Tuesday, 30 July 2013

பொன்மொழிகள் - 22

  1. எப்போதும் குறை சொல்லும் மனப்பான்மையை தவிர்த்து நிறையினை பாராட்டும் போது உயர்வு வந்து நம்மைத் தழுவிக் கொள்ளும்.
  2. நீ முயற்சி எனும் விதைகளை விதைத்துக் கொண்டே இரு நிச்சயம் ஒரு நாள் ஏதாவது ஒரு விதையிலிருந்து வெற்றி எனும் கனி கிடைக்கும்.
  3. எப்பொழுதும் முயற்சிகள் தோல்வியடைவது குறித்து மனம் கலங்காதே முயற்சிக்காமல் சும்மா இருப்பதை விட முயற்சி செய்வதே மேலானது.
  4. நாம் வாழும் இடத்திலும் நாம் வணங்கும் இடத்திலும் மரங்கள் வளர்ப்போம் நலன்கள் பெறுவோம் என்ற உயர்ந்த எண்ணங்கள் உதிக்க வேண்டும்.
  5. ஆயிரம் கோவிலுக்கு செல்வதும் ஒரு முறை நமது குலதெய்வத்தை சென்று வணங்கி வழிபடுவதும் ஒன்று என நம் முன்னோர்கள் சொல்வார்கள்.
  6. திருக்குறளை நாளும் படித்தால் வாழ்நாள் முழுவதும் பண்போடு வாழ்வதற்க்கு உதவும்.
  7. திட்டமிட்ட வாழ்க்கை வாய்க்காலில் ஒழுங்குபடுத்தப்பட்ட நீரைப் போல் சரளமாகப் பாய்ந்துக் கொண்டிருக்கும்.
  8. நாம் நம்முடைய அனுமதியையே விருப்பத்தையோ கேட்காமல் இப்பிரபஞ்சத்தினுள் நுழையுமாறு செய்யப்பட்டவர்கள்.
  9. வாழ்க்கையை நாம் விரும்பியவாறு மாற்றியமைத்துக் கொள்ள முடியும் அதற்கு அடிப்படை திட்டமிடுதல்.
  10. திட்டமிட்டு செயலாற்றுபவர்களுக்கு வாழ்க்கை தனது கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறது.

No comments:

Post a Comment