்.
  9. ரப்பர் மரத்திற்கு ரனங்கல் புதிதல்ல.
  10. வெற்றி ஒருவன் தான் நண்பன். 
  11. நீ பேசும் அளவை விட மூன்று மடங்கு கூர்ந்து கேள்.
  12. கௌரவம் நேர்மையான உழைப்பில் இருகிரது.
  13. பணக்காரன் வயிற்றை குறைக்க நடந்து ஓடுகிறான்; ஏழை வையிற்றை நிறப்ப நடந்து ஓடுகிறான்.
  14. நாம் மற்றவர்களை எப்படி நடத்துவோமோ நாமும் மற்றவர்களால் நடதப்படுவோம்.
  15. கண்ணால் பார்ப்பதையும் காதால் கேட்டதையும் ரகசியத்தை யார் ஒருவரிடமும் சொல்லாமல் இருகிறார்களோ அவர்களுக்கு அனைவராலும் மதிக்க வாழ்வர்.
  16. ஓய்வெடுப்பதும் உல்லாசமாக விடுமுறை எடுப்பதும் இதிலெல்லம்  ஆளபிரந்தவர்கள் நாட்டம் செலுத்தக்ககூடாது.
  17.  அரசரும் சரி தண்ணீரும் சரி ஒரே இடத்தில தேங்கக்கூடது; தண்ணிர் கெட்டுப்போய்விடும்; அரசரும் மதிப்பிழந்து போய்விடுவர்.
  18. ஏமற்றுபவனைவிட ஏமாந்தவன் தான் குற்றவாளி.
  19. கத்தியால் குத்துவது மட்டும் கொலையல்ல உணர்வுகளை குத்திக் கிழிப்பதும் கொலைதான்.
  20. மேய்வது வனமாக இருந்தாலும் சேர்வது இனமாக இருக்கவேண்டும்.
  21. நல்ல நல்ல செய்திகளை பரப்புவதன் மூலம் போலிகள் தானாகவே மறைந்து போகும்.
  22. வார்த்தை மாறலாம் வாக்கு மாறகூடாது.
  23. நல்லவர்கள் வாய்ச்சொல் துன்பங்களில் வழுக்கவிடாமல் உதவுகின்ற ஊன்றுகோல் போலிருக்கும்.
  24. ஒருவனை சிகரத்திற்கு உயர்த்துவதும் படுபாதாலதிற்கு தள்ளுவதும் அவன் பெற்ற அறிவுதான்.
  25. செய்யும் தொழிலில் அவரவர்க்கு வேறுபாடு இருக்கலாம்.  செலுத்தும் அன்பினில் வேறுபாடு இருக்கக்கூடது.
  26. அன்பை ஆதாரமாகக் கொண்டவர்களால் மட்டுமே. இன்பநிலையை அடைய முடியும்.
  27. அன்பு எங்கிருகிறதோ அங்கே தான் தர்மம் குடிகொண்டு இருக்கும்.
  28. கற்களால் கட்டுவது ஆலயம் என்றால் தசையும் எலும்பும் கொண்ட இந்த உடம்பை ஆலயம் போல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
  29. துன்பத்தில் வாழ்பவன் கூட மரணத்தை விரும்புவதில்லை.
  30. மென்மை, அன்பு, இரக்கம் போன்றவற்றில் ஒருவர் மிதமிஞ்சிப்போய்விட்டல் வீழ்ச்சியேற்படுத்தும் அளவுக்கு போக முடியும்.
  31. உங்கள் மொத்த மதிப்பு எவ்வளவு என்றோ, எவ்வளவு சம்பதிக்கிரிர்கள் என்றோ யாரிடமும் சொல்லதீர்கள் எப்போதுமே; சொன்னால் குறைவாக இருப்பதர்க்காக  சிலரும், அதிமாக இருப்பதர்க்கா பலரும் உங்களை வெறுக்கலாம்.
  32. பசுவுக்கு தழை தருவதும் பசியோடு வருபவர்க்கு ஒருபிடி சோறு தருவதும் இனிய சொற்கள் மூலம் பிறரை மகிழ்விப்பதும்கூட வழிபாட்டு முறைகள்தாம்.
  33. அடக்கம் உள்ளவர்கள் வானத்திலிருக்கும் தேவர்களுக்கு சமம் வாழ்கையில் உயர்ந்துக்கொண்டே போவார்கள்.
  34. விதைகளைச் சமைத்து உண்பவன் மூடன்.  அதை விதைத்து விளைச்சல் பயனை அனுபவிப்பவனே அறிவாளி.
  35. அன்பு, கருணை, கொடை, வாய்மை போன்ற நல்ல குணங்களெல்லாம் இல்லறத்தின் வழியேதான் வெளிப்படுத்த முடியும்.
  36. ஆபத்து நேரும் காலத்தில் தனது ஐந்து உறுப்புகளையும் ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு பாதுகாத்துக்கொள்கிறது ஆமை.  அதைப்போல மனிதன் தன ஐம் புலன்களையும் அடக்கி ஆள வேண்டும்.
  37. ஏக்கம், ஏமாற்றம், அதைரியம், அச்சம், கர்வம், கோபம் இவை எதுவுமே மாணவர்கள் அகராதியில் இருக்கக்கூடாது.
  38. சந்தேகம் கேட்டு, அதை நிவர்த்தி செய்துக்கொண்டு பாடம் பயில்கிற மாணவர்கள்தான் சாதிக்கிறார்கள்.
  39. உடல் எவ்வளவு அழகானதாக இருந்தாலும் அது அசுத்தங்கள் நிரம்பியதே.
  40. பல சமயங்களில் தீயோர் நல்லவர் போலவே தோன்றுவர்.  அதை ஆய்ந்தறிவது கடினம்.
  41. செல்வத்தைத் தமது என்று உரிமை கொண்டாடி அழைப்பவர்களெல்லாம் அதிகாலையில் எழுந்து நாள் முழுவதும் கடுமையாக உழைப்பவர்களே.
  42. பத்து ரூபாயை சேமித்தால் பத்து ரூபாய் சம்பாதித்ததாக அர்த்தம்.
  43. அறிவுக் கூர்மையால் சிந்தனைக்கும் கடும் உழைப்புக்கும் கிடைத்த ஊதியம் பணம்.
  44. பணம் வாழ்க்கையை மிருதுவாக ஓடவைக்கும் எண்ணெய் போன்றது.
  45. முயல்களைப் போல்  பணம் பணத்தைப் பிரசவிக்கும். இதைவிட பெரிய உண்மை  வேறொன்றுமில்லை.
  46. போலிகளின் புகழ் வெளிச்சம் பெறுவதும் இன்றைய நாளில் மிகுதியாகக் காணப் பெறுகிறது.
  47. முயற்சியைக் கொண்டு பயிற்சிகளை செய்துவரும் எந்த ஒரு சராசரி மாணவரும் கண்டிப்பாக நினைத்த பதவியைப் பெறலாம்.
  48. உங்களுக்கு வாழக் கொடுக்கப்பட்ட காலத்துக்குள் வாழந்தத்ற்கான அடையாளங்களையும் சாதனைகளையும் பூமியில் ஆழமாகப் பதியுங்கள்.
  49. ஆணித்தரமான நம்பிக்கையும் அதற்கேற்ற அளவிலான தீவிர முயற்சியும் இருந்தால் எதையும் ஜெயிக்கலாம்.
  50. படிக்க செல்லும் மாணவர்களின் எண்ணங்களை, விருப்பங்களை, செயல்பாடுகளை, நண்பர்கள் பழக்கவழக்கங்களை அடிக்கடி பார்த்துக் கொள்வது பெற்றோர்களது கடமை.
  51. வருவதும் போவதும் இன்பமும் துன்பமும்.
  52. வந்தால் போகாதது புகழும் பழியும்.
  53. போனால் வராதது மானமும் உயிரும்.
  54. தானாக வருவது இளமையும் மூப்பும்.
  55. நம்முடன் வருவது பாவமும் புண்ணியமும்.
  56. அடக்க முடியாதது ஆசையும் துக்கமும்.
  57. தவிர்க்க முடியாதது பசியும் தாகமும.
  58. நம்மால் பிரிக்க முடியாதது பந்தமும் பாசமும்.
  59. அழிவை தருவது பொறாமையும் கோபமும்.
  60. எல்லோருக்கும் சமமானது பிறப்பும் இறப்பும்.
  61. அழைப்பின்றி வேரொருவர் வீட்டிற்கு செல்பவர்கள் அது மரணத்திலும் மேலான துன்பத்தைத் தரும்.
  62. பணம் நல்லவர் கையில் இருந்தால் ஊர் நடுவில் நல்ல தண்ணிர் இருப்பதற்கு சமம்.
  63. பொருப்பு இருக்கிறவர்கள் பொருமையாக இருக்க வேண்டும்.
  64. கட்டுப்பாடு இல்லாமல் வாழ்கிறவன் கெளரவம் இல்லாமல் மடிந்து போவான்.
  65. கடன் இல்லாதவனே பணக்காரன. உடல் ஆரோக்கியம் உள்ளவனே செல்வந்தன்.
  66. வாக்குறுதி என்பது ஒருவகைக் கடன்தான்.
  67. எல்லோருடைய உபதேசங்களையும் காது கொடுத்துக் கேளுங்கள், ஒன்றை மட்டும் பின்பற்றுங்கள்.
  68. எல்லோருக்கும் மரியாதை செய்யுங்கள் ஆனால் ஒருவரை பின்பற்றுங்கள்.
  69. எல்லோரிடத்திலும் ஞானத்தை சேகரித்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு குருவினுடைய உபதேசத்தை மட்டும் சொந்தமாக்கிக்கொளுங்கள்.
  70. அனுபவம் அறிவின் முகம் பார்க்கும் கண்ணாடி.
  71. மிக மிக நல்ல நாள் இன்று.
  72. மிகப் பெரிய வெகுமதி மன்னிப்பு.
  73. மிகவும் வேண்டாதது வெறுப்பு.
  74. மிகக் கொடிய நோய் பேராசை.
  75. மிகப் பெரிய தேவை சமயோஜிதபுத்தி.
  76. மிகவும் சுலபமானது குற்றம்காணல்.
  77. கிழ்த்தரமான விஷயம் பொறாமைப்படுதல்.
  78. நம்பக்கூடாதது வதந்திகளை.
  79. ஆபத்தை விளைவிப்பது அதிக பேச்சு.
  80. செய்யக் கூடாதது உபதேசம்.
  81. செய்ய வேண்டியது உதவி.
  82. விலக்க வேண்டியது விவாதம் .
  83. உயர்வுக்கு வழி உழைப்பு.
  84. நழுவவிடக்கூடாதது வாய்ப்புகள்.
  85. வஞ்சிப்பவர்களிடம் சண்டை போடாதீர்கள் சாதித்துக்காட்டுங்கள்.
  86. வெறுப்பை வெறுப்பினால் அழிக்க முடியாது. வெறுப்பு வெறுப்பில்லாமல் இருப்பதனாலேயே அழியும்.
  87. பயந்த சுபாவம் உள்ளவர்கள் யாரை பார்த்தாலும் கோபப்படுவார்கள்.
  88. அன்பை குடும்பத்துக்கும் அறிவை செய்கின்ற தொழிலுக்கும் பயன்படுத்தக் கூடியவர்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பார்கள்.
  89. சும்மா இருப்பதும் ஒருவகை தோல்விதான்.
  90. ஒரு சிறந்த நிர்வாகியாக இருப்பது என்பது தொடர்ந்து கற்கும் அனுபவமே தவிர வேறில்லை.
  91. ஒருவர் செய்யும் வேலை அவருடைய புகைப்படம் போன்றது.
  92. உங்கள் பாராட்டு பொதுவாக இல்லாமல் தனிப்பட்டதாக இருக்கட்டும்.
  93. பிறந்தநாள் கொண்டாடுபவர்கள் அவர்களின் தாய்க்கும் சேர்த்து புது புடவை எடுத்துக்கொடுத்து கொண்டாட வேண்டும். ஏன் என்றால் தாயும் மறுபிறப்பு பிறப்பது போல் தான்.
  94. நான்கு விஷயங்களை இளமை என்று குறைத்து மதிப்பிடக் கூடாது வீரன், பாம்பு, நெருப்பு மற்றும் யோகி.
  95. ஒருவன் சொத்தை சூரையாடுகிறான் பதிலுக்கு அவன் இவன் சொத்தை சூறையாடுகிறான் இந்த சூறையாடல் சக்கரம் தொடரும் யாராவது இதை நிறுத்தினால்தான் முடிவுக்கு வரும்.
  96. நம்ம சமைத்த்ப் சமயலை ஒரு தடவை சுவைத்து பார்பது போல் நம் வாயால் சொல்கின்ற வார்த்தைகளை ஒரு முறை சொல்லி பார்த்து பிறகு நல்லது கெட்டது எது என்று யோசித்து பின் சொன்னால் பல பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
  97. நன்றி என்பது சரியான காலம் வரும் போது அதனை திருப்பி  செய்வது நம்மை ஒரு முழுமையான மனிதனாகக் காட்டும்.
  98. வெற்றி என்பது கடின உழைப்பும், பண்பும், தியாகமும் சுயக்கட்டுப்பாடும் அவசியமாகும்.
  99. எப்போது உங்களின் விருப்பமும் வேலையும் ஒன்றாக ஆகின்றதே அப்போது நீங்கள் சாதிப்பீர்கள்.
  100. உடல் என்பது நமது சொத்து நமது மூலதானம். உடல் நன்றாக இருந்தால் தான் மனம் நன்றாக இருக்கும்.
  101. பிறரால் உங்களைக் காப்பி அடிக்க முடியுமே தவிர உங்களின் தனித்தன்மையை என்றுமே தடுக்க முடியாது.
  102. புதுமையாய் யோசியுங்கள் மக்கள் மத்தியில் எப்போதுமே இந்த புதுமைக்கு வரவேற்பு அதிகம்.
  103. சரியான தூண்டுதல் மட்டும் கிடைத்து விட்டால் மலையளவு வேலை கூட நொடிப்பொழுதில் முடிந்துவிடும்.
  104. எந்த செயலுக்கும் வழிமுறை என்பது மிக முக்கியம்.
  105. அவசியம் இல்லாத விஷயங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குவதை அதிக முக்கியத்துவம் தருவதைத் தவிர்க்கவும்.
  106. சமயம், சந்தர்ப்பம் ஏற்றவாறு ஒத்துப் போகும் தன்மை உள்ளவர்களாலேயே மிகப்பெரிய வெற்றிகள் கிடைக்கும்.
  107. பிறரை பாராட்டுவதற்கு நமக்கு மனமிருந்தால் போதும் பணம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
  108. திறமையை வெளிப்படுத்துவது என்பது வருந்தத் தக்க ஒன்றோ வெட்கப்படத்தக்க ஒன்றோ கிடையாது. அந்த நேரம் தைரியம் மனோபலம் உங்களிடம் இருக்க வேண்டும்.
  109. ஒரு துறையில் கைதேர்ந்தவர்களாக இருப்பது பல சமயங்களில் உங்கள் வாழ்க்கையை உயர்த்தும்.
  110. அவசியம் ஏற்படும்போது அணுகுமுறை தெரியாமல் பலர் தோல்வியடைவதை நாம் கண்முன் பலமுறை பார்த்திருப்போம்.
  111. உங்கள் அறிவல்ல, உங்கள் மனநிலையே உங்களின் உயர்வை தீர்மானம் செய்கிறது.
  112. தன்னை, பிறரை, சமுதாயம் பற்றிய விழிப்புணர்வு இல்லாவிட்டால் நாம் சமுதாய ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு விடுவோம்.
  113. நமக்கு சௌகர்யமில்லாத, சங்கடப்படுத்தப் போகும் ஒரு செயலை சந்திப்பதே பிரச்சினை எனப்படுகிறது.
  114. அனைத்து இடங்களிலும் உறவுகளையும், நட்புகளையும் பார்க்காமல் உண்மைகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கலாம்.
  115. எப்போதுமே பிறருடைய இடத்தில் இருந்து யோசித்து பழகுங்கள் மிகச்சிறந்த வெற்றியாளராய் நீங்கள் வளம் வருவீர்கள்.
  116. நிதானம் இழந்து விட்டால் வாழ்வையே இழக்க வேண்டி வரும் ஆகையால் அந்த சமயம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
  117. வாய்ப்புகள் பெரிதோ சிறிதோ உங்களுக்குக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஏனென்றால் சிறிய புழு தன பெரிய மீனைப் பிடிக்க உதவுகிறது.
  118. சாதனையாளர்கள் எப்போதுமே பேசுவது குறைவு செய்வது அதிகம்.
  119. சிறந்த ஆளுமை கொண்டவர்கள் தான் சார்ந்த அத்தனை விஷயத்திலும் கவனம் எடுத்துக் கொள்கிறார்கள் இதில் தோற்றம் இரண்டாம் பட்சம் தான்.
  120. இணையம் உலகிலுள்ள தகவல்களை ஒரு நொடியில் நம் கண்முன்னே கொண்டு வருகிறது கணிப்பொறி அறிவு அவசியமானது. இன்று உலக மக்கள் அனைவரையும் இணைக்கும் ஒரு பாலமாக இருப்பது இணையம் தான்.
  121. வியாபாரத்தில் ஒருவரை லாபம் பெற விடாமல் செய்தால் தான் இன்னொருவருக்கு லாபம் கிடைக்கும்.
  122. நாமும் வெற்றியடைந்து பிறரையும் வெற்றி அடைய செய்வதன் மூலமே நாம் தொடர்ச்சியான வெற்றியை அனுபவிக்க முடியும்.
  123. ஆயிரம் மடங்கு வசதிகளுடனும் செல்வத்துடனும் வாழப்பிறந்தவன் என்ற எண்ணம் எந்த சமயத்திலும் இருக்க வேண்டும்.
  124. ஒரு தொழிலை ஆரம்பித்தாலும் முதலீடு செய்வதாக இருந்தாலும் எதிர்கால நோக்கில் அதை அலசி ஆராய்ந்த பிறகே முதலீடு செய்ய வேண்டும்.
  125. பொருமையானவர்களையும் சகிப்புத்தன்மை உடையவர்களையும் அனைவருமே விரும்புவார்கள்.
  126. இருப்பதிலேயே கடினமான ஒரு விஷயம் நம்பிக்கைக் குரியவராக இருந்து விட்டால் வெற்றிகள் நமமைத் தேடி வந்து குவிய ஆரம்பித்து விடும்.
  127. மனிதராகப் பிறந்த அனைவருமே வாழ்வில் சில நெறிமுறைகளைப் பின்பற்றியே வாழ்கிறார்கள் அவர்கள் பின்பற்றும் அந்த நெறிகளை வைத்தே அவர்கள் மதிப்பிடப்படுகிறார்கள்.
  128. நேரத்தை நாம் நிர்வாகிக்க முடியாது நம்மைத்தான் நாம் நிர்வகித்துக் கொள்ள வேண்டும் அதனால் நேரத்தின் மீது பழி போடாதீர்கள்.
  129. யோசித்துச் செயல்படுபவர்கள் அதிக தோல்விகளையோஅதிக ஏமாற்றங்களையோ சந்திப்பதில்லை.
  130. சாதனையாளர்கள் வரிசையில் வரவேண்டும் என்றல் செயல்முறை அழகோடு விளக்குவதன் மூலம் வெற்றி கிடைக்கும்.
  131. வெற்றியை நேசிப்பவர்களையே அது வந்தடைகிறது.
  132. ஆடம்பரம் செய்பவர்கள் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் எப்போதும் நீடித்து வாழ்வதில்லை.
  133. நம்மை முதலில் நாம் மதிக்க வேண்டும். பிறர் மதிக்குமாறு நடந்து கொள்ளவேண்டும்.
  134. சுயக்கட்டுப்பாடு தான் நம்மை விலங்குகளிடமிருந்து பிரித்து மனிதர்களாகக் காட்டுகின்றது.
  135. நம்முடைய பாதுகாப்பையே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால் வாழ்வில் எதையுமே நாம் சாதிக்க முடியாது.
  136. உணர்ச்சிகளைக் கையாளும் போதும் அதிகபட்ச மகிழ்ச்சியானாலும் அதிகபட்ச துக்கமானாலும் இயல்பாய் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
  137. நீங்கள் செய்யும் வேலைகளில் திட்டமிடல், ஒழுங்கு, முழுமையான அறிவு, முழுமையான ஈடுபாடு, சொன்ன நேரத்தில் சொன்ன தொகைக்குல்லாகவே முடித்தல் போன்றவை நீங்கள் அபாரமாகவளர வழி வகுக்கும்.
  138. அடுத்தவரின் மன உணர்வுகளை அவர்கள் சொல்லாமலே புரிந்து கொண்டு நடப்பவர்களைத் தான் இங்கிதம் தெரிந்தவர்கள் என்று கூறுவார்கள் அனைவருக்குமே பிடிக்கும்.
  139. பாராட்டும் போது அனைவரின் முன்னிலையிலும் பாராட்டுங்கள். குறைக்கூறும் போது தனியாக அழைத்துக் குறைகளை எடுத்துக் கூறுங்கள்.
  140. இரக்கம் இல்லாத அதிகாரம் என்றுமே நிலைப்பதில்லை.
  141. நம்முடைய உணர்ச்சிகளையும், நம்முடைய அந்தரங்க விழயங்களையும் அதிகம் வெளிப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  142. தகவல் தொழில்நுட்பம் துறையில் அறிவு நமக்கு இருக்குமானால் வெற்றியை அடிய நாம் இப்பொழுது உழைக்கும் உழைப்பில் பாதி உழைத்தாலே போதுமானது.
  143. கல்லாமை ஒழிந்தால் தான் இல்லாமை ஒழிந்து போகும்.
  144. வெறும் வாய்ச்சொல் மட்டும் இல்லாமல் அதை தனது செயலாகவும் செய்து தன்னை முன்னிறுத்திக் காட்ட வேண்டும்.
  145. நம் பெருமையை நாம் எல்லோரிடமும் சொல்லக்கூடாது. மற்றவர்கள் நம்மைப் பற்றி பெருமையாய் பேசும் அளவிற்கு சொல்லும் செயலும் இருக்க வேண்டும்.
  146. அதிகாரம் ஒரே இடத்தில் குவியக் கூடாது. அதை பரவலாக்கப்பட வேண்டும்.
  147. சொந்தக்காலில் நிற்கும் வல்லமை படைத்தவர்கள் வாழ்நாள் முழுவதும் மானத்தோடு நிம்மதியாக வாழ முடியும்.
  148. வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைய விரும்புவர்கள் வாக்குத் தவராமலும் நேரம் தவராமலும் இருந்தால் தோல்வி உங்கள் பக்கமே எட்டிப் பார்க்காது.
  149. தண்ணீர் குடிப்பதில் கூட கவனமாகக் குடித்தால் தான் புரையேறாது.
  150. எப்போதுமே செய்கின்ற ஒவ்வொரு செயலும் உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.
  151. கணவன் மனைவி தூங்குப் போகும் நேரத்திலும், சாப்பிடும் சமயத்திலும் எந்த குறைகளையும் பேசக்கூடாது.
  152. அளவுக்கு மிஞ்சிய தூக்கம், அவசியமில்லாத பயம், ஆத்திரம், சோம்பல் எந்தகாரிய்த்தையும் தாமதமாக செய்யும் நடைமுறை உங்கள் முன்னேற்றத்தின் தடைகள்.
  153. நமக்கு பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்து ஒரு வினாடியைக் கூட வீணாக்க வேண்டாம்.
  154. மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் முயற்ச்சியில் நம் துயரத்தை மறப்போம்.
  155. மற்றவர்களுக்கு நல்லவராக இருக்கும் நீங்கள் உங்களுக்கே நல்லவராவீர்கள்.
  156. உனக்குள் இருக்கும் திறமை வெளிப்படும் வகையில் நீ வளர வேண்டும்.
  157. லாபத்தினால் ஒருவன் பணக்காரன் ஆவதில்லை செமிப்பதினால் தான்.
  158. அடுத்தவர் இதயத்தை வெல்ல ஒரே வழிதான் உண்டு. நீங்கள் பேசும் வார்த்தைகள் உதட்டிலிருந்து அல்ல உங்களின் இதயத்திலிருந்து வரட்டும்.
  159. நாம் பயணம் செய்யும் லட்சியப் பாதையில் சோர்ந்து நின்று விட்டால் நாமே மற்றவர்களுக்குத் தடை கல்லாக மாறிவிடுவோம்.
  160. ஆபத்து நேரத்தில் உதவாத மகன், பசிக்கு உதவாத உணவு, தாகத்துக்கு உதவாத நீர், வறுமை அறியாத மனைவி, கோபம் தணியாத மனிதன், குரு வார்த்தை கேளாதவன், பாவத்தைத் தீர்க்காத தீர்த்தம் இவை யாவும் இருந்தும் பயனில்லை.
  161. பெண்கள் செந்தாமரையில் வீற்றிருக்கும் இலட்சுமியை போல எப்போதும் அழகாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும்.
  162. கணவனும், மனைவியும் சேர்ந்து உண்மையான கடமையை செய்வதில் தான் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்த முடியும்.
  163. வாழ்க்கையில் எதையும் சிறியதாக நினைக்கக் கூடாது. எந்த வேலையையும் தாழ்ந்ததாக நினைக்கக்கூடாது.
  164. அதிக அளவு படித்தவர்கள் உயர் பதவியில் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. உங்களுக்குத் தோன்றிய யுக்தியை பயன்படுத்தி சுய தொழில் செய்து முன்னேரலாம்.
  165. நேர்மையான உழைப்பு, உண்மையான பாசம், தேவையான நேரத்தில் மட்டும் உதவக்கூடிய மனம் உள்ளவர்களிடம் உறவுகளும் நண்பர்களும் கவ்ரவம் பார்க்காமல் எந்த சமயத்திலும் உதவியாய் இருப்பார்கள்.
  166. பிறர் துன்பங்களுக்கு வருத்தப் படுவது மனிதத் தன்மையாகும்.
  167. பிறர் துன்பங்களை நீக்குவது தெய்வத் தன்மையாகும்.
  168. நேரம் என்பது உங்களுடைய பணம் உங்களுடைய கணக்கில் இருப்பதாக வைத்துக்கொண்டு கவனமாக செலவிடுங்கள்.
  169. ஒழுக்கம் என்பது எப்பொழுதுமே வேண்டும். ஒவ்வொரு நாளையுமே முன் கூட்டியே திட்டமிடுங்கள். தள்ளிப் போடும் பழக்கத்தை அடியோடு விடுங்கள்.
  170. நல்லதை செய்கின்றவர்களை விட அந்த நல்லதை மறக்காமல் இருப்பவர்கள் தான் மிகவும் உயர்ந்தவர்கள்.
  171. மதுரை மீனாட்சி பெண் ஆட்சி. சிதம்பரம் நடராஜர் ஆண் ஆட்சி. திருச்சங்கோடு (அர்த்தநாரீஸ்வரர்) ஆண்-பெண் சேர்ந்து செய்யும் ஆட்சி தான் முழுமையடையும் சிறந்த வாழ்கை வாழ்வதற்கு அடையாலம்.
  172. நாம் யாரை மிகவும் நேசிக்கிறோமோ அவர்களால் தான் துன்பம் வருகிறது.
  173. நாம் வேலை செய்வது முக்கியம் அல்ல மற்றவர்களிடம் வேலை வாங்குவது முக்கியம் என்ற சாமர்த்தியத்தை வளர்த்துக் கொண்டால் எல்லா வேளையிலும் வெற்றி பெறலாம்.
  174. நமக்கு அளவுக்கு அதிகமாக செல்வம் வரும் போது தனக்கு தேவையானவை வைத்துக் கொண்டு மீதம் உள்ளதை சமுதாயத்தோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் (கல்வி, மருத்துவம், ஏழைகளுக்கு உதவலாம்).
  175. நீ விருப்பப்பட்டு சாபிட்டால் இரும்பு கூட கரும்பு போல இனிக்கும். விருப்பம் இல்லாமல் சாப்பிட்டால் கரும்பு கூட கடினமாக இருக்கும்.
  176. சுத்தமான இடத்தைப் பார்த்தால் உட்கார தோணும் அதுபோல் தூய்மையான எண்ணம் உள்ளவர்களிடம் இறைவன் வந்து அமர்வான்.
  177. கெட்டவர்கள் நல்லவர்களுக்கு சாபம் விட்டால் அது பலிக்காது. மாறாக அது வரமாக மாறிவிடும்.
  178. பாலும், சுண்ணாம்பும் பார்வைக்கு ஒன்றுதான் ஆனால் குணத்தால் வெவ்வேறு தன்மை உடையது.
  179. தாயையும், தந்தையையும் கருவிகளாகக் கொண்டு விதியின் விளையாட்டு அனுபவத்தைப் பெறுவதற்குப் பூமியில் பிறக்கிறது குழந்தை.
  180. திடமான மனம் உடையவன் தன்னை இகழ்வதையும் புகழ்வதையும் ஒன்றாகக் கொண்டவன். மானத்திலும் அவமானத்திலும் சம பாவனை உடையவன்.
  181.  மலர்களில் இருந்து மணத்தைக் காற்று எடுத்துச் செல்வது போல நாம் போகின்ற இடங்களிலும் குணங்களைக் கொண்டு செல்கிறோம்.
  182. தீய குணம் உள்ளவர்களிடம் காணப்படுவது டம்பம், இருமாப்பு, கர்வம், கடுமை தவறு செய்ய அஞ்சாதவர்கள்.
  183. தவம் என்பது சரீரத்தால் செய்யப்படுவது, வாக்கால் செய்யப்படுவது, ,மனதால் செய்யப்படுவது என மூன்று வகைப்படும்.
  184. தண்ணிரை கூட ஐஸ்கட்டியாக மாற்றி சல்லடையால் அல்லலாம். அது போல தோல்வியை கூட வெற்றியின் படியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
  185. அடிக்கடி தோல்வியுருபவர்கள் தமது பழக்கத்தை மாற்றிக் கொள்ளாதவர்கள்.
  186. வாழ்க்கையின் தொடக்கத்திலேயே பழக்கத்தை, குணத்தை செயல்முறைகளை வித்தியாசமான அணுகுமுறைகளை நல்லவிதமாக மாற்றிக்கொண்டால் மட்டுமே வெற்றியை அடைய முடியும்.
  187. வெட்கப்படுவது, மற்றவர்களிடம் மனதில் உள்ளதை சொல்லத் தயங்குவதும் அதிர்ஷ்டத்தைத் தடுக்கும்.
  188. வாழ்க்கையில் சாதிமத வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு எதையும் செய்யக்கூடாது. ஆக்கபூர்வமான திறமையை மட்டுமே பார்க்க வேண்டும்.
  189. வாடிக்கையாளர்கள் தலையில் தரம் இல்லாத எதையும் கட்ட முடியும் என்று நினைப்பவர்கள் தொழிலில், வர்த்தகத்தில், விற்பனையில் முன்னேற முடியாது.
  190. பலபேர்கள் போதிய அளவுக்கு கல்வி பெற முடியாமல் தொழில் மேதைகளாக, அரசியல் தலைவர்களாக விளங்கி இருக்கிறார்கள். படிக்கவில்லையே என்று வருந்தவேண்டாம்.
  191. எப்போதும் சிடுசிடு என்று இருப்பவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது பிரச்சனைகளை உண்டாக்கி விடுவார்கள்.
  192. பொது மக்களுடன் தொடர்பு கொள்பவர்கள் வாடிக்கையாளர்களை அடிக்கடி சந்திக்க வேண்டிய வேளைகளில் உள்ளவர்கள் எப்போதும் இனிமையாகவும், அமைதியாகவும், புன்சிரிப்புடன் காணப்பட வேண்டும்.
  193. பொதுவாக வெற்றி, தோல்வி என்பது மனித இனத்தின் விதியாகும்.
  194. மனித இனம் வெளிப்படுத்தும் அன்புதான் இந்த உலகத்தில் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் திரும்பத்திரும்பக் கொண்டு வந்து சேர்க்கும்.
  195. ஒவ்வொருவரும் தன் வயதிற்கேற்ப பலவிதமான புத்தகங்களை படிக்க வேண்டும். வாழ்க்கையில் புத்தகங்களை படிப்பதால் நாமே பல சமயம் பக்குவமாக முடிவுகளை எடுக்க உதவும்.
  196. மனிதவாழ்க்கையில் ஒவ்வொருவரும் திருமந்திரம் படித்தால் உறவுகளிடையே குழப்பம் இல்லாமல் பல விசயங்களை புரிந்துகொள்ளலாம்.
  197. என்னால் முடியாது என்ற எண்ணம் தான் நம் முதல் எதிரி.
  198. வாழ்க்கையில் நடைமுறையில் சில நல்ல மாறுதல்களை மாறுவதற்கு மறுப்பவர்கள் துன்பப்படுகிறார்கள்.
  199. முன்னேற்றம் என்பது முன்னோக்கிப் போய் கொண்டே இருப்பது. அது தேங்கிக் கிடப்பதில்லை, பூர்த்தி அடைவதில்லை, அதற்கு எல்லையும் கிடையாது. ஒதுங்கி நிற்பவர்கள் ஒதுக்கப்படுவார்கள்.
  200. தோல்வி என்பது ஒத்திப் போட்டுள்ள வெற்றி, வீழ்வதில் தவறில்லை. எழுந்திரிக்கும் எண்ணம் இல்லாமல் விழந்தே கிடப்பது தவறு.
  201. ஒருவன் பெற்றுள்ள உடற்பன்புகள், மனப்ன்புகள், சமுக அறநெறிகள், மனப்பான்மைகள் போன்ற எல்லா பான்புகலும் இணைந்த முழுமையான கலவை ஆளுமை எனப்பட்டும்.
  202. நாம் பேசுவதை விட நம் உடல் அதிகம் பேசுகிறது. உடல் எப்போதும் உண்மையையே பேசுகிறது என்பது தான் நிஜம்.
  203. நம்முடைய உணர்ச்சிகளை நம்முடைய உடல் மொழி மூலம் அடுத்தவர்கள் அதிகமாகப் புரிந்து கொள்ள இடம் தராமல் இருக்க வேண்டும்.
  204. நாம் அடுத்தவர்கள் உடல் மொழியை முடிந்தவரை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொண்டால் நம் வெற்றி தோல்வியை நாமே எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
  205. சமுதாயத்திற்காக உண்மையாக பாடுபட நினைப்பவர்கள் பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை சரித்திரம் படிக்க வேண்டும்.
  206. பிறர் விரும்புமாறு தான் சொல்லி பிறர் சொல்லுவதன் பயனை நாம் அறிந்து கொள்ளுதல் குற்றமற்ற உயர்ந்த கொள்கையாகும்.
  207. முறையோடு கிடைக்கும் எதுவும் அளவோடுதான் இருக்கும். ஆனால் மனநிறைவோடு இருக்கும் எனவே கிடைத்ததை வைத்து திறமையை வளர்த்துக் கொள்.
  208. தான் செய்த என்ன தன்மையுடையது என்று நினைத்து பின்னர் வருத்தப்பட தக்கவற்றை செய்யாதிருத்தல் வேண்டும். ஒருக்கால் அப்படி செய்து விட்டாலும் அத்தகையவற்றை மீண்டும் மீண்டும் செய்யாதிருத்தல் நன்று.
  209. ஒரு செயலைச் செய்யும் போது அச்செயலைப்பற்றி முதலில் உறுதியாக எண்ணுங்கள் அதனை தொடர்ந்து சிந்தியுங்கள் அந்த செயலைப் பற்றி சகல விவரங்களையும் சேகரியுங்கள். சாதக, பாதகங்களை உங்களுக்குள்ளேயே விவாதித்தால் அந்த வகையில் உங்கள் அறிவுத்திறன் நாளுக்கு நாள் பெருகும்.
  210. சிறு சகிப்புத் தன்மையை சிறு வயதில் பெறுபவன் நல்ல பொறுமைசாலியாக எதிர்காலத்தில் வருவான்.
  211. சிறந்த பேச்சு மற்றவர்களின் அன்பையும் ஆதரவையும் உதவியையும் பெறுவதற்கு உதவும் ஒரு சிறந்த கருவியாகும்.
  212. மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள பழகுங்கள் மனம் பக்குவம் இல்லாவிட்டால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது உங்களை மீறிச் சொற்கள் வெளிப்படும் இந்தச் சொற்கள் சில சமயம் உங்கள் நோக்கத்தை கெடுத்து விடுவதும் உண்டு.
  213. கற்றவனுக்கு எந்த ஒரு நாடும் எந்த ஒரு ஊரும் தன் நாடு தன் ஊரு ஆகும் மேலும் தாய் மொழியோடு பல மொழிகளை கற்று தெரிந்து கொண்டு பேச பழக வேண்டும் நம் முன்னேற்றத்திற்கு அது ஊன்றுகோள் ஆகும்.
  214. மேன்மையுற வேண்டும் என்று விரும்புவோர் நம்முடைய மதிப்பைக் கொடுப்பதற்கு காரணமான செயல்களை விடுதல் வேண்டும்.
  215. எப்போதும் குறை சொல்லும் மனப்பான்மையை தவிர்த்து நிறையினை பாராட்டும் போது உயர்வு வந்து நம்மைத் தழுவிக் கொள்ளும்.
  216. நீ முயற்சி எனும் விதைகளை விதைத்துக் கொண்டே இரு நிச்சயம் ஒரு நாள் ஏதாவது ஒரு விதையிலிருந்து வெற்றி எனும் கனி கிடைக்கும்.
  217. எப்பொழுதும் முயற்சிகள் தோல்வியடைவது குறித்து மனம் கலங்காதே முயற்சிக்காமல் சும்மா இருப்பதை விட முயற்சி செய்வதே மேலானது.
  218. நாம் வாழும் இடத்திலும் நாம் வணங்கும் இடத்திலும் மரங்கள் வளர்ப்போம் நலன்கள் பெறுவோம் என்ற உயர்ந்த எண்ணங்கள் உதிக்க வேண்டும்.
  219. ஆயிரம் கோவிலுக்கு செல்வதும் ஒரு முறை நமது குலதெய்வத்தை சென்று வணங்கி வழிபடுவதும் ஒன்று என நம் முன்னோர்கள் சொல்வார்கள்.
  220. திருக்குறளை நாளும் படித்தால் வாழ்நாள் முழுவதும் பண்போடு வாழ்வதற்க்கு உதவும்.
  221. திட்டமிட்ட வாழ்க்கை வாய்க்காலில் ஒழுங்குபடுத்தப்பட்ட நீரைப் போல் சரளமாகப் பாய்ந்துக் கொண்டிருக்கும்.
  222. நாம் நம்முடைய அனுமதியையே விருப்பத்தையோ கேட்காமல் இப்பிரபஞ்சத்தினுள் நுழையுமாறு செய்யப்பட்டவர்கள்.
  223. வாழ்க்கையை நாம் விரும்பியவாறு மாற்றியமைத்துக் கொள்ள முடியும் அதற்கு அடிப்படை திட்டமிடுதல்.
  224. திட்டமிட்டு செயலாற்றுபவர்களுக்கு வாழ்க்கை தனது கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறது.
  225. நம் வீட்டு விஷயங்களை நமக்கு உள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகளை அவர்களே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இப்படி இருந்தாலே வாழ்வு இனிமையாகிவிடும்.
  226. தேச பக்தர்கள் பலரை பற்றி தெரிந்து கொள்ள "தேச விடுதலையும் தியாகச் சுடர்களும்" என்ற புத்தகத்தை படித்துத் தெரிந்து கொள்ளலாம். இது மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
  227. தோப்புக்கர்ணத்துக்கும் தலையில் குட்டிக் கொள்வதற்கும் அக்குபிரசர் முறையில் சில மருத்துவ நலன்கள் உண்டு.
  228. நம் மனதை நேரத்துக்குத் தகுந்தாற்போல் வளைத்து எதிர்வரும் இன்னல்களைச் சமாளிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மனம் ஒடிந்து விபரீதமான முடிவுகளை தேடிச் செல்லக் கூடாது.
  229. காலம் உயிர் போன்றது என்பதே உண்மை. உயிர் பிரிந்தால் எப்படி நமது உடலில் மீண்டும் சேராதோ அது போன்று காலத்தை இழந்தால் மீண்டும் அதை பெற இயலாது.
  230. பொருட்களை வாங்குவதற்கு எது அளிக்கப்படுகிறதோ அது எல்லோராலும் பணம் எனப்படும்.
  231. நாம் அறிய முடியாத காரணத்தைத்தான் ஊழ்வினை என்றும் முன்வினைப்பயன் என்றும் சொல்லபடுகிறது.
  232. எங்கு நாம் இருக்கிறோமோ அங்கு நாம் ஒரு காரணத்திற்காக வைக்கப்பட்டிருக்கிறோம்.
  233. இந்த உலகம் உயிருள்ளவர்களுக்கே சொந்தம். உயிர் உள்ளவர்கள் இந்த உலகை வெல்ல ஆசை பட வேண்டும்.
  234. வாழ்க்கையை வெறுப்பவர்கள் இறந்து போனவர்களுக்கு சமம் எனவே வாழ்க்கையை நேசிக்க வேண்டும்.
  235. வாழ்க்கையில் முற்பகுதியில் வெற்றி பெற சுறுசுறுப்பும் ஊக்கமும் தேவை. வாழ்க்கையில் பிற்பகுதியில் வெற்றி பெற பொறுமையும் தன்னடக்கமும் தேவை.
  236. ஒரு செடி எவ்வாறு சிறுசிறு தளிர்களை தினசரி விட்டு நாளடைவில் பெரிய மரமாக வளர்கிறதோ அதுபோல சிறுசிறு முன்னேற்றங்களை அன்றாடம் ஏற்படுத்தி நாளடைவில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காணுங்கள்.
  237. உழைப்புதான் மனிதனுக்கு உயிர் போன்றது. உழைத்து வாழ்வில் உயரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதுவே சிறந்த மருந்து ஆகும். இறுதி மூச்சுவரை உழைப்புதான் உந்து சக்தியும் கூட.
  238. படகைச் செலுத்தும் திசைக்கு எதிர் திசையில் சிலர் துடுப்பைப் போட்டு எதிர் வினையை ஏற்படுத்துவார்கள். அது சரியான அணுகுமுறை அல்ல எண்ணமும் செயலும் நேர்வழியில் சென்றால் எதிர் பார்த்த இடத்தை அடைய முடியும்.
  239. மனிதனின் மனமும் பாராச்சூடும் ஒன்றுதான் எவ்வாறு ஏனெனில் இரண்டுமே திறந்தால் தான் வேலை செய்ய முடியும். எப்பொழுதும் திறந்த மனதுடன் இருங்கள்.
  240. வெற்றி என்பது தானாக வருவதில்லை. அது வியர்வைத் துளிகளின் விளைச்சல்.
  241. மனிதர்களின் ஆழ்மனதில் நிறைவேறாத ஆசைகளின் அடிப்படையில் தான் அவர்களது மனநிலை அமைகிறது.
  242. விரைப்பான ஆலமரம் புயலடித்தால் விழுந்து விடுகிறது. வளைகிற நாணல் புயலுக்குப் பின்னும் எழுந்து நிற்கிறது எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருக்கிறது.
  243. உங்களுடைய நிமிர்வில் கம்பீரம் இருக்கவேண்டும். கர்வம் இருக்கக் கூடாது.
  244. நீங்கள் வளைய நேரிட்டால் அதில் அர்த்தம் இருக்க வேண்டும். அச்சம் இருக்கக் கூடாது.
  245. நம்மை அறியாமல் தவறு செய்யும் பொழுது பிறர் அதை சுட்டிக்காட்டும் பொழுது அவர் மேல் கோபம் கொள்ளாது அதை ஒப்புக்கொண்டு நம்மை திருத்திக்கொள்ள வேண்டும்.
  246. இன்பமும் துன்பமும் நிலையானது அல்ல. இந்த நிலை மாறிவிடும் என்ற எண்ணம் எல்லா சூழ்நிலையிலும் மாறுதல் மட்டுமே நிலையானது.
  247. எந்த ஒரு செயலையும் உடனுக்குடன் செய்ய வேண்டும். நாளை செய்து கொள்ளலாம் என்று ஒத்திப் போடக்கூடாது. செய்ய வேண்டிய, செயல்களை செய்ய வேண்டிய நேரத்தில் செய்தால் தான் வாழ்வில் முன்னேறலாம்.
  248. தாய் தந்தையிடமும், மனைவி கணவனிடமும் பிள்ளைகளிடமும் கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் இருந்தால் தன்னைத்தானே தண்டித்துக் கொள்ளுவதற்கு சமம்.
  249. ஒரு கணவனும், மனைவியும் ஒற்றுமையோடு சேர்ந்து வாழ்வது தான் குடும்பம். சமுதாயத்திற்கு அது வலிமை கொடுக்கும் ஒற்றுமை என்றால் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஆகும்.
  250. கணவனும் மனைவியும் விட்டுக் கொடுப்பதும்,வீம்புகள் இல்லாமல் இருப்பதும் அவர்களது குழந்தைகள் மேன்மையாக வளர வழிவகை செய்யும்.
  251. .நம்மைவிட அறிவில் சிறந்தவர்கள் ஆழ்ந்த சிந்தனை உடையவர்கள் ஆகியவர்களிடத்தில் பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும்.
  252. ஒருவனுக்கு ஏற்படும் ஆசையானது முதலில் தைரியத்தைக் கொடுத்து பின் தைரியத்தை அழிக்கிறது.
  253. பெரும்பாலும் சேமிப்பை தபால் நிலையங்கள் வங்கிகளில் மட்டுமே செய்யலாம். இதில் வட்டி குறைவாக இருந்தாலும் அசலுக்கு மோசமில்லை.
  254. பிறர் வாங்கிக் கொடுக்கிறார்கள் நமக்கு செலவில்லை என குடிக்க ஆரம்பிப்பவன் வாழ்நாளில் திருத்தமுடியாது அவனுடைய குடும்பம் வீணாகிவிடும்.
  255. திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது பெண்ணின் பிறந்த சாதகத்தை வைத்துதான் பொருத்தம் பார்க்க வேண்டுமே தவிற ருதுஜாதகத்தைக் கொண்டு பொருத்தம் பார்க்கக் கூடாது. சரியான நேரத்தை பார்க்க முடியாது.
  256. தீய மனிதர்களுடன் நல்ல மனிதர்கள் நட்பு கொண்டால் அந்த நல்ல மனிதர்களும் தீயவர்களாகிவிடுவார்கள். எனவே நண்பற்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் அவசியம்.
  257. ஒருவன் எதிலும் குறை கண்டால் அவன் வாழ்வில் நிறைவே காணமுடியாது.
  258. வின் பேச்சினாலும் வம்பு பேசிக் கொண்டிருந்தாலும் சச்சரவிட்டுக் கொண்டிருப்பதாலும் நம் சக்தி வீணாகிறது.
  259. பிறர் கேலி பேசுவதைக் கேட்டு ஒரு போதும் அச்சப்படக் கூடாது ஆனால் நீ செல்லும் வழி நேர் வழியாக இருக்க வேண்டும்.
  260. கோயில்களில் பலிபீடம், கொடிமரம் ஆகியவைகளுக்கு அருகே மட்டும் நமஸ்காரம் செய்ய வேண்டும். மற்ற இடங்களில் நமஸ்காரம் செய்யக் கூடாது.
  261. பொதுவாக கிழக்கு மேற்கு நோக்கிய கோயில்களில் வடக்கு பக்கம் பார்த்து நமஸ்காரம் செய்ய வேண்டும். வடக்கு தெற்கு நோக்கிய கோயில்களில் கிழக்கு பக்கம் பார்த்து நமஸ்காரம் செய்ய வேண்டும்.
  262. படிக்கும் பொழுது முதுகுத் தண்டு வளையக் கூடாது. நேராக நிமிர்ந்து உட்கார்ந்து படிக்க வேண்டும்.
  263. மறதியின் காரணம் எதையும் மேம்போக்காக செய்வதே பிறர் சொல்வதை சரியாகக் கேட்டுக் கொல்லாமை அலட்சியம் ஆகியவை மறதிக்குக் காரணங்கள்.
  264. குளிக்கும் பொழுது புண்ணிய நதிகளான கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, சிந்து, காவேரி, நர்மத, வைகை, தாமிரபரணி ஆகியவற்றை மனதில் நினைத்துக் கொண்டு குளிக்கலாம்.
  265. உறவினர்களையும்  நண்பர்களையும் பகைத்துக்கொள்ளக் கூடாது. பகை இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் மன உளைச்சல்கள் தோன்றாது.
  266. எவ்வளவு செல்வம் இருந்தாலும் உடலுக்கு நோய் வந்துவிட்டால் அந்த செல்வத்தை அனுபவிக்க இயலாது. அதனால் நல்ல காரியத்தை செய்வதன் மூலம் நோயை கட்டுப்படுத்தலாம்.
  267. மனம், வாக்கு, உடம்பு, பணம் என்ற நான்கினாலும் நாம் பாவம் செய்கிறோம். ஆசைப்பட்டு செய்யக் கூடாத ஒன்றைச் செய்வதால் பாவம் உண்டாகிறது. எனவே இதைத் தவிர்த்து இந்த நான்கினாலும் நல்ல காரியங்கள் செய்ய வேண்டும்.
  268. பிறர் வீட்டிலோ திருமணத்திலோ சாப்பிட்டு விட்டு அந்த உணவை இகழ்ந்து பேசக் கூடாது. எந்த விதமான விழாவாக இருந்தாலும் அழைப்பு வந்தால் கண்டிப்பாக செல்ல வேண்டும்.
  269. திருமணத்திற்கு செல்பவர்கள் தங்களுடைய வசதிக்கு ஏற்ப பணம் அல்லது தங்கக்காசு பரிசாகக் கொடுத்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
  270. ஒவ்வொரு மனிதனும் தான் படும் துன்பத்திற்கு தானே பொறுப்பாளி அவனுடைய எண்ணமும் செயலுமே அத்துன்பத்தினைக் கொடுக்கிறது.
  271. எதற்கெடுத்தாலும் நாம் பிறருக்கு அறிவுரை கூறக் கூடாது. அவர்கள் ஆலோசனை கேட்டால் தீர யோசித்து யாருக்கும் பாதகமில்லாமல் ஆலோசனை கூற வேண்டும்.
  272. தினமும் வீட்டை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆங்காங்கே புத்தகங்கள், பத்திரங்கள், துணிகள் இறைத்து வைத்தல் கூடாது. எதிலும் ஒரு ஒழுக்கம் வேண்டும்.
  273. மனதில் அச்ச உணர்வுகள் தோன்றக் கூடாது. அச்ச உணர்வுகள் உடலைக் கெடுப்பதும் இல்லாமல் அடுத்தடுத்து செய்ய வேண்டிய செயல்களையும் கெடுத்துவிடும்.
  274. அதிக உணவு சாப்பிடாமல் வயிற்றை மென்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். தலையைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். கால்களை வெப்பமாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் நோய் நொடிகள் நெருங்காது நீண்ட ஆயுள் கிடைக்கும்.
  275. யோசிப்பதானால் நிதானமாக யோசிக்க வேண்டும்.
  276. செயல்படுவதானால் உறுதியோடு செயல்பட வேண்டும்.
  277. விட்டுக் கொடுப்பதானால் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுக்க வேண்டும்.
  278. வாழ்க்கை என்பது சங்கீதம் - பாடுக.
  279. வாழ்க்கை என்பது பயணம் - நிறைவு செய்க.
  280. வாழ்க்கை என்பது புதிர் - விடைகாண்க.
  281. வாழ்க்கை என்பது வாய்ப்பு - பயன்படுத்துக.
  282. வாழ்க்கை என்பது கனவு - நினைவாக்குக.
  283. சூழ்நிலைக்கேற்றவாறு அறிவாளி மனதை மாற்றிக் கொள்வான். அறிவில்லாதவன் ஒருபோதும் மனதை மாற்றிக் கொள்ளமாட்டான்.
  284. வெறும் வாய்ச் சொல்லை விட செயலோடு சேர்ந்த குரலே உரக்க கேட்கப்படும்.
  285. துன்பமே போதிக்கும் நல்லாசான்.
  286. துன்பமே ஒழுக்கத்தின் உரைகல்.
  287. துன்பம் ஒருவனை செல்வனாக்காவிடாலும் அறிவாளியாக்கும்.
  288. தன்னை அடக்கிஆலத் தெரிந்தவன் மற்றவரை எளிதில் கட்டுப்படுத்த முடியும்.
  289. பாதுகாப்பான இடத்தை அடையும் வரை பகைவனை நட்பாக்கிக் கொள்ள வேண்டும்.
  290. அன்பால் பிறரை உருக வைக்கும் குணமே நற்குணம்.
  291. வீரமும் விடாமுயற்சியும் அனைத்தையும் வெள்ளும்.
  292. கரை சேரும் மட்டும் புகழ்ந்து கொண்டிரு.
  293. செயல்கள் தான் நிலைக்கும், வார்த்தைகள் மறையும்.
  294. சோம்பேறிகளுக்கு எல்லா நாட்களும் விடுமுறையே.
  295. அனுபவமே அருமையான ஆசான்.
  296. எலும்பு வலைய பணி செய்தால் பல்லுடைய தின்னலாம்.
  297. நம்பிக்கையில்லாத இடத்தில் அன்பு இருக்காது.
  298. தாமதித்துக் கொடுப்பதும் இல்லையென மறுப்பதும் ஒன்றுதான்.
  299. அளவுக்கு மீறிய சுதந்திரம் அனைவரையும் கெடுக்கும்.
  300. நல்ல பக்கத்து வீட்டுக்காரன் விலைமதிப்பற்றவன்.
  301. தைரியசாலி மேடையேறுவான் .
  302. வெறும் பாராட்டு வயிற்றை நிரப்பாது.
  303. நீ போதிப்பதை நீயே பயிற்சி செய்.
  304. தோற்பதால் கற்கிறோம்.
  305. சாதிக்க முடியாதவை என்பது பெரும்பாலும் முயற்சி செய்யாதவையாகவே இருக்கும்.
  306. நன்மை செய்வதற்குத் தயங்கக் கூடாது.
  307. கர்வத்திற்கு இடம் தரக் கூடாது.
  308. தீய எண்ணத்தின் மூலமோ கொடுஞ்சொற்கள் மூலமோ பிறருக்கு தீங்கு இழைக்கக் கூடாது.
  309. ஒருவன் துஷ்டன் என்பது நன்றாக தெரியுமானால் அவனுடன் பழகக் கூடாது.
  310. பிறருடைய பொருளை அபகரிக்கக் கூடாது.
  311. பிறரைத் திருப்தி செய்வதற்காகக் கூட பொய் சொல்லக் கூடாது.
  312. வீண் சண்டைக்குப் போகக் கூடாது.
  313. பிறருடைய குறைகளை மிகைபடுத்தக் கூடாது.
  314. நம்மை இந்த உலகம் பாராட்ட வில்லையே என்று துக்கப்படக் கூடாது.
  315. நீ சிறந்தவனாய் திகழ விரும்பினால் தன்னடக்கமும், பணிவும் கொண்டவனாய் இரு.
  316. மேன்மையான எண்ணங்களுடன் இருப்பவர்கள் எப்போதும் தனித்திருப்பார்கள்.
  317. அடுத்தவருக்கு அறிவுரை கூருவதை விட கேட்பதே நல்லது.
  318. வழி தவறுவதை விட வழி கேட்பது மேல்.
  319. தன்னை காப்பாற்றிக் கொள்ளும் சக்தி இல்லை என்றால் மற்றவர்களால் அவர்களுக்குத் தீங்கு தான் நடக்கும். நம்மை துன்பப் படுத்துபவர்களிடம் பணிந்து போகாமல் துணிந்து நிற்கவேண்டும்.
  320. குறுகிய வாழ்க்கை முறையில் காலத்தை வீண் ஆக்காதே.
  321. ஒரு புன்சிரிப்பும் இதயத் தூய்மையும் உண்மையான அழகு.
  322. ஒருவனுக்கு நல்ல புத்தகமே என்றும் மாறாத நண்பனுக்கு சமம்.
  323. முன் எச்சரிக்கையோடு செயல்படுபவர்கள் என்றும் துன்பத்தில் சிக்க மாட்டார்கள்.
  324. பெண் என்பது எல்லா உயிர்களுக்கும் ஆரம்பமாக இருக்கிறது. பெண் இனத்திலிருந்து தான் பெரும்பகுதி பூமியில் தோற்றம் அடைகிறது.
  325. புதிய உயிரை பாதுகாப்புடன் இந்த பூமியில் வாழச் செய்வது பெண் இனம் என்பதை மறுப்பதற்கு இல்லை.
  326. கரு பிடித்து கருவுக்குள் பாதுகாத்து அதன் வளர்ச்சிக்கு ஏதுவாக செயல் பட்டு குழந்தை ஈன்று அதற்கு தேவையான உணவை தந்து வளர்ப்பாள் தாய் என்ற பெண்.
  327. பசி ஏற்படாமல் உணவு உண்பதால் நோய் ஏற்படுகிறது இதற்கு மருந்தே உணவு பசித்த பிறகு உண்பதே சிறந்த முறையாகும்.
  328. சிந்தனை என்பது மனதில் எழும் எண்ணங்களின் கூட்டத்தை ஒழுங்கு படுத்தி தனக்குள் கேள்வியும் பதிலும் எப்படி செய்யல்லாம் என்ற கேள்வியும். இப்படி செய்யல்லாம் என்ற பதிலும் பெருவதற்கான எண்ணங்களின் தொகுப்பே சிந்தனை.
  329. காலத்திற்கும் வசதிக்கும் ஏற்ப தண்ணீர் பாத்திரங்கள் மாறுபடுகின்றன.
  330. சந்தோசம் நாம் மற்றவர்களுக்கு கொடுத்தால்தான் நமக்கு திரும்ப கிடைக்கும்.
  331. சொல்வதை விட செய்து காட்டவேண்டும். கடமையை செய்வதில் மனநிறைவு பெறுவதே உண்மையான வழிபாடாகும்.

No comments:

Post a Comment