Friday, 31 May 2013

பொன்மொழிகள் - 11

  1. அவசியம் இல்லாத விஷயங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குவதை அதிக முக்கியத்துவம் தருவதைத் தவிர்க்கவும்.
  2. சமயம், சந்தர்ப்பம் ஏற்றவாறு ஒத்துப் போகும் தன்மை உள்ளவர்களாலேயே மிகப்பெரிய வெற்றிகள் கிடைக்கும்.
  3. பிறரை பாராட்டுவதற்கு நமக்கு மனமிருந்தால் போதும் பணம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
  4. திறமையை வெளிப்படுத்துவது என்பது வருந்தத் தக்க ஒன்றோ வெட்கப்படத்தக்க ஒன்றோ கிடையாது. அந்த நேரம் தைரியம் மனோபலம் உங்களிடம் இருக்க வேண்டும்.
  5. ஒரு துறையில் கைதேர்ந்தவர்களாக இருப்பது பல சமயங்களில் உங்கள் வாழ்க்கையை உயர்த்தும்.
  6. அவசியம் ஏற்படும்போது அணுகுமுறை தெரியாமல் பலர் தோல்வியடைவதை நாம் கண்முன் பலமுறை பார்த்திருப்போம்.
  7. உங்கள் அறிவல்ல, உங்கள் மனநிலையே உங்களின் உயர்வை தீர்மானம் செய்கிறது.
  8. தன்னை, பிறரை, சமுதாயம் பற்றிய விழிப்புணர்வு இல்லாவிட்டால் நாம் சமுதாய ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு விடுவோம்.
  9. நமக்கு சௌகர்யமில்லாத, சங்கடப்படுத்தப் போகும் ஒரு செயலை சந்திப்பதே பிரச்சினை எனப்படுகிறது.
  10. அனைத்து இடங்களிலும் உறவுகளையும், நட்புகளையும் பார்க்காமல் உண்மைகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கலாம்.

Monday, 27 May 2013

பொன்மொழிகள் - 10

  1. ஒருவன் சொத்தை சூரையாடுகிறான் பதிலுக்கு அவன் இவன் சொத்தை சூறையாடுகிறான் இந்த சூறையாடல் சக்கரம் தொடரும் யாராவது இதை நிறுத்தினால்தான் முடிவுக்கு வரும்.
  2. நம்ம சமைத்த்ப் சமயலை ஒரு தடவை சுவைத்து பார்பது போல் நம் வாயால் சொல்கின்ற வார்த்தைகளை ஒரு முறை சொல்லி பார்த்து பிறகு நல்லது கெட்டது எது என்று யோசித்து பின் சொன்னால் பல பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
  3. நன்றி என்பது சரியான காலம் வரும் போது அதனை திருப்பி  செய்வது நம்மை ஒரு முழுமையான மனிதனாகக் காட்டும்.
  4. வெற்றி என்பது கடின உழைப்பும், பண்பும், தியாகமும் சுயக்கட்டுப்பாடும் அவசியமாகும்.
  5. எப்போது உங்களின் விருப்பமும் வேலையும் ஒன்றாக ஆகின்றதே அப்போது நீங்கள் சாதிப்பீர்கள்.
  6. உடல் என்பது நமது சொத்து நமது மூலதானம். உடல் நன்றாக இருந்தால் தான் மனம் நன்றாக இருக்கும்.
  7. பிறரால் உங்களைக் காப்பி அடிக்க முடியுமே தவிர உங்களின் தனித்தன்மையை என்றுமே தடுக்க முடியாது.
  8. புதுமையாய் யோசியுங்கள் மக்கள் மத்தியில் எப்போதுமே இந்த புதுமைக்கு வரவேற்பு அதிகம்.
  9. சரியான தூண்டுதல் மட்டும் கிடைத்து விட்டால் மலையளவு வேலை கூட நொடிப்பொழுதில் முடிந்துவிடும்.
  10. எந்த செயலுக்கும் வழிமுறை என்பது மிக முக்கியம்.

Sunday, 19 May 2013

உணவே மருந்து - 5

  1. வயிற்ருப்புண், ஒவ்வாமை உள்ளவர்கள் பலகாரம் செய்த எண்ணெயை திரும்பத்திரும்ப பயன்படுத்துவதால் உடம்பில் நோய் அதிகரிக்கும், உடம்புக்கு ஆகாது.
  2. வெய்யில் காலத்தில் இளநீர், தர்பூசணி வெள்ளரிக்காய், நொங்கு, எலுமிச்சம் பழம், நெல்லிக்காய், பச்சை வாழைப்பழம் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது.
  3. பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் நகம் சொத்தை உள்ளவர்கள் இரவு தூங்கும்போது தினமும் எண்ணெய் தடவி வந்தால் சரி ஆகும்.
  4. இரவில் தூங்கும் போது ஒரு சொட்டு வேப்பெண்ணை உடம்பில் தடவினால் கொசு கடிக்காது.
  5. ஆலிவ் எண்ணெயை தூங்கும் போது உதட்டில் தடவினால், உதடு மிருதுவாக இருக்கும்.
  6. வாய் நாற்றம் உள்ளவர்கள் தினமும் நெல்லிக்காய் சாபிட்டால் சரி ஆகும்.
  7. அஜீர்ணக் கோளாறு உள்ளவர்கள் இடது பக்கம் உள்ள பற்களால்  மென்று சாப்பிட்டால் சரி ஆகும்.
  8. பற்களால் மென்று சாப்பிட முடியாதவர்கள் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் மட்டும் இடது பக்கமாக திரும்பி படுத்தால் அஜீரணக் கோளாறு சரி ஆகும்.
  9. கால் விக்கம் உள்ளவர்கள் பார்லி அரிசியை லேசாக வறுத்து பொடி செய்து ஒரு கைப்பிடி அளவு வேகவைத்து பாயசம் போல் குடித்தால் சரி ஆகும்.
  10. பாதத்தில் வலி உள்ளவர்கள் வலி இருந்தால் மட்டும் ஒரு சிறிய ஸ்பூன் அளவு கசகசாவை இரவில் சாப்பிட்டால் கட்டுப்படும்.

பொன்மொழிகள் - 9

  1. வஞ்சிப்பவர்களிடம் சண்டை போடாதீர்கள் சாதித்துக்காட்டுங்கள்.
  2. வெறுப்பை வெறுப்பினால் அழிக்க முடியாது. வெறுப்பு வெறுப்பில்லாமல் இருப்பதனாலேயே அழியும்.
  3. பயந்த சுபாவம் உள்ளவர்கள் யாரை பார்த்தாலும் கோபப்படுவார்கள்.
  4. அன்பை குடும்பத்துக்கும் அறிவை செய்கின்ற தொழிலுக்கும் பயன்படுத்தக் கூடியவர்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பார்கள்.
  5. சும்மா இருப்பதும் ஒருவகை தோல்விதான்.
  6. ஒரு சிறந்த நிர்வாகியாக இருப்பது என்பது தொடர்ந்து கற்கும் அனுபவமே தவிர வேறில்லை.
  7. ஒருவர் செய்யும் வேலை அவருடைய புகைப்படம் போன்றது.
  8. உங்கள் பாராட்டு பொதுவாக இல்லாமல் தனிப்பட்டதாக இருக்கட்டும்.
  9. பிறந்தநாள் கொண்டாடுபவர்கள் அவர்களின் தாய்க்கும் சேர்த்து புது புடவை எடுத்துக்கொடுத்து கொண்டாட வேண்டும். ஏன் என்றால் தாயும் மறுபிறப்பு பிறப்பது போல் தான்.
  10. நான்கு விஷயங்களை இளமை என்று குறைத்து மதிப்பிடக் கூடாது வீரன், பாம்பு, நெருப்பு மற்றும் யோகி.

Saturday, 11 May 2013

உணவே மருந்து - 4

  1. பாகற்காயை கழுவி நறுக்கி தட்டில் மூடாமல் பிரிட்ஜில் வைத்து இரண்டு நாள் கழித்து சமைத்தால் கசப்பு இருக்காது.
  2. கேசரி, பாயசம் செய்யும் போது முந்திரிக்குப் பதில் பாதாம் போடலாம்.
  3. பச்சைப்பயிறை  ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி மூடிவைத்தால் முளைத்துவிடும் . இதனை அப்படியே சாப்பிடலாம் . உடம்பு ஆரோக்கியமாக இருக்கும்.
  4. தயிர் வெங்காயம் செய்யும் போது வெள்ளை வெங்காயம் போட்டு செய்தால் நல்லது.
  5. அத்திக்காய், பச்சைப் பருப்பு போட்டு கூட்டு செய்தால் வயிற்றுப்புண்ணுக்கு நல்லது.
  6. முசு முசுங்கை கீரை தொகையல் செய்து சாப்பிட்டால் சளிக்கு நல்லது.
  7. காளான் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது.
  8. சுண்டைக்காய் காரக்குழம்பு வைத்து சாப்பிட்டால் சளி சரியாகும். 
  9. பால் சோறு சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.
  10. பொதுவாக எண்ணெயில் பொறித்த எதையும் சாப்பிடாமல் இருந்தால் மூட்டு வலி குணமாகும்.

Friday, 10 May 2013

பொன்மொழிகள் - 8

  1. மிக மிக நல்ல நாள் இன்று.
  2. மிகப் பெரிய வெகுமதி மன்னிப்பு.
  3. மிகவும் வேண்டாதது வெறுப்பு.
  4. மிகக் கொடிய நோய் பேராசை.
  5. மிகப் பெரிய தேவை சமயோஜிதபுத்தி.
  6. மிகவும் சுலபமானது குற்றம்காணல்.
  7. கிழ்த்தரமான விஷயம் பொறாமைப்படுதல்.
  8. நம்பக்கூடாதது வதந்திகளை.
  9. ஆபத்தை விளைவிப்பது அதிக பேச்சு.
  10. செய்யக் கூடாதது உபதேசம்.
  11. செய்ய வேண்டியது உதவி.
  12. விலக்க வேண்டியது விவாதம் .
  13. உயர்வுக்கு வழி உழைப்பு.
  14. நழுவவிடக்கூடாதது வாய்ப்புகள்.

பொன்மொழிகள் - 7

  1. அழைப்பின்றி வேரொருவர் வீட்டிற்கு செல்பவர்கள் அது மரணத்திலும் மேலான துன்பத்தைத் தரும்.
  2. பணம் நல்லவர் கையில் இருந்தால் ஊர் நடுவில் நல்ல தண்ணிர் இருப்பதற்கு சமம்.
  3. பொருப்பு இருக்கிறவர்கள் பொருமையாக இருக்க வேண்டும்.
  4. கட்டுப்பாடு இல்லாமல் வாழ்கிறவன் கெளரவம் இல்லாமல் மடிந்து போவான்.
  5. கடன் இல்லாதவனே பணக்காரன. உடல் ஆரோக்கியம் உள்ளவனே செல்வந்தன்.
  6. வாக்குறுதி என்பது ஒருவகைக் கடன்தான்.
  7. எல்லோருடைய உபதேசங்களையும் காது கொடுத்துக் கேளுங்கள், ஒன்றை மட்டும் பின்பற்றுங்கள்.
  8. எல்லோருக்கும் மரியாதை செய்யுங்கள் ஆனால் ஒருவரை பின்பற்றுங்கள்.
  9. எல்லோரிடத்திலும் ஞானத்தை சேகரித்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு குருவினுடைய உபதேசத்தை மட்டும் சொந்தமாக்கிக்கொளுங்கள்.
  10. அனுபவம் அறிவின் முகம் பார்க்கும் கண்ணாடி.

Saturday, 4 May 2013

உணவே மருந்து - 3

  1. காரக்குழம்பு, மீன்குழம்பு செய்யும்போது ஒரு கட்டி பூண்டு உரிச்சிப்போட்டு செய்யலாம் .
  2. மிகவும் கலைப்பாக இருந்தால் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடித்தால் சுறுசுறுப்பாக இருக்கும் .
  3. சாம்பார், கூட்டு செய்து இரக்கும் போது ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கலந்து இரக்கவும் .
  4. தூதுவளை கீரை துவையல் வைத்து சாப்பிட்டால் காது வலி, காது அடைப்பு குணம் ஆகும் .
  5. கரி குழம்பு, குருமா குழம்பு செய்து இறக்கும் போது புதினா பொடி செய்து போடவும் .
  6. எந்த விதமான சமையல் செய்தாலும் ஒரு சிட்டிகை ஓமம் பொடி போட்டு கலந்து இரக்கவும் .
  7. எந்த வித ஜூஸ் செய்தாலும் கொதித்த தண்ணிரை ஆரவைத்து செய்யவும் . சளி பிடிக்காது .
  8. சாம்பார் செய்யும் போது புளிக்கு பதில் எலுமிச்சை சாறு ஊற்றி இரக்கவும்.
  9. பொரியல் கூட்டு வகைகளுக்கு தேங்காய், சீரகம் ஒன்றாக போட்டு கரகரப்பாக அரைத்து போட்டு கலந்து இரக்கவும் .
  10. சாம்பார் செய்யும் போது துவரம் பருப்புக்கு பதில் பச்சைபருப்பு போட்டு செய்யலாம் .

பொன்மொழிகள் - 6

  1. வருவதும் போவதும் இன்பமும் துன்பமும்.
  2. வந்தால் போகாதது புகழும் பழியும்.
  3. போனால் வராதது மானமும் உயிரும்.
  4. தானாக வருவது இளமையும் மூப்பும்.
  5. நம்முடன் வருவது பாவமும் புண்ணியமும்.
  6. அடக்க முடியாதது ஆசையும் துக்கமும்.
  7. தவிர்க்க முடியாதது பசியும் தாகமும.
  8. நம்மால் பிரிக்க முடியாதது பந்தமும் பாசமும்.
  9. அழிவை தருவது பொறாமையும் கோபமும்.
  10. எல்லோருக்கும் சமமானது பிறப்பும் இறப்பும்.

Friday, 3 May 2013

உணவே மருந்து

  1. பால் குடித்தால் உடம்பில் உள்ள அனைத்து வித வலியும் குறையும்.
  2. எந்த வித காய்கறி வேகவைதாலும் ஒரு கரண்டி பால் ஊற்றி வேகவைத்தால் மிருதுவாக வெந்துவிடும் .
  3. பருப்பு வேகவைக்கும் போது நான்கு பல் பூண்டு, பெருங்காயம், மஞ்சள் பொடி, ஓமப்பொடி, சுக்குப்பொடி, வெந்தயம், சிறிது எண்ணெய் ஆகியவற்றை பருப்புடன் போட்டு வேகவைத்து சாம்பார் செய்யவும் .
  4. காரக்குழம்பு, மீன் குழம்பு செய்யும் போது வெள்ளம் சிறிது போட்டு செய்யவும் .
  5. குழம்பு சிறிது கட்டியாக இருக்க வேண்டும் என்றால் அரிசி மாவு அல்லது சோள மாவை கரைத்து ஊற்றவும் .
  6. நெல்லிக்காய் மென்று சாப்பிட்டால் பல் வலி குணமாகும், ஜீரணசக்தி அதிகரிக்கும் .
  7. இரவில் 7 மணிக்குள் சாப்பிட்டால் உடல் எடை குறையும், தொப்பை குறையும் .
  8. காலையில் எழுந்தஉடன் அரை லிட்டர் தண்ணிர் குடித்தால் உடம்புக்கு நல்லது; சுறு சுறுப்பாக இருக்கும் .
  9. பப்பாலி கொய்யாபழம் எல்லா நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம் .
  10. அரைக்கிரை, அத்திக்காய், பூசணிக்காய், முல்லங்கி, கேரட், பீட்ரூட், பாகற்க்காய், முருங்கைக்கீரை உடம்புக்கு நல்லது .
  11. அருகம்புல்லை கத்திரிக்கோலால் நருக்கி மிக்சியில் அரைத்து தண்ணீரில் கொதிக்கவைத்துத் துணியால் வடிகட்டி ஆரவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடம்பிற்கு நல்லது .
  12. பால் தினமும் இரவு ஒரு பெரிய டம்பளர் குடித்தால் மலச்சிக்கல் ஏற்படாது .
  13. நெல்லிக்காய் ஜுஸ் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நாள்முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும் .
  14. வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி ஏற்பட்டால் சவ்வரிசி 100 கிராம் அல்லது ஒரு கைப்பிடி வேகவைத்துத் தேவையான உப்பு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் குணம் ஆகும் .
  15. வயிற்றை சுத்தம் செய்ய அரை லிட்டர் பால் குடித்தால் பேதி ஆகும் .
  16. வயிற்றுவலி, உடம்பு சூடு பிடித்தால் வயிற்றில் தொப்புள் பகுதியில் விளக்கெண்ணெய் ஒரு சொட்டு தடவினால் குணம் ஆகும் .
  17. புளிக்கொழம்பு செய்து இறக்கும் பொழுது நல்லெண்ணெய் 100 கிராம், மிளகுதூள் 1 ஸ்பூன் போட்டு கலந்து ஒரு கொதி வந்ததும் இரக்கவும் .
  18. பாதம் சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும் .
  19. பொதுவாக கொழம்பு, பொரியல் செய்யும்போது ஒரு பிடி கொத்தமல்லித் தழையைப்போட்டு இரக்கவும் .
  20. பச்சைவேர்க்கடலை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்ப்படும் .
  21. காரக்குழம்பு, மீன்குழம்பு செய்யும்போது ஒரு கட்டி பூண்டு உரிச்சிப்போட்டு செய்யலாம் .
  22. மிகவும் கலைப்பாக இருந்தால் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடித்தால் சுறுசுறுப்பாக இருக்கும் .
  23. சாம்பார், கூட்டு செய்து இரக்கும் போது ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கலந்து இரக்கவும் .
  24. தூதுவளை கீரை துவையல் வைத்து சாப்பிட்டால் காது வலி, காது அடைப்பு குணம் ஆகும் .
  25. கரி குழம்பு, குருமா குழம்பு செய்து இறக்கும் போது புதினா பொடி செய்து போடவும் .
  26. எந்த விதமான சமையல் செய்தாலும் ஒரு சிட்டிகை ஓமம் பொடி போட்டு கலந்து இரக்கவும் .
  27. எந்த வித ஜூஸ் செய்தாலும் கொதித்த தண்ணிரை ஆரவைத்து செய்யவும் . சளி பிடிக்காது .
  28. சாம்பார் செய்யும் போது புளிக்கு பதில் எலுமிச்சை சாறு ஊற்றி இரக்கவும்.
  29. பொரியல் கூட்டு வகைகளுக்கு தேங்காய், சீரகம் ஒன்றாக போட்டு கரகரப்பாக அரைத்து போட்டு கலந்து இரக்கவும் .
  30. சாம்பார் செய்யும் போது துவரம் பருப்புக்கு பதில் பச்சைபருப்பு போட்டு செய்யலாம் .
  31. பாகற்காயை கழுவி நறுக்கி தட்டில் மூடாமல் பிரிட்ஜில் வைத்து இரண்டு நாள் கழித்து சமைத்தால் கசப்பு இருக்காது.
  32. கேசரி, பாயசம் செய்யும் போது முந்திரிக்குப் பதில் பாதாம் போடலாம்.
  33. பச்சைப்பயிறை  ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி மூடிவைத்தால் முளைத்துவிடும் . இதனை அப்படியே சாப்பிடலாம் . உடம்பு ஆரோக்கியமாக இருக்கும்.
  34. தயிர் வெங்காயம் செய்யும் போது வெள்ளை வெங்காயம் போட்டு செய்தால் நல்லது.
  35. அத்திக்காய், பச்சைப் பருப்பு போட்டு கூட்டு செய்தால் வயிற்றுப்புண்ணுக்கு நல்லது.
  36. முசு முசுங்கை கீரை தொகையல் செய்து சாப்பிட்டால் சளிக்கு நல்லது.
  37. காளான் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது.
  38. சுண்டைக்காய் காரக்குழம்பு வைத்து சாப்பிட்டால் சளி சரியாகும். 
  39. பால் சோறு சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.
  40. பொதுவாக எண்ணெயில் பொறித்த எதையும் சாப்பிடாமல் இருந்தால் மூட்டு வலி குணமாகும்.
  41. வயிற்ருப்புண், ஒவ்வாமை உள்ளவர்கள் பலகாரம் செய்த எண்ணெயை திரும்பத்திரும்ப பயன்படுத்துவதால் உடம்பில் நோய் அதிகரிக்கும், உடம்புக்கு ஆகாது.
  42. வெய்யில் காலத்தில் இளநீர், தர்பூசணி வெள்ளரிக்காய், நொங்கு, எலுமிச்சம் பழம், நெல்லிக்காய், பச்சை வாழைப்பழம் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது.
  43. பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் நகம் சொத்தை உள்ளவர்கள் இரவு தூங்கும்போது தினமும் எண்ணெய் தடவி வந்தால் சரி ஆகும்.
  44. இரவில் தூங்கும் போது ஒரு சொட்டு வேப்பெண்ணை உடம்பில் தடவினால் கொசு கடிக்காது.
  45. ஆலிவ் எண்ணெயை தூங்கும் போது உதட்டில் தடவினால், உதடு மிருதுவாக இருக்கும்.
  46. வாய் நாற்றம் உள்ளவர்கள் தினமும் நெல்லிக்காய் சாபிட்டால் சரி ஆகும்.
  47. அஜீர்ணக் கோளாறு உள்ளவர்கள் இடது பக்கம் உள்ள பற்களால்  மென்று சாப்பிட்டால் சரி ஆகும்.
  48. பற்களால் மென்று சாப்பிட முடியாதவர்கள் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் மட்டும் இடது பக்கமாக திரும்பி படுத்தால் அஜீரணக் கோளாறு சரி ஆகும்.
  49. கால் விக்கம் உள்ளவர்கள் பார்லி அரிசியை லேசாக வறுத்து பொடி செய்து ஒரு கைப்பிடி அளவு வேகவைத்து பாயசம் போல் குடித்தால் சரி ஆகும்.
  50. பாதத்தில் வலி உள்ளவர்கள் வலி இருந்தால் மட்டும் ஒரு சிறிய ஸ்பூன் அளவு கசகசாவை இரவில் சாப்பிட்டால் கட்டுப்படும்.
  51. குளிர்ச்சியான காய்களுடன் (முள்ளங்கி) சமஅளவு முருங்கைக்காய் சேர்த்து சமைத்தால் சளி பிடிக்காது.

உணவே மருந்து - 2

  1. அருகம்புல்லை கத்திரிக்கோலால் நருக்கி மிக்சியில் அரைத்து தண்ணீரில் கொதிக்கவைத்துத் துணியால் வடிகட்டி ஆரவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடம்பிற்கு நல்லது .
  2. பால் தினமும் இரவு ஒரு பெரிய டம்பளர் குடித்தால் மலச்சிக்கல் ஏற்படாது .
  3. நெல்லிக்காய் ஜுஸ் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நாள்முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும் .
  4. வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி ஏற்பட்டால் சவ்வரிசி 100 கிராம் அல்லது ஒரு கைப்பிடி வேகவைத்துத் தேவையான உப்பு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் குணம் ஆகும் .
  5. வயிற்றை சுத்தம் செய்ய அரை லிட்டர் பால் குடித்தால் பேதி ஆகும் .
  6. வயிற்றுவலி, உடம்பு சூடு பிடித்தால் வயிற்றில் தொப்புள் பகுதியில் விளக்கெண்ணெய் ஒரு சொட்டு தடவினால் குணம் ஆகும் .
  7. புளிக்கொழம்பு செய்து இறக்கும் பொழுது நல்லெண்ணெய் 100 கிராம், மிளகுதூள் 1 ஸ்பூன் போட்டு கலந்து ஒரு கொதி வந்ததும் இரக்கவும் .
  8. பாதம் சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும் .
  9. பொதுவாக கொழம்பு, பொரியல் செய்யும்போது ஒரு பிடி கொத்தமல்லித் தழையைப்போட்டு இரக்கவும் .
  10. பச்சைவேர்க்கடலை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்ப்படும் .

பொன்மொழிகள் - 5

  1. செல்வத்தைத் தமது என்று உரிமை கொண்டாடி அழைப்பவர்களெல்லாம் அதிகாலையில் எழுந்து நாள் முழுவதும் கடுமையாக உழைப்பவர்களே.
  2. பத்து ரூபாயை சேமித்தால் பத்து ரூபாய் சம்பாதித்ததாக அர்த்தம்.
  3. அறிவுக் கூர்மையால் சிந்தனைக்கும் கடும் உழைப்புக்கும் கிடைத்த ஊதியம் பணம்.
  4. பணம் வாழ்க்கையை மிருதுவாக ஓடவைக்கும் எண்ணெய் போன்றது.
  5. முயல்களைப் போல்  பணம் பணத்தைப் பிரசவிக்கும். இதைவிட பெரிய உண்மை  வேறொன்றுமில்லை.
  6. போலிகளின் புகழ் வெளிச்சம் பெறுவதும் இன்றைய நாளில் மிகுதியாகக் காணப் பெறுகிறது.
  7. முயற்சியைக் கொண்டு பயிற்சிகளை செய்துவரும் எந்த ஒரு சராசரி மாணவரும் கண்டிப்பாக நினைத்த பதவியைப் பெறலாம்.
  8. உங்களுக்கு வாழக் கொடுக்கப்பட்ட காலத்துக்குள் வாழந்தத்ற்கான அடையாளங்களையும் சாதனைகளையும் பூமியில் ஆழமாகப் பதியுங்கள்.
  9. ஆணித்தரமான நம்பிக்கையும் அதற்கேற்ற அளவிலான தீவிர முயற்சியும் இருந்தால் எதையும் ஜெயிக்கலாம்.
  10. படிக்க செல்லும் மாணவர்களின் எண்ணங்களை, விருப்பங்களை, செயல்பாடுகளை, நண்பர்கள் பழக்கவழக்கங்களை அடிக்கடி பார்த்துக் கொள்வது பெற்றோர்களது கடமை.