Thursday, 25 July 2013

பொன்மொழிகள் - 21

  1. சமுதாயத்திற்காக உண்மையாக பாடுபட நினைப்பவர்கள் பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை சரித்திரம் படிக்க வேண்டும்.
  2. பிறர் விரும்புமாறு தான் சொல்லி பிறர் சொல்லுவதன் பயனை நாம் அறிந்து கொள்ளுதல் குற்றமற்ற உயர்ந்த கொள்கையாகும்.
  3. முறையோடு கிடைக்கும் எதுவும் அளவோடுதான் இருக்கும். ஆனால் மனநிறைவோடு இருக்கும் எனவே கிடைத்ததை வைத்து திறமையை வளர்த்துக் கொள்.
  4. தான் செய்த என்ன தன்மையுடையது என்று நினைத்து பின்னர் வருத்தப்பட தக்கவற்றை செய்யாதிருத்தல் வேண்டும். ஒருக்கால் அப்படி செய்து விட்டாலும் அத்தகையவற்றை மீண்டும் மீண்டும் செய்யாதிருத்தல் நன்று.
  5. ஒரு செயலைச் செய்யும் போது அச்செயலைப்பற்றி முதலில் உறுதியாக எண்ணுங்கள் அதனை தொடர்ந்து சிந்தியுங்கள் அந்த செயலைப் பற்றி சகல விவரங்களையும் சேகரியுங்கள். சாதக, பாதகங்களை உங்களுக்குள்ளேயே விவாதித்தால் அந்த வகையில் உங்கள் அறிவுத்திறன் நாளுக்கு நாள் பெருகும்.
  6. சிறு சகிப்புத் தன்மையை சிறு வயதில் பெறுபவன் நல்ல பொறுமைசாலியாக எதிர்காலத்தில் வருவான்.
  7. சிறந்த பேச்சு மற்றவர்களின் அன்பையும் ஆதரவையும் உதவியையும் பெறுவதற்கு உதவும் ஒரு சிறந்த கருவியாகும்.
  8. மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள பழகுங்கள் மனம் பக்குவம் இல்லாவிட்டால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது உங்களை மீறிச் சொற்கள் வெளிப்படும் இந்தச் சொற்கள் சில சமயம் உங்கள் நோக்கத்தை கெடுத்து விடுவதும் உண்டு.
  9. கற்றவனுக்கு எந்த ஒரு நாடும் எந்த ஒரு ஊரும் தன் நாடு தன் ஊரு ஆகும் மேலும் தாய் மொழியோடு பல மொழிகளை கற்று தெரிந்து கொண்டு பேச பழக வேண்டும் நம் முன்னேற்றத்திற்கு அது ஊன்றுகோள் ஆகும்.
  10. மேன்மையுற வேண்டும் என்று விரும்புவோர் நம்முடைய மதிப்பைக் கொடுப்பதற்கு காரணமான செயல்களை விடுதல் வேண்டும்.

No comments:

Post a Comment