Saturday, 11 May 2013

உணவே மருந்து - 4

  1. பாகற்காயை கழுவி நறுக்கி தட்டில் மூடாமல் பிரிட்ஜில் வைத்து இரண்டு நாள் கழித்து சமைத்தால் கசப்பு இருக்காது.
  2. கேசரி, பாயசம் செய்யும் போது முந்திரிக்குப் பதில் பாதாம் போடலாம்.
  3. பச்சைப்பயிறை  ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி மூடிவைத்தால் முளைத்துவிடும் . இதனை அப்படியே சாப்பிடலாம் . உடம்பு ஆரோக்கியமாக இருக்கும்.
  4. தயிர் வெங்காயம் செய்யும் போது வெள்ளை வெங்காயம் போட்டு செய்தால் நல்லது.
  5. அத்திக்காய், பச்சைப் பருப்பு போட்டு கூட்டு செய்தால் வயிற்றுப்புண்ணுக்கு நல்லது.
  6. முசு முசுங்கை கீரை தொகையல் செய்து சாப்பிட்டால் சளிக்கு நல்லது.
  7. காளான் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது.
  8. சுண்டைக்காய் காரக்குழம்பு வைத்து சாப்பிட்டால் சளி சரியாகும். 
  9. பால் சோறு சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.
  10. பொதுவாக எண்ணெயில் பொறித்த எதையும் சாப்பிடாமல் இருந்தால் மூட்டு வலி குணமாகும்.

No comments:

Post a Comment