Thursday, 12 September 2013

பொன்மொழிகள் - 24

  1. வாழ்க்கையில் முற்பகுதியில் வெற்றி பெற சுறுசுறுப்பும் ஊக்கமும் தேவை. வாழ்க்கையில் பிற்பகுதியில் வெற்றி பெற பொறுமையும் தன்னடக்கமும் தேவை.
  2. ஒரு செடி எவ்வாறு சிறுசிறு தளிர்களை தினசரி விட்டு நாளடைவில் பெரிய மரமாக வளர்கிறதோ அதுபோல சிறுசிறு முன்னேற்றங்களை அன்றாடம் ஏற்படுத்தி நாளடைவில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காணுங்கள்.
  3. உழைப்புதான் மனிதனுக்கு உயிர் போன்றது. உழைத்து வாழ்வில் உயரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதுவே சிறந்த மருந்து ஆகும். இறுதி மூச்சுவரை உழைப்புதான் உந்து சக்தியும் கூட.
  4. படகைச் செலுத்தும் திசைக்கு எதிர் திசையில் சிலர் துடுப்பைப் போட்டு எதிர் வினையை ஏற்படுத்துவார்கள். அது சரியான அணுகுமுறை அல்ல எண்ணமும் செயலும் நேர்வழியில் சென்றால் எதிர் பார்த்த இடத்தை அடைய முடியும்.
  5. மனிதனின் மனமும் பாராச்சூடும் ஒன்றுதான் எவ்வாறு ஏனெனில் இரண்டுமே திறந்தால் தான் வேலை செய்ய முடியும். எப்பொழுதும் திறந்த மனதுடன் இருங்கள்.
  6. வெற்றி என்பது தானாக வருவதில்லை. அது வியர்வைத் துளிகளின் விளைச்சல்.
  7. மனிதர்களின் ஆழ்மனதில் நிறைவேறாத ஆசைகளின் அடிப்படையில் தான் அவர்களது மனநிலை அமைகிறது.
  8. விரைப்பான ஆலமரம் புயலடித்தால் விழுந்து விடுகிறது. வளைகிற நாணல் புயலுக்குப் பின்னும் எழுந்து நிற்கிறது எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருக்கிறது.
  9. உங்களுடைய நிமிர்வில் கம்பீரம் இருக்கவேண்டும். கர்வம் இருக்கக் கூடாது.
  10. நீங்கள் வளைய நேரிட்டால் அதில் அர்த்தம் இருக்க வேண்டும். அச்சம் இருக்கக் கூடாது.

No comments:

Post a Comment