Monday, 29 April 2013

பொன்மொழிகள் - 3

  1. நல்ல நல்ல செய்திகளை பரப்புவதன் மூலம் போலிகள் தானாகவே மறைந்து போகும்.
  2. வார்த்தை மாறலாம் வாக்கு மாறகூடாது.
  3. நல்லவர்கள் வாய்ச்சொல் துன்பங்களில் வழுக்கவிடாமல் உதவுகின்ற ஊன்றுகோல் போலிருக்கும்.
  4. ஒருவனை சிகரத்திற்கு உயர்த்துவதும் படுபாதாலதிற்கு தள்ளுவதும் அவன் பெற்ற அறிவுதான்.
  5. செய்யும் தொழிலில் அவரவர்க்கு வேறுபாடு இருக்கலாம்.  செலுத்தும் அன்பினில் வேறுபாடு இருக்கக்கூடது.
  6. அன்பை ஆதாரமாகக் கொண்டவர்களால் மட்டுமே. இன்பநிலையை அடைய முடியும்.
  7. அன்பு எங்கிருகிறதோ அங்கே தான் தர்மம் குடிகொண்டு இருக்கும்.
  8. கற்களால் கட்டுவது ஆலயம் என்றால் தசையும் எலும்பும் கொண்ட இந்த உடம்பை ஆலயம் போல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
  9. துன்பத்தில் வாழ்பவன் கூட மரணத்தை விரும்புவதில்லை.
  10. மென்மை, அன்பு, இரக்கம் போன்றவற்றில் ஒருவர் மிதமிஞ்சிப்போய்விட்டல் வீழ்ச்சியேற்படுத்தும் அளவுக்கு போக முடியும்.

No comments:

Post a Comment