- வருவதும் போவதும் இன்பமும் துன்பமும்.
- வந்தால் போகாதது புகழும் பழியும்.
- போனால் வராதது மானமும் உயிரும்.
- தானாக வருவது இளமையும் மூப்பும்.
- நம்முடன் வருவது பாவமும் புண்ணியமும்.
- அடக்க முடியாதது ஆசையும் துக்கமும்.
- தவிர்க்க முடியாதது பசியும் தாகமும.
- நம்மால் பிரிக்க முடியாதது பந்தமும் பாசமும்.
- அழிவை தருவது பொறாமையும் கோபமும்.
- எல்லோருக்கும் சமமானது பிறப்பும் இறப்பும்.
No comments:
Post a Comment