- உங்கள் மொத்த மதிப்பு எவ்வளவு என்றோ, எவ்வளவு சம்பதிக்கிரிர்கள் என்றோ யாரிடமும் சொல்லதீர்கள் எப்போதுமே; சொன்னால் குறைவாக இருப்பதர்க்காக சிலரும், அதிமாக இருப்பதர்க்கா பலரும் உங்களை வெறுக்கலாம்.
- பசுவுக்கு தழை தருவதும் பசியோடு வருபவர்க்கு ஒருபிடி சோறு தருவதும் இனிய சொற்கள் மூலம் பிறரை மகிழ்விப்பதும்கூட வழிபாட்டு முறைகள்தாம்.
- அடக்கம் உள்ளவர்கள் வானத்திலிருக்கும் தேவர்களுக்கு சமம் வாழ்கையில் உயர்ந்துக்கொண்டே போவார்கள்.
- விதைகளைச் சமைத்து உண்பவன் மூடன். அதை விதைத்து விளைச்சல் பயனை அனுபவிப்பவனே அறிவாளி.
- அன்பு, கருணை, கொடை, வாய்மை போன்ற நல்ல குணங்களெல்லாம் இல்லறத்தின் வழியேதான் வெளிப்படுத்த முடியும்.
- ஆபத்து நேரும் காலத்தில் தனது ஐந்து உறுப்புகளையும் ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு பாதுகாத்துக்கொள்கிறது ஆமை. அதைப்போல மனிதன் தன ஐம் புலன்களையும் அடக்கி ஆள வேண்டும்.
- ஏக்கம், ஏமாற்றம், அதைரியம், அச்சம், கர்வம், கோபம் இவை எதுவுமே மாணவர்கள் அகராதியில் இருக்கக்கூடாது.
- சந்தேகம் கேட்டு, அதை நிவர்த்தி செய்துக்கொண்டு பாடம் பயில்கிற மாணவர்கள்தான் சாதிக்கிறார்கள்.
- உடல் எவ்வளவு அழகானதாக இருந்தாலும் அது அசுத்தங்கள் நிரம்பியதே.
- பல சமயங்களில் தீயோர் நல்லவர் போலவே தோன்றுவர். அதை ஆய்ந்தறிவது கடினம்.
Tuesday, 30 April 2013
பொன்மொழிகள் - 4
Labels:
பொன்மொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment