Thursday, 27 February 2014

பொன்மொழிகள் - 33

  1. புதிய உயிரை பாதுகாப்புடன் இந்த பூமியில் வாழச் செய்வது பெண் இனம் என்பதை மறுப்பதற்கு இல்லை.
  2. கரு பிடித்து கருவுக்குள் பாதுகாத்து அதன் வளர்ச்சிக்கு ஏதுவாக செயல் பட்டு குழந்தை ஈன்று அதற்கு தேவையான உணவை தந்து வளர்ப்பாள் தாய் என்ற பெண்.
  3. பசி ஏற்படாமல் உணவு உண்பதால் நோய் ஏற்படுகிறது இதற்கு மருந்தே உணவு பசித்த பிறகு உண்பதே சிறந்த முறையாகும்.
  4. சிந்தனை என்பது மனதில் எழும் எண்ணங்களின் கூட்டத்தை ஒழுங்கு படுத்தி தனக்குள் கேள்வியும் பதிலும் எப்படி செய்யல்லாம் என்ற கேள்வியும். இப்படி செய்யல்லாம் என்ற பதிலும் பெருவதற்கான எண்ணங்களின் தொகுப்பே சிந்தனை.
  5. காலத்திற்கும் வசதிக்கும் ஏற்ப தண்ணீர் பாத்திரங்கள் மாறுபடுகின்றன.
  6. சந்தோசம் நாம் மற்றவர்களுக்கு கொடுத்தால்தான் நமக்கு திரும்ப கிடைக்கும்.
  7. சொல்வதை விட செய்து காட்டவேண்டும். கடமையை செய்வதில் மனநிறைவு பெறுவதே உண்மையான வழிபாடாகும்.

No comments:

Post a Comment