- குளிர்ச்சியான காய்களுடன் (முள்ளங்கி) சமஅளவு முருங்கைக்காய் சேர்த்து சமைத்தால் சளி பிடிக்காது.
Sunday, 25 May 2014
உணவே மருந்து - 6
அரைக்கீரை கடைசல்
தேவையான பொருட்கள்:
- அரைக்கீரை - 1 கட்டு
- தக்காளி - 1
- வெங்காயம் - 1
- பூண்டு - 14 பல்
- பச்சை மிளகாய் - 2
- காய்ந்த மிளகாய் - 2
- கடுகு - 1 ஸ்பூன்
- எண்ணெய் - 1 குழி கரண்டி
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- புளி - ஒரு சிறு நெல்லிக்காய் அளவு
- தண்ணீர் - 1/2 லிட்டர்
- உப்பு - தேவையான அளவு
- அரைக்கீரையின் வேரை நீக்கி, நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் (கத்திரிக்கோலால்-scissors நறுக்கிக் கொள்ளவும்).
- நறுக்கிய அரைக்கீரை, தக்காளி, நறுக்கிய வெங்காயம், 10 பல் பூண்டு (தோல் உரித்தது), பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயம், தண்ணீர் ஆகியவற்றை ஒரு சட்டியில் போட்டு நன்றாக வேகவைக்கவும்.
- வெந்தபின் புளியை போட்டு மேலும் 5 நிமிடம் வேகவைக்கவும்.
- வெந்த கீரையை மத்தால் மையக் கடையவும்.
- பிறகு, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், 4 பல் பூண்டு (தோலோடு நசுக்கியது) ஆகியவற்றை போட்டு தாலித்து கடைந்த கீரையில் கலந்து விடவும்.
அரைக்கீரை கடைசல் தயார் !!!
Thursday, 22 May 2014
சாம்பார்
தேவையான பொருட்கள்:
- பச்சை பருப்பு (அ) துவரம் பருப்பு - 100 கிராம்
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- வெந்தயம் - 1 ஸ்பூன்
- பூண்டு - 4 பல்
- நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
- தண்ணீர் - 1/2 லிட்டர்
- எண்ணெய்
- கடுகு - 1 ஸ்பூன்
- கருவேப்பிலை - 2 கொத்து
- சின்ன வெங்காயம் - 1 கைபிடி
- தக்காளி - 4
- முருங்கைக்காய் - 2
- முள்ளங்கி - 2
- பீன்ஸ் - 1 கைப்பிடி
- காரட் - 2
- கத்திரிக்காய் - 4
- சாம்பார் மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
- புளி - ஒரு சிறு நெல்லிக்காய் அளவு
- கொத்தமல்லி தழை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- நெய் - 1 ஸ்பூன்
- பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்தபின் கடுகு, கறிவேப்பில்லை போட்டு பொறிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போடவும்.
- உடனே மிக்ஸியில் அரைத்த தக்காளியை இதில் போட்டு வதக்கவும்.
- பிறகு நறுக்கிய காய்களை இதில் போட்டு வதக்கவும்.
- இது வதங்கியதும், 2 ஸ்பூன் சாம்பார் மிளகாய் தூள் போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
- இப்பொழுது வேகவைத்த பருப்பு கலவையை இதில் சேர்க்கவும்.
- இதில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி, பின் புளி, தேவையான உப்பு, கொத்தமல்லி தழை போட்டு ஒன்றாகக் கலந்து காய்கள் வேகும் வரை கொதிக்க விடவும்.
- சாம்பார் தயாரானதும் நெய் விட்டுக் கலந்து இரக்கவும்.
சாம்பார் தயார் !!!
Thursday, 27 February 2014
பொன்மொழிகள் - 33
- புதிய உயிரை பாதுகாப்புடன் இந்த பூமியில் வாழச் செய்வது பெண் இனம் என்பதை மறுப்பதற்கு இல்லை.
- கரு பிடித்து கருவுக்குள் பாதுகாத்து அதன் வளர்ச்சிக்கு ஏதுவாக செயல் பட்டு குழந்தை ஈன்று அதற்கு தேவையான உணவை தந்து வளர்ப்பாள் தாய் என்ற பெண்.
- பசி ஏற்படாமல் உணவு உண்பதால் நோய் ஏற்படுகிறது இதற்கு மருந்தே உணவு பசித்த பிறகு உண்பதே சிறந்த முறையாகும்.
- சிந்தனை என்பது மனதில் எழும் எண்ணங்களின் கூட்டத்தை ஒழுங்கு படுத்தி தனக்குள் கேள்வியும் பதிலும் எப்படி செய்யல்லாம் என்ற கேள்வியும். இப்படி செய்யல்லாம் என்ற பதிலும் பெருவதற்கான எண்ணங்களின் தொகுப்பே சிந்தனை.
- காலத்திற்கும் வசதிக்கும் ஏற்ப தண்ணீர் பாத்திரங்கள் மாறுபடுகின்றன.
- சந்தோசம் நாம் மற்றவர்களுக்கு கொடுத்தால்தான் நமக்கு திரும்ப கிடைக்கும்.
- சொல்வதை விட செய்து காட்டவேண்டும். கடமையை செய்வதில் மனநிறைவு பெறுவதே உண்மையான வழிபாடாகும்.
Monday, 24 February 2014
பொன்மொழிகள் - 32
- நீ சிறந்தவனாய் திகழ விரும்பினால் தன்னடக்கமும், பணிவும் கொண்டவனாய் இரு.
- மேன்மையான எண்ணங்களுடன் இருப்பவர்கள் எப்போதும் தனித்திருப்பார்கள்.
- அடுத்தவருக்கு அறிவுரை கூருவதை விட கேட்பதே நல்லது.
- வழி தவறுவதை விட வழி கேட்பது மேல்.
- தன்னை காப்பாற்றிக் கொள்ளும் சக்தி இல்லை என்றால் மற்றவர்களால் அவர்களுக்குத் தீங்கு தான் நடக்கும். நம்மை துன்பப் படுத்துபவர்களிடம் பணிந்து போகாமல் துணிந்து நிற்கவேண்டும்.
- குறுகிய வாழ்க்கை முறையில் காலத்தை வீண் ஆக்காதே.
- ஒரு புன்சிரிப்பும் இதயத் தூய்மையும் உண்மையான அழகு.
- ஒருவனுக்கு நல்ல புத்தகமே என்றும் மாறாத நண்பனுக்கு சமம்.
- முன் எச்சரிக்கையோடு செயல்படுபவர்கள் என்றும் துன்பத்தில் சிக்க மாட்டார்கள்.
- பெண் என்பது எல்லா உயிர்களுக்கும் ஆரம்பமாக இருக்கிறது. பெண் இனத்திலிருந்து தான் பெரும்பகுதி பூமியில் தோற்றம் அடைகிறது.
Wednesday, 12 February 2014
பொன்மொழிகள் - 31
- சாதிக்க முடியாதவை என்பது பெரும்பாலும் முயற்சி செய்யாதவையாகவே இருக்கும்.
- நன்மை செய்வதற்குத் தயங்கக் கூடாது.
- கர்வத்திற்கு இடம் தரக் கூடாது.
- தீய எண்ணத்தின் மூலமோ கொடுஞ்சொற்கள் மூலமோ பிறருக்கு தீங்கு இழைக்கக் கூடாது.
- ஒருவன் துஷ்டன் என்பது நன்றாக தெரியுமானால் அவனுடன் பழகக் கூடாது.
- பிறருடைய பொருளை அபகரிக்கக் கூடாது.
- பிறரைத் திருப்தி செய்வதற்காகக் கூட பொய் சொல்லக் கூடாது.
- வீண் சண்டைக்குப் போகக் கூடாது.
- பிறருடைய குறைகளை மிகைபடுத்தக் கூடாது.
- நம்மை இந்த உலகம் பாராட்ட வில்லையே என்று துக்கப்படக் கூடாது.
Subscribe to:
Posts (Atom)