- எப்போதுமே பிறருடைய இடத்தில் இருந்து யோசித்து பழகுங்கள் மிகச்சிறந்த வெற்றியாளராய் நீங்கள் வளம் வருவீர்கள்.
- நிதானம் இழந்து விட்டால் வாழ்வையே இழக்க வேண்டி வரும் ஆகையால் அந்த சமயம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
- வாய்ப்புகள் பெரிதோ சிறிதோ உங்களுக்குக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஏனென்றால் சிறிய புழு தன பெரிய மீனைப் பிடிக்க உதவுகிறது.
- சாதனையாளர்கள் எப்போதுமே பேசுவது குறைவு செய்வது அதிகம்.
- சிறந்த ஆளுமை கொண்டவர்கள் தான் சார்ந்த அத்தனை விஷயத்திலும் கவனம் எடுத்துக் கொள்கிறார்கள் இதில் தோற்றம் இரண்டாம் பட்சம் தான்.
- இணையம் உலகிலுள்ள தகவல்களை ஒரு நொடியில் நம் கண்முன்னே கொண்டு வருகிறது கணிப்பொறி அறிவு அவசியமானது. இன்று உலக மக்கள் அனைவரையும் இணைக்கும் ஒரு பாலமாக இருப்பது இணையம் தான்.
- வியாபாரத்தில் ஒருவரை லாபம் பெற விடாமல் செய்தால் தான் இன்னொருவருக்கு லாபம் கிடைக்கும்.
- நாமும் வெற்றியடைந்து பிறரையும் வெற்றி அடைய செய்வதன் மூலமே நாம் தொடர்ச்சியான வெற்றியை அனுபவிக்க முடியும்.
- ஆயிரம் மடங்கு வசதிகளுடனும் செல்வத்துடனும் வாழப்பிறந்தவன் என்ற எண்ணம் எந்த சமயத்திலும் இருக்க வேண்டும்.
- ஒரு தொழிலை ஆரம்பித்தாலும் முதலீடு செய்வதாக இருந்தாலும் எதிர்கால நோக்கில் அதை அலசி ஆராய்ந்த பிறகே முதலீடு செய்ய வேண்டும்.
Sunday, 2 June 2013
பொன்மொழிகள் - 12
Labels:
பொன்மொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment