Wednesday, 12 February 2014

பொன்மொழிகள் - 31

  1. சாதிக்க முடியாதவை என்பது பெரும்பாலும் முயற்சி செய்யாதவையாகவே இருக்கும்.
  2. நன்மை செய்வதற்குத் தயங்கக் கூடாது.
  3. கர்வத்திற்கு இடம் தரக் கூடாது.
  4. தீய எண்ணத்தின் மூலமோ கொடுஞ்சொற்கள் மூலமோ பிறருக்கு தீங்கு இழைக்கக் கூடாது.
  5. ஒருவன் துஷ்டன் என்பது நன்றாக தெரியுமானால் அவனுடன் பழகக் கூடாது.
  6. பிறருடைய பொருளை அபகரிக்கக் கூடாது.
  7. பிறரைத் திருப்தி செய்வதற்காகக் கூட பொய் சொல்லக் கூடாது.
  8. வீண் சண்டைக்குப் போகக் கூடாது.
  9. பிறருடைய குறைகளை மிகைபடுத்தக் கூடாது.
  10. நம்மை இந்த உலகம் பாராட்ட வில்லையே என்று துக்கப்படக் கூடாது.

No comments:

Post a Comment