Friday, 3 May 2013

உணவே மருந்து - 2

  1. அருகம்புல்லை கத்திரிக்கோலால் நருக்கி மிக்சியில் அரைத்து தண்ணீரில் கொதிக்கவைத்துத் துணியால் வடிகட்டி ஆரவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடம்பிற்கு நல்லது .
  2. பால் தினமும் இரவு ஒரு பெரிய டம்பளர் குடித்தால் மலச்சிக்கல் ஏற்படாது .
  3. நெல்லிக்காய் ஜுஸ் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நாள்முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும் .
  4. வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி ஏற்பட்டால் சவ்வரிசி 100 கிராம் அல்லது ஒரு கைப்பிடி வேகவைத்துத் தேவையான உப்பு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் குணம் ஆகும் .
  5. வயிற்றை சுத்தம் செய்ய அரை லிட்டர் பால் குடித்தால் பேதி ஆகும் .
  6. வயிற்றுவலி, உடம்பு சூடு பிடித்தால் வயிற்றில் தொப்புள் பகுதியில் விளக்கெண்ணெய் ஒரு சொட்டு தடவினால் குணம் ஆகும் .
  7. புளிக்கொழம்பு செய்து இறக்கும் பொழுது நல்லெண்ணெய் 100 கிராம், மிளகுதூள் 1 ஸ்பூன் போட்டு கலந்து ஒரு கொதி வந்ததும் இரக்கவும் .
  8. பாதம் சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும் .
  9. பொதுவாக கொழம்பு, பொரியல் செய்யும்போது ஒரு பிடி கொத்தமல்லித் தழையைப்போட்டு இரக்கவும் .
  10. பச்சைவேர்க்கடலை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்ப்படும் .

No comments:

Post a Comment