- நேர்மையான உழைப்பு, உண்மையான பாசம், தேவையான நேரத்தில் மட்டும் உதவக்கூடிய மனம் உள்ளவர்களிடம் உறவுகளும் நண்பர்களும் கவ்ரவம் பார்க்காமல் எந்த சமயத்திலும் உதவியாய் இருப்பார்கள்.
- பிறர் துன்பங்களுக்கு வருத்தப் படுவது மனிதத் தன்மையாகும்.
- பிறர் துன்பங்களை நீக்குவது தெய்வத் தன்மையாகும்.
- நேரம் என்பது உங்களுடைய பணம் உங்களுடைய கணக்கில் இருப்பதாக வைத்துக்கொண்டு கவனமாக செலவிடுங்கள்.
- ஒழுக்கம் என்பது எப்பொழுதுமே வேண்டும். ஒவ்வொரு நாளையுமே முன் கூட்டியே திட்டமிடுங்கள். தள்ளிப் போடும் பழக்கத்தை அடியோடு விடுங்கள்.
- நல்லதை செய்கின்றவர்களை விட அந்த நல்லதை மறக்காமல் இருப்பவர்கள் தான் மிகவும் உயர்ந்தவர்கள்.
- மதுரை மீனாட்சி பெண் ஆட்சி. சிதம்பரம் நடராஜர் ஆண் ஆட்சி. திருச்சங்கோடு (அர்த்தநாரீஸ்வரர்) ஆண்-பெண் சேர்ந்து செய்யும் ஆட்சி தான் முழுமையடையும் சிறந்த வாழ்கை வாழ்வதற்கு அடையாலம்.
- நாம் யாரை மிகவும் நேசிக்கிறோமோ அவர்களால் தான் துன்பம் வருகிறது.
- நாம் வேலை செய்வது முக்கியம் அல்ல மற்றவர்களிடம் வேலை வாங்குவது முக்கியம் என்ற சாமர்த்தியத்தை வளர்த்துக் கொண்டால் எல்லா வேளையிலும் வெற்றி பெறலாம்.
- நமக்கு அளவுக்கு அதிகமாக செல்வம் வரும் போது தனக்கு தேவையானவை வைத்துக் கொண்டு மீதம் உள்ளதை சமுதாயத்தோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் (கல்வி, மருத்துவம், ஏழைகளுக்கு உதவலாம்).
Tuesday, 18 June 2013
பொன்மொழிகள் - 17
Labels:
பொன்மொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment