Thursday, 27 June 2013

பொது அறிவு

பண்டைய தமிழர்கள் நில வளத்தையும் இயற்கை சூழலுக்கு ஏற்றவாறு பிரித்திருந்தனர்
  • குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த நிலமும்
  • முல்லை - காடும் காடு சார்ந்த நிலமும்
  • மருதம் - வயலும் வயல் சார்ந்த நிலமும்
  • நெய்தல் - கடலும் கடல் சார்ந்த நிலமும்
  • பாலை - முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை உற்ற நிலம் 
----------------------------------------------------------------------------------------------------------------

தமிழ் நாட்டின் பீட  பூமிகள்
  • தருமபுரி பீடபூமி - பாலாறுக்கும் காவிரிக்கும் இடைப்பட்ட பகுதி 
  • மதுரை பீடபூமி - மதுரைக்கும் கன்னியாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதி 
  • கோயம்புத்தூர் பீடபூமி - நீலகிரிக்கும் தர்மபுரிக்கும் இடைப்பட்ட பகுதி

Wednesday, 26 June 2013

பக்தி

ஓம்
விநாயகர்
மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே

குரு
குருர் பிரம்மா குருர் விஷ்ணு
குருதேவோ மஹேஸ்வர
குருசாக்ஷாத் பரப்ரஹ்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நம

சிவன்
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு லாவிய நிர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்  தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்

சக்தி:
சித்தியே இது உன் சக்தியெயாம்
அத்துடனின் ஆதியின் ஜோதியாகு
வித்தான நின்சக்தி சித்திக்கடும்
சக்தி பெற செய்தனை சித்திதா

லட்சுமி:
செல்வி சிறந்தோய் உன் சிறப்பு
பல்வடிவாயுலகிலாகட்டும்
கல் பிழக்கு மொழியுள் மொழி
துள்ளி வந்து தூய்மையாக்குக

சரஸ்வதி:
கலைகரசியே கவிதா மணி
விலையிலா நின்கருணை வேண்டும்
தலை நீ எனக்கு நிலை நீ எனக்கு
அலையாய் வந்து முத்தினைத்தருவாய்

அம்மன்
தனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே

சரஸ்வதி
ஓம் சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவதுமேஸத

முருகன்
ஏறுமயில் ஏறிவிளையா ஆடுமுகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசும்முகம் ஒன்றே
கூரும் அடியார்கள் வினைதீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம்புணர வந்த வந்த முகம் ஒன்றே
ஆறுமுகம் ஆனபொருள் நீயருளல் வேண்டும்

திருவிளக்கு
தீபஜோதி யானவளே நமஸ்காரம்
திருவாகி வந்தவளே நமஸ்காரம்
ஆபத் பாந்தவியே நமஸ்காரம்
அனுதினமும் காத்திடுவாய் நமஸ்காரம்

நவக்கிரகங்கள்
சூரியன், சோமன், செவ்வாய்
சொற்புதன், வியாழன், வெள்ளி
காரியும் இராகு, கேது
கடவுளர் ஒன்பதாமர்
தாரியல் சக்கரத்தைத்
தயவுடன் பூசித்தாலும்
பாரினில் செல்வம் உண்டாம்
பாக்கியம் சேறும் நாளும்

நவக்கிரகதலங்கள் 
செங்கதிரோன் சூரியனார் கோயில் குடிகொண்டார்
திருவேங்கடவன் திருப்பதியில் திங்களென நின்றார்
அங்காரகன் ஆவினன்குடி தண்டபானி ஆனார்
அரிய புதன் சொக்க்ரென ஆலவாயமர்ந்தார்
தங்க குரு திருசெந்தூரில் சுப்பிரமணியம் ஆனார்
பொங்குசனி திருநள்ளாற்றில் திருக்கோயில் ஆனார்
பெரிய ராகு, கேது இவர்கள் காளத்தீசர் ஆனார்கள்

குபேரன் 
ஓம் யஷாய குபேராய வைஸ்ரவணாய
தநதாந்யாதிபதயே தநதாந்ய ஸம்ருத்திம் மே
தேஹி தாபய ஸ்வாஹா


ஸ்ரீ ராமர்
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம ராம வராநநே

ஸ்ரீ ஆஞ்சநேயர்
அஸாத்ய ஸாதக ஸ்வாமின்
அஸாத்யம்  தவம் கிம்வத
ராமதூதக்ரூபா ஸிந்தேர் மத்காரியம்
ஸாதய ப்ரபோ

ஸ்ரீ நரஸிம்ஹர்
ஸ்ரீ நரஸிம் ஹோ மகாஸிம் ஹோ திவ்யஸிம் ஹோ மகாபல
உக்ரஸிம்  ஹோ மஹாதேவ உபேந்தரஸ்  சாக்நி லோசந

ஸ்ரீ கருடர்
குங்குமாங்கித  வர்ணாய குங்தேந்து தவளாயச
விஷ்னுவாஹன நமஸ்துப்யம் பஷிராஜாயதே நம

ஸ்ரீ வராஹர்
சுத்தஸ் படிக ஸங்காசம் ரக்தபத்ம தனேஷணம்
வராஹ வதனம் சௌம்யம் சதுர்பாஹீம் கிரீடினம்

ஸ்ரீ ஹயக்ரீவர்
ஜ்ஞாநாநந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ரூதீம்
ஆதாரம் ஸர்வவித்யாநாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே

வரலட்சுமி
ஓம் ஹீரீம் ஸ்ரீம் ஷ்ரீம் வர வராத மகா
ஸாம்ராஜ்ய ராணி வரலட்சிமி வசமாயை ஸ்வாஹ

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ராகவேந்திரர் கவசம்
பூஜ்யாய ராகவேந்திராய ஸத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே

சாய் பாபா
குருவாய் உந்தனைத் தொழுதேன் சாயிநாதா
உன்னருளை எனக்கு தருவாய் சாயிநாதா
என்வாழ்விற்கு வழிகாட்டுவாய் சாயிநாதா
இன்பம் துன்பம் நிறைந்த வாழ்வின் ஒளியாவாய் சாயிநாதா
உலகப்பற்றை விட்டோழிக்க் அருள்வாய் சாயிநாதா
குருவாயூரப்பனை உன்னிடத்தில் கொண்டுள்ள சாயிநாதா
கோமதி அம்மனின் அருமை மகனே சாயிநாதா
உந்தன் பாதகமலம் சரண் அடைந்தோம் சாயிநாதா
எனக்கு விஜயம் அருள்வாய் சாயிநாதா

புத்தர்
புத்தம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி

குருபகவான் கவசம்
வானவர்க்கு அரசனான
வளம் தரும் குருவே உன்னை
தேனான சொல்லெடுத்து
செவிகுளிரப் போற்றுகிறேன்
காணாத இன்பம் யாவும்
காணநீ வழி வகுப்பாய்
மீனமும் தனுசும் உந்தன்
மேலான வீட தாகும்

பொன்னிற முல்லையோடு
புஷ்பராகத்தை ஏற்றாய்
வண்ணத்தில் மஞ்சள் கொண்டாய்
மரத்தினில் அரசை ஏற்றாய்
எண்ணத்தில் நிற்கும் தேவா
எளிதில் வெற்றி தாராய்
மண்ணினில் பதினாறாண்டை
மறவாமல் நீயும் ஏற்றாய்

சுண்டல் நை வேத்யத்தால்
தொல்லைகள் தீர்ப்பவன் நீ
கொண்டதோர் யானை உந்தன்
கொண்டாடும் வாகனம் தான்
வந்திடும் பதவி வாய்ப்பும்
தடையில்லாக் காரிய சிறப்பும்
வந்திடும் பிள்ளை பேறும்
வழங்குதல் உன் பொறுப்பே

பொருளோடு புகழைத் தந்து
போற்றிடும் வாழ்வைத் தந்து
வருங்காலம் அனைத்தும் செல்வம்
வரும்காலம் ஆக்கி வைத்து
பெருமைகள் வழங்க வேண்டும்
பேரருள் காட்ட வேண்டும்
அருள் மிகு குருவே உன்னை
அடிபணிந்து வணங்குகின்றேன்

வருடம் ஓர் ராசிவீதம்
வட்டமாய் சுழன்று வந்தே
தருகிற பலனை நாங்கள்
தங்கமாய் ஏற்றுக்கொள்வோம்
வருகிற நாட்கள் எல்லாம்
வசந்தமாய் மாறுதற்கே
அருள் தரும் உனது பார்வை
அனுதினம் எமக்கு வேண்டும்

குருவே நீபார்த்தால் போதும்
கோடியாய் நன்மை சேரும்
திருவருள் இணைந்தால் வாழ்வில்
திருமணம் வந்து காட்டும்
பொருள் வளம் பெருகும் நாளும்
பொன்னான வாழ்வும் சேரும்
அருள்தர வேண்டி உன்னை
அன்போடு துதிக்கின்றோம

பொன்மொழிகள் - 20

  1. ஒவ்வொருவரும் தன் வயதிற்கேற்ப பலவிதமான புத்தகங்களை படிக்க வேண்டும். வாழ்க்கையில் புத்தகங்களை படிப்பதால் நாமே பல சமயம் பக்குவமாக முடிவுகளை எடுக்க உதவும்.
  2. மனிதவாழ்க்கையில் ஒவ்வொருவரும் திருமந்திரம் படித்தால் உறவுகளிடையே குழப்பம் இல்லாமல் பல விசயங்களை புரிந்துகொள்ளலாம்.
  3. என்னால் முடியாது என்ற எண்ணம் தான் நம் முதல் எதிரி.
  4. வாழ்க்கையில் நடைமுறையில் சில நல்ல மாறுதல்களை மாறுவதற்கு மறுப்பவர்கள் துன்பப்படுகிறார்கள்.
  5. முன்னேற்றம் என்பது முன்னோக்கிப் போய் கொண்டே இருப்பது. அது தேங்கிக் கிடப்பதில்லை, பூர்த்தி அடைவதில்லை, அதற்கு எல்லையும் கிடையாது. ஒதுங்கி நிற்பவர்கள் ஒதுக்கப்படுவார்கள்.
  6. தோல்வி என்பது ஒத்திப் போட்டுள்ள வெற்றி, வீழ்வதில் தவறில்லை. எழுந்திரிக்கும் எண்ணம் இல்லாமல் விழந்தே கிடப்பது தவறு.
  7. ஒருவன் பெற்றுள்ள உடற்பன்புகள், மனப்ன்புகள், சமுக அறநெறிகள், மனப்பான்மைகள் போன்ற எல்லா பான்புகலும் இணைந்த முழுமையான கலவை ஆளுமை எனப்பட்டும்.
  8. நாம் பேசுவதை விட நம் உடல் அதிகம் பேசுகிறது. உடல் எப்போதும் உண்மையையே பேசுகிறது என்பது தான் நிஜம்.
  9. நம்முடைய உணர்ச்சிகளை நம்முடைய உடல் மொழி மூலம் அடுத்தவர்கள் அதிகமாகப் புரிந்து கொள்ள இடம் தராமல் இருக்க வேண்டும்.
  10. நாம் அடுத்தவர்கள் உடல் மொழியை முடிந்தவரை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொண்டால் நம் வெற்றி தோல்வியை நாமே எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

Sunday, 23 June 2013

பொன்மொழிகள் - 19

  1. அடிக்கடி தோல்வியுருபவர்கள் தமது பழக்கத்தை மாற்றிக் கொள்ளாதவர்கள்.
  2. வாழ்க்கையின் தொடக்கத்திலேயே பழக்கத்தை, குணத்தை செயல்முறைகளை வித்தியாசமான அணுகுமுறைகளை நல்லவிதமாக மாற்றிக்கொண்டால் மட்டுமே வெற்றியை அடைய முடியும்.
  3. வெட்கப்படுவது, மற்றவர்களிடம் மனதில் உள்ளதை சொல்லத் தயங்குவதும் அதிர்ஷ்டத்தைத் தடுக்கும்.
  4. வாழ்க்கையில் சாதிமத வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு எதையும் செய்யக்கூடாது. ஆக்கபூர்வமான திறமையை மட்டுமே பார்க்க வேண்டும்.
  5. வாடிக்கையாளர்கள் தலையில் தரம் இல்லாத எதையும் கட்ட முடியும் என்று நினைப்பவர்கள் தொழிலில், வர்த்தகத்தில், விற்பனையில் முன்னேற முடியாது.
  6. பலபேர்கள் போதிய அளவுக்கு கல்வி பெற முடியாமல் தொழில் மேதைகளாக, அரசியல் தலைவர்களாக விளங்கி இருக்கிறார்கள். படிக்கவில்லையே என்று வருந்தவேண்டாம்.
  7. எப்போதும் சிடுசிடு என்று இருப்பவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது பிரச்சனைகளை உண்டாக்கி விடுவார்கள்.
  8. பொது மக்களுடன் தொடர்பு கொள்பவர்கள் வாடிக்கையாளர்களை அடிக்கடி சந்திக்க வேண்டிய வேளைகளில் உள்ளவர்கள் எப்போதும் இனிமையாகவும், அமைதியாகவும், புன்சிரிப்புடன் காணப்பட வேண்டும்.
  9. பொதுவாக வெற்றி, தோல்வி என்பது மனித இனத்தின் விதியாகும்.
  10. மனித இனம் வெளிப்படுத்தும் அன்புதான் இந்த உலகத்தில் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் திரும்பத்திரும்பக் கொண்டு வந்து சேர்க்கும்.

Friday, 21 June 2013

பொன்மொழிகள் - 18

  1. நீ விருப்பப்பட்டு சாபிட்டால் இரும்பு கூட கரும்பு போல இனிக்கும். விருப்பம் இல்லாமல் சாப்பிட்டால் கரும்பு கூட கடினமாக இருக்கும்.
  2. சுத்தமான இடத்தைப் பார்த்தால் உட்கார தோணும் அதுபோல் தூய்மையான எண்ணம் உள்ளவர்களிடம் இறைவன் வந்து அமர்வான்.
  3. கெட்டவர்கள் நல்லவர்களுக்கு சாபம் விட்டால் அது பலிக்காது. மாறாக அது வரமாக மாறிவிடும்.
  4. பாலும், சுண்ணாம்பும் பார்வைக்கு ஒன்றுதான் ஆனால் குணத்தால் வெவ்வேறு தன்மை உடையது.
  5. தாயையும், தந்தையையும் கருவிகளாகக் கொண்டு விதியின் விளையாட்டு அனுபவத்தைப் பெறுவதற்குப் பூமியில் பிறக்கிறது குழந்தை.
  6. திடமான மனம் உடையவன் தன்னை இகழ்வதையும் புகழ்வதையும் ஒன்றாகக் கொண்டவன். மானத்திலும் அவமானத்திலும் சம பாவனை உடையவன்.
  7.  மலர்களில் இருந்து மணத்தைக் காற்று எடுத்துச் செல்வது போல நாம் போகின்ற இடங்களிலும் குணங்களைக் கொண்டு செல்கிறோம்.
  8. தீய குணம் உள்ளவர்களிடம் காணப்படுவது டம்பம், இருமாப்பு, கர்வம், கடுமை தவறு செய்ய அஞ்சாதவர்கள்.
  9. தவம் என்பது சரீரத்தால் செய்யப்படுவது, வாக்கால் செய்யப்படுவது, ,மனதால் செய்யப்படுவது என மூன்று வகைப்படும்.
  10. தண்ணிரை கூட ஐஸ்கட்டியாக மாற்றி சல்லடையால் அல்லலாம். அது போல தோல்வியை கூட வெற்றியின் படியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

Tuesday, 18 June 2013

பொன்மொழிகள் - 17

  1. நேர்மையான உழைப்பு, உண்மையான பாசம், தேவையான நேரத்தில் மட்டும் உதவக்கூடிய மனம் உள்ளவர்களிடம் உறவுகளும் நண்பர்களும் கவ்ரவம் பார்க்காமல் எந்த சமயத்திலும் உதவியாய் இருப்பார்கள்.
  2. பிறர் துன்பங்களுக்கு வருத்தப் படுவது மனிதத் தன்மையாகும்.
  3. பிறர் துன்பங்களை நீக்குவது தெய்வத் தன்மையாகும்.
  4. நேரம் என்பது உங்களுடைய பணம் உங்களுடைய கணக்கில் இருப்பதாக வைத்துக்கொண்டு கவனமாக செலவிடுங்கள்.
  5. ஒழுக்கம் என்பது எப்பொழுதுமே வேண்டும். ஒவ்வொரு நாளையுமே முன் கூட்டியே திட்டமிடுங்கள். தள்ளிப் போடும் பழக்கத்தை அடியோடு விடுங்கள்.
  6. நல்லதை செய்கின்றவர்களை விட அந்த நல்லதை மறக்காமல் இருப்பவர்கள் தான் மிகவும் உயர்ந்தவர்கள்.
  7. மதுரை மீனாட்சி பெண் ஆட்சி. சிதம்பரம் நடராஜர் ஆண் ஆட்சி. திருச்சங்கோடு (அர்த்தநாரீஸ்வரர்) ஆண்-பெண் சேர்ந்து செய்யும் ஆட்சி தான் முழுமையடையும் சிறந்த வாழ்கை வாழ்வதற்கு அடையாலம்.
  8. நாம் யாரை மிகவும் நேசிக்கிறோமோ அவர்களால் தான் துன்பம் வருகிறது.
  9. நாம் வேலை செய்வது முக்கியம் அல்ல மற்றவர்களிடம் வேலை வாங்குவது முக்கியம் என்ற சாமர்த்தியத்தை வளர்த்துக் கொண்டால் எல்லா வேளையிலும் வெற்றி பெறலாம்.
  10. நமக்கு அளவுக்கு அதிகமாக செல்வம் வரும் போது தனக்கு தேவையானவை வைத்துக் கொண்டு மீதம் உள்ளதை சமுதாயத்தோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் (கல்வி, மருத்துவம், ஏழைகளுக்கு உதவலாம்).

Sunday, 16 June 2013

பொன்மொழிகள் - 16

  1. மற்றவர்களுக்கு நல்லவராக இருக்கும் நீங்கள் உங்களுக்கே நல்லவராவீர்கள்.
  2. உனக்குள் இருக்கும் திறமை வெளிப்படும் வகையில் நீ வளர வேண்டும்.
  3. லாபத்தினால் ஒருவன் பணக்காரன் ஆவதில்லை செமிப்பதினால் தான்.
  4. அடுத்தவர் இதயத்தை வெல்ல ஒரே வழிதான் உண்டு. நீங்கள் பேசும் வார்த்தைகள் உதட்டிலிருந்து அல்ல உங்களின் இதயத்திலிருந்து வரட்டும்.
  5. நாம் பயணம் செய்யும் லட்சியப் பாதையில் சோர்ந்து நின்று விட்டால் நாமே மற்றவர்களுக்குத் தடை கல்லாக மாறிவிடுவோம்.
  6. ஆபத்து நேரத்தில் உதவாத மகன், பசிக்கு உதவாத உணவு, தாகத்துக்கு உதவாத நீர், வறுமை அறியாத மனைவி, கோபம் தணியாத மனிதன், குரு வார்த்தை கேளாதவன், பாவத்தைத் தீர்க்காத தீர்த்தம் இவை யாவும் இருந்தும் பயனில்லை.
  7. பெண்கள் செந்தாமரையில் வீற்றிருக்கும் இலட்சுமியை போல எப்போதும் அழகாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும்.
  8. கணவனும், மனைவியும் சேர்ந்து உண்மையான கடமையை செய்வதில் தான் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்த முடியும்.
  9. வாழ்க்கையில் எதையும் சிறியதாக நினைக்கக் கூடாது. எந்த வேலையையும் தாழ்ந்ததாக நினைக்கக்கூடாது.
  10. அதிக அளவு படித்தவர்கள் உயர் பதவியில் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. உங்களுக்குத் தோன்றிய யுக்தியை பயன்படுத்தி சுய தொழில் செய்து முன்னேரலாம்.

Friday, 14 June 2013

பொன்மொழிகள் -15

  1. நம் பெருமையை நாம் எல்லோரிடமும் சொல்லக்கூடாது. மற்றவர்கள் நம்மைப் பற்றி பெருமையாய் பேசும் அளவிற்கு சொல்லும் செயலும் இருக்க வேண்டும்.
  2. அதிகாரம் ஒரே இடத்தில் குவியக் கூடாது. அதை பரவலாக்கப்பட வேண்டும்.
  3. சொந்தக்காலில் நிற்கும் வல்லமை படைத்தவர்கள் வாழ்நாள் முழுவதும் மானத்தோடு நிம்மதியாக வாழ முடியும்.
  4. வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைய விரும்புவர்கள் வாக்குத் தவராமலும் நேரம் தவராமலும் இருந்தால் தோல்வி உங்கள் பக்கமே எட்டிப் பார்க்காது.
  5. தண்ணீர் குடிப்பதில் கூட கவனமாகக் குடித்தால் தான் புரையேறாது.
  6. எப்போதுமே செய்கின்ற ஒவ்வொரு செயலும் உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.
  7. கணவன் மனைவி தூங்குப் போகும் நேரத்திலும், சாப்பிடும் சமயத்திலும் எந்த குறைகளையும் பேசக்கூடாது.
  8. அளவுக்கு மிஞ்சிய தூக்கம், அவசியமில்லாத பயம், ஆத்திரம், சோம்பல் எந்தகாரிய்த்தையும் தாமதமாக செய்யும் நடைமுறை உங்கள் முன்னேற்றத்தின் தடைகள்.
  9. நமக்கு பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்து ஒரு வினாடியைக் கூட வீணாக்க வேண்டாம்.
  10. மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் முயற்ச்சியில் நம் துயரத்தை மறப்போம்.

Tuesday, 11 June 2013

பொன்மொழிகள் - 14

  1. நம்முடைய பாதுகாப்பையே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால் வாழ்வில் எதையுமே நாம் சாதிக்க முடியாது.
  2. உணர்ச்சிகளைக் கையாளும் போதும் அதிகபட்ச மகிழ்ச்சியானாலும் அதிகபட்ச துக்கமானாலும் இயல்பாய் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
  3. நீங்கள் செய்யும் வேலைகளில் திட்டமிடல், ஒழுங்கு, முழுமையான அறிவு, முழுமையான ஈடுபாடு, சொன்ன நேரத்தில் சொன்ன தொகைக்குல்லாகவே முடித்தல் போன்றவை நீங்கள் அபாரமாகவளர வழி வகுக்கும்.
  4. அடுத்தவரின் மன உணர்வுகளை அவர்கள் சொல்லாமலே புரிந்து கொண்டு நடப்பவர்களைத் தான் இங்கிதம் தெரிந்தவர்கள் என்று கூறுவார்கள் அனைவருக்குமே பிடிக்கும்.
  5. பாராட்டும் போது அனைவரின் முன்னிலையிலும் பாராட்டுங்கள். குறைக்கூறும் போது தனியாக அழைத்துக் குறைகளை எடுத்துக் கூறுங்கள்.
  6. இரக்கம் இல்லாத அதிகாரம் என்றுமே நிலைப்பதில்லை.
  7. நம்முடைய உணர்ச்சிகளையும், நம்முடைய அந்தரங்க விழயங்களையும் அதிகம் வெளிப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  8. தகவல் தொழில்நுட்பம் துறையில் அறிவு நமக்கு இருக்குமானால் வெற்றியை அடிய நாம் இப்பொழுது உழைக்கும் உழைப்பில் பாதி உழைத்தாலே போதுமானது.
  9. கல்லாமை ஒழிந்தால் தான் இல்லாமை ஒழிந்து போகும்.
  10. வெறும் வாய்ச்சொல் மட்டும் இல்லாமல் அதை தனது செயலாகவும் செய்து தன்னை முன்னிறுத்திக் காட்ட வேண்டும்.

Friday, 7 June 2013

பொன்மொழிகள் - 13

  1. பொருமையானவர்களையும் சகிப்புத்தன்மை உடையவர்களையும் அனைவருமே விரும்புவார்கள்.
  2. இருப்பதிலேயே கடினமான ஒரு விஷயம் நம்பிக்கைக் குரியவராக இருந்து விட்டால் வெற்றிகள் நமமைத் தேடி வந்து குவிய ஆரம்பித்து விடும்.
  3. மனிதராகப் பிறந்த அனைவருமே வாழ்வில் சில நெறிமுறைகளைப் பின்பற்றியே வாழ்கிறார்கள் அவர்கள் பின்பற்றும் அந்த நெறிகளை வைத்தே அவர்கள் மதிப்பிடப்படுகிறார்கள்.
  4. நேரத்தை நாம் நிர்வாகிக்க முடியாது நம்மைத்தான் நாம் நிர்வகித்துக் கொள்ள வேண்டும் அதனால் நேரத்தின் மீது பழி போடாதீர்கள்.
  5. யோசித்துச் செயல்படுபவர்கள் அதிக தோல்விகளையோஅதிக ஏமாற்றங்களையோ சந்திப்பதில்லை.
  6. சாதனையாளர்கள் வரிசையில் வரவேண்டும் என்றல் செயல்முறை அழகோடு விளக்குவதன் மூலம் வெற்றி கிடைக்கும்.
  7. வெற்றியை நேசிப்பவர்களையே அது வந்தடைகிறது.
  8. ஆடம்பரம் செய்பவர்கள் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் எப்போதும் நீடித்து வாழ்வதில்லை.
  9. நம்மை முதலில் நாம் மதிக்க வேண்டும். பிறர் மதிக்குமாறு நடந்து கொள்ளவேண்டும்.
  10. சுயக்கட்டுப்பாடு தான் நம்மை விலங்குகளிடமிருந்து பிரித்து மனிதர்களாகக் காட்டுகின்றது.

Sunday, 2 June 2013

பொன்மொழிகள் - 12

  1. எப்போதுமே பிறருடைய இடத்தில் இருந்து யோசித்து பழகுங்கள் மிகச்சிறந்த வெற்றியாளராய் நீங்கள் வளம் வருவீர்கள்.
  2. நிதானம் இழந்து விட்டால் வாழ்வையே இழக்க வேண்டி வரும் ஆகையால் அந்த சமயம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
  3. வாய்ப்புகள் பெரிதோ சிறிதோ உங்களுக்குக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஏனென்றால் சிறிய புழு தன பெரிய மீனைப் பிடிக்க உதவுகிறது.
  4. சாதனையாளர்கள் எப்போதுமே பேசுவது குறைவு செய்வது அதிகம்.
  5. சிறந்த ஆளுமை கொண்டவர்கள் தான் சார்ந்த அத்தனை விஷயத்திலும் கவனம் எடுத்துக் கொள்கிறார்கள் இதில் தோற்றம் இரண்டாம் பட்சம் தான்.
  6. இணையம் உலகிலுள்ள தகவல்களை ஒரு நொடியில் நம் கண்முன்னே கொண்டு வருகிறது கணிப்பொறி அறிவு அவசியமானது. இன்று உலக மக்கள் அனைவரையும் இணைக்கும் ஒரு பாலமாக இருப்பது இணையம் தான்.
  7. வியாபாரத்தில் ஒருவரை லாபம் பெற விடாமல் செய்தால் தான் இன்னொருவருக்கு லாபம் கிடைக்கும்.
  8. நாமும் வெற்றியடைந்து பிறரையும் வெற்றி அடைய செய்வதன் மூலமே நாம் தொடர்ச்சியான வெற்றியை அனுபவிக்க முடியும்.
  9. ஆயிரம் மடங்கு வசதிகளுடனும் செல்வத்துடனும் வாழப்பிறந்தவன் என்ற எண்ணம் எந்த சமயத்திலும் இருக்க வேண்டும்.
  10. ஒரு தொழிலை ஆரம்பித்தாலும் முதலீடு செய்வதாக இருந்தாலும் எதிர்கால நோக்கில் அதை அலசி ஆராய்ந்த பிறகே முதலீடு செய்ய வேண்டும்.