- வஞ்சிப்பவர்களிடம் சண்டை போடாதீர்கள் சாதித்துக்காட்டுங்கள்.
- வெறுப்பை வெறுப்பினால் அழிக்க முடியாது. வெறுப்பு வெறுப்பில்லாமல் இருப்பதனாலேயே அழியும்.
- பயந்த சுபாவம் உள்ளவர்கள் யாரை பார்த்தாலும் கோபப்படுவார்கள்.
- அன்பை குடும்பத்துக்கும் அறிவை செய்கின்ற தொழிலுக்கும் பயன்படுத்தக் கூடியவர்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பார்கள்.
- சும்மா இருப்பதும் ஒருவகை தோல்விதான்.
- ஒரு சிறந்த நிர்வாகியாக இருப்பது என்பது தொடர்ந்து கற்கும் அனுபவமே தவிர வேறில்லை.
- ஒருவர் செய்யும் வேலை அவருடைய புகைப்படம் போன்றது.
- உங்கள் பாராட்டு பொதுவாக இல்லாமல் தனிப்பட்டதாக இருக்கட்டும்.
- பிறந்தநாள் கொண்டாடுபவர்கள் அவர்களின் தாய்க்கும் சேர்த்து புது புடவை எடுத்துக்கொடுத்து கொண்டாட வேண்டும். ஏன் என்றால் தாயும் மறுபிறப்பு பிறப்பது போல் தான்.
- நான்கு விஷயங்களை இளமை என்று குறைத்து மதிப்பிடக் கூடாது வீரன், பாம்பு, நெருப்பு மற்றும் யோகி.
Sunday, 19 May 2013
பொன்மொழிகள் - 9
Labels:
பொன்மொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment