- அவசியம் இல்லாத விஷயங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குவதை அதிக முக்கியத்துவம் தருவதைத் தவிர்க்கவும்.
- சமயம், சந்தர்ப்பம் ஏற்றவாறு ஒத்துப் போகும் தன்மை உள்ளவர்களாலேயே மிகப்பெரிய வெற்றிகள் கிடைக்கும்.
- பிறரை பாராட்டுவதற்கு நமக்கு மனமிருந்தால் போதும் பணம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
- திறமையை வெளிப்படுத்துவது என்பது வருந்தத் தக்க ஒன்றோ வெட்கப்படத்தக்க ஒன்றோ கிடையாது. அந்த நேரம் தைரியம் மனோபலம் உங்களிடம் இருக்க வேண்டும்.
- ஒரு துறையில் கைதேர்ந்தவர்களாக இருப்பது பல சமயங்களில் உங்கள் வாழ்க்கையை உயர்த்தும்.
- அவசியம் ஏற்படும்போது அணுகுமுறை தெரியாமல் பலர் தோல்வியடைவதை நாம் கண்முன் பலமுறை பார்த்திருப்போம்.
- உங்கள் அறிவல்ல, உங்கள் மனநிலையே உங்களின் உயர்வை தீர்மானம் செய்கிறது.
- தன்னை, பிறரை, சமுதாயம் பற்றிய விழிப்புணர்வு இல்லாவிட்டால் நாம் சமுதாய ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு விடுவோம்.
- நமக்கு சௌகர்யமில்லாத, சங்கடப்படுத்தப் போகும் ஒரு செயலை சந்திப்பதே பிரச்சினை எனப்படுகிறது.
- அனைத்து இடங்களிலும் உறவுகளையும், நட்புகளையும் பார்க்காமல் உண்மைகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கலாம்.
Friday, 31 May 2013
பொன்மொழிகள் - 11
Labels:
பொன்மொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment