Friday, 3 May 2013

பொன்மொழிகள் - 5

  1. செல்வத்தைத் தமது என்று உரிமை கொண்டாடி அழைப்பவர்களெல்லாம் அதிகாலையில் எழுந்து நாள் முழுவதும் கடுமையாக உழைப்பவர்களே.
  2. பத்து ரூபாயை சேமித்தால் பத்து ரூபாய் சம்பாதித்ததாக அர்த்தம்.
  3. அறிவுக் கூர்மையால் சிந்தனைக்கும் கடும் உழைப்புக்கும் கிடைத்த ஊதியம் பணம்.
  4. பணம் வாழ்க்கையை மிருதுவாக ஓடவைக்கும் எண்ணெய் போன்றது.
  5. முயல்களைப் போல்  பணம் பணத்தைப் பிரசவிக்கும். இதைவிட பெரிய உண்மை  வேறொன்றுமில்லை.
  6. போலிகளின் புகழ் வெளிச்சம் பெறுவதும் இன்றைய நாளில் மிகுதியாகக் காணப் பெறுகிறது.
  7. முயற்சியைக் கொண்டு பயிற்சிகளை செய்துவரும் எந்த ஒரு சராசரி மாணவரும் கண்டிப்பாக நினைத்த பதவியைப் பெறலாம்.
  8. உங்களுக்கு வாழக் கொடுக்கப்பட்ட காலத்துக்குள் வாழந்தத்ற்கான அடையாளங்களையும் சாதனைகளையும் பூமியில் ஆழமாகப் பதியுங்கள்.
  9. ஆணித்தரமான நம்பிக்கையும் அதற்கேற்ற அளவிலான தீவிர முயற்சியும் இருந்தால் எதையும் ஜெயிக்கலாம்.
  10. படிக்க செல்லும் மாணவர்களின் எண்ணங்களை, விருப்பங்களை, செயல்பாடுகளை, நண்பர்கள் பழக்கவழக்கங்களை அடிக்கடி பார்த்துக் கொள்வது பெற்றோர்களது கடமை.

No comments:

Post a Comment