- வயிற்ருப்புண், ஒவ்வாமை உள்ளவர்கள் பலகாரம் செய்த எண்ணெயை திரும்பத்திரும்ப பயன்படுத்துவதால் உடம்பில் நோய் அதிகரிக்கும், உடம்புக்கு ஆகாது.
- வெய்யில் காலத்தில் இளநீர், தர்பூசணி வெள்ளரிக்காய், நொங்கு, எலுமிச்சம் பழம், நெல்லிக்காய், பச்சை வாழைப்பழம் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது.
- பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் நகம் சொத்தை உள்ளவர்கள் இரவு தூங்கும்போது தினமும் எண்ணெய் தடவி வந்தால் சரி ஆகும்.
- இரவில் தூங்கும் போது ஒரு சொட்டு வேப்பெண்ணை உடம்பில் தடவினால் கொசு கடிக்காது.
- ஆலிவ் எண்ணெயை தூங்கும் போது உதட்டில் தடவினால், உதடு மிருதுவாக இருக்கும்.
- வாய் நாற்றம் உள்ளவர்கள் தினமும் நெல்லிக்காய் சாபிட்டால் சரி ஆகும்.
- அஜீர்ணக் கோளாறு உள்ளவர்கள் இடது பக்கம் உள்ள பற்களால் மென்று சாப்பிட்டால் சரி ஆகும்.
- பற்களால் மென்று சாப்பிட முடியாதவர்கள் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் மட்டும் இடது பக்கமாக திரும்பி படுத்தால் அஜீரணக் கோளாறு சரி ஆகும்.
- கால் விக்கம் உள்ளவர்கள் பார்லி அரிசியை லேசாக வறுத்து பொடி செய்து ஒரு கைப்பிடி அளவு வேகவைத்து பாயசம் போல் குடித்தால் சரி ஆகும்.
- பாதத்தில் வலி உள்ளவர்கள் வலி இருந்தால் மட்டும் ஒரு சிறிய ஸ்பூன் அளவு கசகசாவை இரவில் சாப்பிட்டால் கட்டுப்படும்.
Sunday, 19 May 2013
உணவே மருந்து - 5
Labels:
உணவே மருந்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment