தேவையான பொருட்கள்:
- எள்ளு - 1 கப்
- வேர்கடலை - 1 கப்
- கேழ்வரகுமாவு - 1 கப்
- வெல்லம் - 1 கப்
- முதலில் எள்ளை வறுத்து போடி செய்து கொள்ளவும்.
- பின் வேர்கடலையை வறுத்துத் தோலை நீக்கி சின்ன சின்னதாக பொடித்துக் கொள்ளவும்.
- கேழ்வரகு மாவை தண்ணீர் உப்பு போட்டு பிசைந்து உருண்டை செய்து தட்டி தோசை கல்லில் அடை செய்து, பின் அதை துண்டு துண்டாக புட்டு வைத்துக் கொள்ளவும்.
- வெல்லத்தை போடி செய்துக் கொள்ளவும்.
- மிக்சியில் எள்ளு, வேர்கடலை, கேழ்வரகு அடை ஆகியவற்றை தனித்தனியாக பொடித்துக் கொள்ளவும்.
- பிறகு மிக்சியில் அரைத்து வைத்த எள்ளு, வேர்கடலை, கேழ்வரகு அடை ஆகியவற்றோடு வெல்லத்தையும் போட்டு மீண்டும் மிக்சியில் லேசாக விட்டுவிட்டு அரைத்தால் எல்லாம் ஒன்றாகக் கலந்து விடும்.
- இதனை எடுத்து ஒன்றாகக் கிளறி லட்டு போல் பிடித்து வைத்துக் கொள்ளவும்.
எள்ளு உருண்டை தயார் !!!
No comments:
Post a Comment