தேவையான பொருட்கள்:
- பச்சை அரிசி மாவு - 1 கப்
- தேங்காய் - 1 கப்
- வெல்லம் - 1/2 கப்
- சர்க்கரை - 1/2 கப்
- ஏலக்காய் - 4
- தண்ணீர் - 1 கப்
- பால் - 1 கரண்டி
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி, வெல்லம், சர்க்கரை, தேங்காய், ஏலக்காய் போட்டு கொதிக்க வைக்கவும்.
- இது ஆறியபின் இதில் பால், அரிசி மாவு ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து பிசைந்துக் கொள்ளவும்.
- இவற்றை ஒரு கைப்பிடி அளுவுக்கு நன்றாக பிடித்து வைத்துக்கொள்ளவும்.
- இவற்றை ஒரு இட்லி பாத்திரத்தில் ஐந்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
கொழுக்கட்டை தயார் !!!
பின்குறிப்பு:
- பச்சை அரிசியை ஒரு மணிநேரம் ஊர வைத்து பின் தண்ணிரை வடித்து ஒரு வெள்ளை துணியில் பரப்பி நிழலில் காய வைத்து அரைத்துக்கொள்ளவும்.
- கொழுக்கட்டையை பிடிப்பதற்கு தண்ணிர் பற்றவில்லை என்றால் காச்சிய பாலை ஊற்றி கலந்து பிசைந்துக்கொள்ளவும்.
- தண்ணிர் அதிகமாகி விட்டால் அரிசி மாவு தேவையான அளவு போட்டு பிசைந்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment