Saturday, 14 June 2025

வாயு தொல்லை மற்றும் வயிற்று புண் குணமாக நெய் பூண்டு




வாயு தொல்லை மற்றும் வயிற்று  புண் குணமாக நெய்  பூண்டு 

தேவையான பொருட்கள் 

        1.    பூண்டு - 10 பள்ளு
        2.    நெய் - 1 டேபிள் ஸ்பூன் 
        3.    உப்பு - 1 சிட்டிகை  
        4.     மிளகுத்தூள் - 1 சிட்டிகை

செய்முறை 
  1. வாணலில்   ஒரு  டேபிள் ஸ்பூன்  நெய் விட்டு அதில் பூண்டு,  உப்பு தூள் ஒரு சிட்டிகை, மிளகுத்தூள் ஒரு சிட்டிகை ஒன்றாக போட்டு கலந்து விடவும். 
  2. அடுப்பை சிம்மியில் வைத்து  லைட் கோல்டன் கலர் வந்தவுடன் இறக்கி வாணலிலேயே ஆறவிடவும்.
  3. இந்த பூண்டை தினம் சாப்பிட வாயு தொல்லை மற்றும் வயிற்று புண் குணமாகும். அத்துடன் தோல் பளபளப்பு கொடுக்கும்.

Thursday, 23 May 2024

ஆலிவிதையின் நன்மைகள்

                          ஆலிவிதையின் நன்மைகள்


1. ஆலிவிதை தினம் ஒரு ஸ்பூன் சாபிட்டால் உடல் தலர்ச்சி நீங்கும்.

2. இளமையாகவும் வயதான  தோறஂறம் ஏரஂபடாமல் இருக்க உதவும்.

3. பெணஂகளுக்கு  உடல் ஆரோக்கியமாக உதவுகிறது.

4. பெண்களுக்கு ஏற்படும் சூடு கட்டிகள் கரைவதற்க்கு உதவுகிறது.

5. ஆலிவிதை கழுவி வடிகட்டி  ஈரத்துடன் கடாயில் போட்டு வருக்கவும். இதை ஆறவைத்து டப்பாவில்போட்டு மூடி வைத்துக்கொள்ளவும். இதை திணம் 1ஸ்பூன் சாப்பிடவும்.

குறிப்பு:

கர்பமாக இருக்கிறவர்கள் தவிர்க்கவும்.

Friday, 17 June 2022

வாய் வரட்சி போக்கும் கொள்ளு

                              வாய் வரட்சி போக்கும் கொள்ளு 

கொள்ளு 1/4 கிலோ கருவி தண்ணீர் வடிகட்டி ஈரத்தோடு கடாயில் போட்டு நன்றாக வருத்து எடுத்து ஆறவைத்து டப்பாவில் போட்டுவைத்துக்கொள்ளவும். இதை இரவு உணவுக்கு பின்பு 1/2 ஸ்பூன் அளவு மென்று சாப்பிடவும். சாப்பிட்டப்பின் வாயில் எச்சில் வரும். வாய்வரட்சி நீங்கி நன்றாக தூக்கம் வரும். நாம் வெய்யிலில் போகும்போது கொள்ளு எடுத்து வைத்துக்கொண்டால் தண்ணீர் இல்லாதபொருது 1/2 ஸ்பூன் வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாயில் எச்சில் ஊறும்.


குறிப்பு:

1.  கற்பமானவர்கள் கொள்ளு சாப்பிடக்கூடாது.

2. கொள்ளு வறுக்காமல் சாப்பிட கூடாது.