- அவசியம் இல்லாத விஷயங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குவதை அதிக முக்கியத்துவம் தருவதைத் தவிர்க்கவும்.
- சமயம், சந்தர்ப்பம் ஏற்றவாறு ஒத்துப் போகும் தன்மை உள்ளவர்களாலேயே மிகப்பெரிய வெற்றிகள் கிடைக்கும்.
- பிறரை பாராட்டுவதற்கு நமக்கு மனமிருந்தால் போதும் பணம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
- திறமையை வெளிப்படுத்துவது என்பது வருந்தத் தக்க ஒன்றோ வெட்கப்படத்தக்க ஒன்றோ கிடையாது. அந்த நேரம் தைரியம் மனோபலம் உங்களிடம் இருக்க வேண்டும்.
- ஒரு துறையில் கைதேர்ந்தவர்களாக இருப்பது பல சமயங்களில் உங்கள் வாழ்க்கையை உயர்த்தும்.
- அவசியம் ஏற்படும்போது அணுகுமுறை தெரியாமல் பலர் தோல்வியடைவதை நாம் கண்முன் பலமுறை பார்த்திருப்போம்.
- உங்கள் அறிவல்ல, உங்கள் மனநிலையே உங்களின் உயர்வை தீர்மானம் செய்கிறது.
- தன்னை, பிறரை, சமுதாயம் பற்றிய விழிப்புணர்வு இல்லாவிட்டால் நாம் சமுதாய ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு விடுவோம்.
- நமக்கு சௌகர்யமில்லாத, சங்கடப்படுத்தப் போகும் ஒரு செயலை சந்திப்பதே பிரச்சினை எனப்படுகிறது.
- அனைத்து இடங்களிலும் உறவுகளையும், நட்புகளையும் பார்க்காமல் உண்மைகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கலாம்.
Friday, 31 May 2013
பொன்மொழிகள் - 11
Monday, 27 May 2013
பொன்மொழிகள் - 10
- ஒருவன் சொத்தை சூரையாடுகிறான் பதிலுக்கு அவன் இவன் சொத்தை சூறையாடுகிறான் இந்த சூறையாடல் சக்கரம் தொடரும் யாராவது இதை நிறுத்தினால்தான் முடிவுக்கு வரும்.
- நம்ம சமைத்த்ப் சமயலை ஒரு தடவை சுவைத்து பார்பது போல் நம் வாயால் சொல்கின்ற வார்த்தைகளை ஒரு முறை சொல்லி பார்த்து பிறகு நல்லது கெட்டது எது என்று யோசித்து பின் சொன்னால் பல பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
- நன்றி என்பது சரியான காலம் வரும் போது அதனை திருப்பி செய்வது நம்மை ஒரு முழுமையான மனிதனாகக் காட்டும்.
- வெற்றி என்பது கடின உழைப்பும், பண்பும், தியாகமும் சுயக்கட்டுப்பாடும் அவசியமாகும்.
- எப்போது உங்களின் விருப்பமும் வேலையும் ஒன்றாக ஆகின்றதே அப்போது நீங்கள் சாதிப்பீர்கள்.
- உடல் என்பது நமது சொத்து நமது மூலதானம். உடல் நன்றாக இருந்தால் தான் மனம் நன்றாக இருக்கும்.
- பிறரால் உங்களைக் காப்பி அடிக்க முடியுமே தவிர உங்களின் தனித்தன்மையை என்றுமே தடுக்க முடியாது.
- புதுமையாய் யோசியுங்கள் மக்கள் மத்தியில் எப்போதுமே இந்த புதுமைக்கு வரவேற்பு அதிகம்.
- சரியான தூண்டுதல் மட்டும் கிடைத்து விட்டால் மலையளவு வேலை கூட நொடிப்பொழுதில் முடிந்துவிடும்.
- எந்த செயலுக்கும் வழிமுறை என்பது மிக முக்கியம்.
Sunday, 19 May 2013
உணவே மருந்து - 5
- வயிற்ருப்புண், ஒவ்வாமை உள்ளவர்கள் பலகாரம் செய்த எண்ணெயை திரும்பத்திரும்ப பயன்படுத்துவதால் உடம்பில் நோய் அதிகரிக்கும், உடம்புக்கு ஆகாது.
- வெய்யில் காலத்தில் இளநீர், தர்பூசணி வெள்ளரிக்காய், நொங்கு, எலுமிச்சம் பழம், நெல்லிக்காய், பச்சை வாழைப்பழம் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது.
- பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் நகம் சொத்தை உள்ளவர்கள் இரவு தூங்கும்போது தினமும் எண்ணெய் தடவி வந்தால் சரி ஆகும்.
- இரவில் தூங்கும் போது ஒரு சொட்டு வேப்பெண்ணை உடம்பில் தடவினால் கொசு கடிக்காது.
- ஆலிவ் எண்ணெயை தூங்கும் போது உதட்டில் தடவினால், உதடு மிருதுவாக இருக்கும்.
- வாய் நாற்றம் உள்ளவர்கள் தினமும் நெல்லிக்காய் சாபிட்டால் சரி ஆகும்.
- அஜீர்ணக் கோளாறு உள்ளவர்கள் இடது பக்கம் உள்ள பற்களால் மென்று சாப்பிட்டால் சரி ஆகும்.
- பற்களால் மென்று சாப்பிட முடியாதவர்கள் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் மட்டும் இடது பக்கமாக திரும்பி படுத்தால் அஜீரணக் கோளாறு சரி ஆகும்.
- கால் விக்கம் உள்ளவர்கள் பார்லி அரிசியை லேசாக வறுத்து பொடி செய்து ஒரு கைப்பிடி அளவு வேகவைத்து பாயசம் போல் குடித்தால் சரி ஆகும்.
- பாதத்தில் வலி உள்ளவர்கள் வலி இருந்தால் மட்டும் ஒரு சிறிய ஸ்பூன் அளவு கசகசாவை இரவில் சாப்பிட்டால் கட்டுப்படும்.
Subscribe to:
Posts (Atom)