Friday, 3 May 2013

உணவே மருந்து

  1. பால் குடித்தால் உடம்பில் உள்ள அனைத்து வித வலியும் குறையும்.
  2. எந்த வித காய்கறி வேகவைதாலும் ஒரு கரண்டி பால் ஊற்றி வேகவைத்தால் மிருதுவாக வெந்துவிடும் .
  3. பருப்பு வேகவைக்கும் போது நான்கு பல் பூண்டு, பெருங்காயம், மஞ்சள் பொடி, ஓமப்பொடி, சுக்குப்பொடி, வெந்தயம், சிறிது எண்ணெய் ஆகியவற்றை பருப்புடன் போட்டு வேகவைத்து சாம்பார் செய்யவும் .
  4. காரக்குழம்பு, மீன் குழம்பு செய்யும் போது வெள்ளம் சிறிது போட்டு செய்யவும் .
  5. குழம்பு சிறிது கட்டியாக இருக்க வேண்டும் என்றால் அரிசி மாவு அல்லது சோள மாவை கரைத்து ஊற்றவும் .
  6. நெல்லிக்காய் மென்று சாப்பிட்டால் பல் வலி குணமாகும், ஜீரணசக்தி அதிகரிக்கும் .
  7. இரவில் 7 மணிக்குள் சாப்பிட்டால் உடல் எடை குறையும், தொப்பை குறையும் .
  8. காலையில் எழுந்தஉடன் அரை லிட்டர் தண்ணிர் குடித்தால் உடம்புக்கு நல்லது; சுறு சுறுப்பாக இருக்கும் .
  9. பப்பாலி கொய்யாபழம் எல்லா நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம் .
  10. அரைக்கிரை, அத்திக்காய், பூசணிக்காய், முல்லங்கி, கேரட், பீட்ரூட், பாகற்க்காய், முருங்கைக்கீரை உடம்புக்கு நல்லது .
  11. அருகம்புல்லை கத்திரிக்கோலால் நருக்கி மிக்சியில் அரைத்து தண்ணீரில் கொதிக்கவைத்துத் துணியால் வடிகட்டி ஆரவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடம்பிற்கு நல்லது .
  12. பால் தினமும் இரவு ஒரு பெரிய டம்பளர் குடித்தால் மலச்சிக்கல் ஏற்படாது .
  13. நெல்லிக்காய் ஜுஸ் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நாள்முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும் .
  14. வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி ஏற்பட்டால் சவ்வரிசி 100 கிராம் அல்லது ஒரு கைப்பிடி வேகவைத்துத் தேவையான உப்பு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் குணம் ஆகும் .
  15. வயிற்றை சுத்தம் செய்ய அரை லிட்டர் பால் குடித்தால் பேதி ஆகும் .
  16. வயிற்றுவலி, உடம்பு சூடு பிடித்தால் வயிற்றில் தொப்புள் பகுதியில் விளக்கெண்ணெய் ஒரு சொட்டு தடவினால் குணம் ஆகும் .
  17. புளிக்கொழம்பு செய்து இறக்கும் பொழுது நல்லெண்ணெய் 100 கிராம், மிளகுதூள் 1 ஸ்பூன் போட்டு கலந்து ஒரு கொதி வந்ததும் இரக்கவும் .
  18. பாதம் சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும் .
  19. பொதுவாக கொழம்பு, பொரியல் செய்யும்போது ஒரு பிடி கொத்தமல்லித் தழையைப்போட்டு இரக்கவும் .
  20. பச்சைவேர்க்கடலை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்ப்படும் .
  21. காரக்குழம்பு, மீன்குழம்பு செய்யும்போது ஒரு கட்டி பூண்டு உரிச்சிப்போட்டு செய்யலாம் .
  22. மிகவும் கலைப்பாக இருந்தால் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடித்தால் சுறுசுறுப்பாக இருக்கும் .
  23. சாம்பார், கூட்டு செய்து இரக்கும் போது ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கலந்து இரக்கவும் .
  24. தூதுவளை கீரை துவையல் வைத்து சாப்பிட்டால் காது வலி, காது அடைப்பு குணம் ஆகும் .
  25. கரி குழம்பு, குருமா குழம்பு செய்து இறக்கும் போது புதினா பொடி செய்து போடவும் .
  26. எந்த விதமான சமையல் செய்தாலும் ஒரு சிட்டிகை ஓமம் பொடி போட்டு கலந்து இரக்கவும் .
  27. எந்த வித ஜூஸ் செய்தாலும் கொதித்த தண்ணிரை ஆரவைத்து செய்யவும் . சளி பிடிக்காது .
  28. சாம்பார் செய்யும் போது புளிக்கு பதில் எலுமிச்சை சாறு ஊற்றி இரக்கவும்.
  29. பொரியல் கூட்டு வகைகளுக்கு தேங்காய், சீரகம் ஒன்றாக போட்டு கரகரப்பாக அரைத்து போட்டு கலந்து இரக்கவும் .
  30. சாம்பார் செய்யும் போது துவரம் பருப்புக்கு பதில் பச்சைபருப்பு போட்டு செய்யலாம் .
  31. பாகற்காயை கழுவி நறுக்கி தட்டில் மூடாமல் பிரிட்ஜில் வைத்து இரண்டு நாள் கழித்து சமைத்தால் கசப்பு இருக்காது.
  32. கேசரி, பாயசம் செய்யும் போது முந்திரிக்குப் பதில் பாதாம் போடலாம்.
  33. பச்சைப்பயிறை  ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி மூடிவைத்தால் முளைத்துவிடும் . இதனை அப்படியே சாப்பிடலாம் . உடம்பு ஆரோக்கியமாக இருக்கும்.
  34. தயிர் வெங்காயம் செய்யும் போது வெள்ளை வெங்காயம் போட்டு செய்தால் நல்லது.
  35. அத்திக்காய், பச்சைப் பருப்பு போட்டு கூட்டு செய்தால் வயிற்றுப்புண்ணுக்கு நல்லது.
  36. முசு முசுங்கை கீரை தொகையல் செய்து சாப்பிட்டால் சளிக்கு நல்லது.
  37. காளான் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது.
  38. சுண்டைக்காய் காரக்குழம்பு வைத்து சாப்பிட்டால் சளி சரியாகும். 
  39. பால் சோறு சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.
  40. பொதுவாக எண்ணெயில் பொறித்த எதையும் சாப்பிடாமல் இருந்தால் மூட்டு வலி குணமாகும்.
  41. வயிற்ருப்புண், ஒவ்வாமை உள்ளவர்கள் பலகாரம் செய்த எண்ணெயை திரும்பத்திரும்ப பயன்படுத்துவதால் உடம்பில் நோய் அதிகரிக்கும், உடம்புக்கு ஆகாது.
  42. வெய்யில் காலத்தில் இளநீர், தர்பூசணி வெள்ளரிக்காய், நொங்கு, எலுமிச்சம் பழம், நெல்லிக்காய், பச்சை வாழைப்பழம் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது.
  43. பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் நகம் சொத்தை உள்ளவர்கள் இரவு தூங்கும்போது தினமும் எண்ணெய் தடவி வந்தால் சரி ஆகும்.
  44. இரவில் தூங்கும் போது ஒரு சொட்டு வேப்பெண்ணை உடம்பில் தடவினால் கொசு கடிக்காது.
  45. ஆலிவ் எண்ணெயை தூங்கும் போது உதட்டில் தடவினால், உதடு மிருதுவாக இருக்கும்.
  46. வாய் நாற்றம் உள்ளவர்கள் தினமும் நெல்லிக்காய் சாபிட்டால் சரி ஆகும்.
  47. அஜீர்ணக் கோளாறு உள்ளவர்கள் இடது பக்கம் உள்ள பற்களால்  மென்று சாப்பிட்டால் சரி ஆகும்.
  48. பற்களால் மென்று சாப்பிட முடியாதவர்கள் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் மட்டும் இடது பக்கமாக திரும்பி படுத்தால் அஜீரணக் கோளாறு சரி ஆகும்.
  49. கால் விக்கம் உள்ளவர்கள் பார்லி அரிசியை லேசாக வறுத்து பொடி செய்து ஒரு கைப்பிடி அளவு வேகவைத்து பாயசம் போல் குடித்தால் சரி ஆகும்.
  50. பாதத்தில் வலி உள்ளவர்கள் வலி இருந்தால் மட்டும் ஒரு சிறிய ஸ்பூன் அளவு கசகசாவை இரவில் சாப்பிட்டால் கட்டுப்படும்.
  51. குளிர்ச்சியான காய்களுடன் (முள்ளங்கி) சமஅளவு முருங்கைக்காய் சேர்த்து சமைத்தால் சளி பிடிக்காது.

No comments:

Post a Comment