Tuesday, 18 June 2013

பொன்மொழிகள் - 17

  1. நேர்மையான உழைப்பு, உண்மையான பாசம், தேவையான நேரத்தில் மட்டும் உதவக்கூடிய மனம் உள்ளவர்களிடம் உறவுகளும் நண்பர்களும் கவ்ரவம் பார்க்காமல் எந்த சமயத்திலும் உதவியாய் இருப்பார்கள்.
  2. பிறர் துன்பங்களுக்கு வருத்தப் படுவது மனிதத் தன்மையாகும்.
  3. பிறர் துன்பங்களை நீக்குவது தெய்வத் தன்மையாகும்.
  4. நேரம் என்பது உங்களுடைய பணம் உங்களுடைய கணக்கில் இருப்பதாக வைத்துக்கொண்டு கவனமாக செலவிடுங்கள்.
  5. ஒழுக்கம் என்பது எப்பொழுதுமே வேண்டும். ஒவ்வொரு நாளையுமே முன் கூட்டியே திட்டமிடுங்கள். தள்ளிப் போடும் பழக்கத்தை அடியோடு விடுங்கள்.
  6. நல்லதை செய்கின்றவர்களை விட அந்த நல்லதை மறக்காமல் இருப்பவர்கள் தான் மிகவும் உயர்ந்தவர்கள்.
  7. மதுரை மீனாட்சி பெண் ஆட்சி. சிதம்பரம் நடராஜர் ஆண் ஆட்சி. திருச்சங்கோடு (அர்த்தநாரீஸ்வரர்) ஆண்-பெண் சேர்ந்து செய்யும் ஆட்சி தான் முழுமையடையும் சிறந்த வாழ்கை வாழ்வதற்கு அடையாலம்.
  8. நாம் யாரை மிகவும் நேசிக்கிறோமோ அவர்களால் தான் துன்பம் வருகிறது.
  9. நாம் வேலை செய்வது முக்கியம் அல்ல மற்றவர்களிடம் வேலை வாங்குவது முக்கியம் என்ற சாமர்த்தியத்தை வளர்த்துக் கொண்டால் எல்லா வேளையிலும் வெற்றி பெறலாம்.
  10. நமக்கு அளவுக்கு அதிகமாக செல்வம் வரும் போது தனக்கு தேவையானவை வைத்துக் கொண்டு மீதம் உள்ளதை சமுதாயத்தோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் (கல்வி, மருத்துவம், ஏழைகளுக்கு உதவலாம்).

Sunday, 16 June 2013

பொன்மொழிகள் - 16

  1. மற்றவர்களுக்கு நல்லவராக இருக்கும் நீங்கள் உங்களுக்கே நல்லவராவீர்கள்.
  2. உனக்குள் இருக்கும் திறமை வெளிப்படும் வகையில் நீ வளர வேண்டும்.
  3. லாபத்தினால் ஒருவன் பணக்காரன் ஆவதில்லை செமிப்பதினால் தான்.
  4. அடுத்தவர் இதயத்தை வெல்ல ஒரே வழிதான் உண்டு. நீங்கள் பேசும் வார்த்தைகள் உதட்டிலிருந்து அல்ல உங்களின் இதயத்திலிருந்து வரட்டும்.
  5. நாம் பயணம் செய்யும் லட்சியப் பாதையில் சோர்ந்து நின்று விட்டால் நாமே மற்றவர்களுக்குத் தடை கல்லாக மாறிவிடுவோம்.
  6. ஆபத்து நேரத்தில் உதவாத மகன், பசிக்கு உதவாத உணவு, தாகத்துக்கு உதவாத நீர், வறுமை அறியாத மனைவி, கோபம் தணியாத மனிதன், குரு வார்த்தை கேளாதவன், பாவத்தைத் தீர்க்காத தீர்த்தம் இவை யாவும் இருந்தும் பயனில்லை.
  7. பெண்கள் செந்தாமரையில் வீற்றிருக்கும் இலட்சுமியை போல எப்போதும் அழகாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும்.
  8. கணவனும், மனைவியும் சேர்ந்து உண்மையான கடமையை செய்வதில் தான் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்த முடியும்.
  9. வாழ்க்கையில் எதையும் சிறியதாக நினைக்கக் கூடாது. எந்த வேலையையும் தாழ்ந்ததாக நினைக்கக்கூடாது.
  10. அதிக அளவு படித்தவர்கள் உயர் பதவியில் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. உங்களுக்குத் தோன்றிய யுக்தியை பயன்படுத்தி சுய தொழில் செய்து முன்னேரலாம்.

Friday, 14 June 2013

பொன்மொழிகள் -15

  1. நம் பெருமையை நாம் எல்லோரிடமும் சொல்லக்கூடாது. மற்றவர்கள் நம்மைப் பற்றி பெருமையாய் பேசும் அளவிற்கு சொல்லும் செயலும் இருக்க வேண்டும்.
  2. அதிகாரம் ஒரே இடத்தில் குவியக் கூடாது. அதை பரவலாக்கப்பட வேண்டும்.
  3. சொந்தக்காலில் நிற்கும் வல்லமை படைத்தவர்கள் வாழ்நாள் முழுவதும் மானத்தோடு நிம்மதியாக வாழ முடியும்.
  4. வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைய விரும்புவர்கள் வாக்குத் தவராமலும் நேரம் தவராமலும் இருந்தால் தோல்வி உங்கள் பக்கமே எட்டிப் பார்க்காது.
  5. தண்ணீர் குடிப்பதில் கூட கவனமாகக் குடித்தால் தான் புரையேறாது.
  6. எப்போதுமே செய்கின்ற ஒவ்வொரு செயலும் உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.
  7. கணவன் மனைவி தூங்குப் போகும் நேரத்திலும், சாப்பிடும் சமயத்திலும் எந்த குறைகளையும் பேசக்கூடாது.
  8. அளவுக்கு மிஞ்சிய தூக்கம், அவசியமில்லாத பயம், ஆத்திரம், சோம்பல் எந்தகாரிய்த்தையும் தாமதமாக செய்யும் நடைமுறை உங்கள் முன்னேற்றத்தின் தடைகள்.
  9. நமக்கு பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்து ஒரு வினாடியைக் கூட வீணாக்க வேண்டாம்.
  10. மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் முயற்ச்சியில் நம் துயரத்தை மறப்போம்.