Friday, 20 September 2013

பொன்மொழிகள் - 26

  1. திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது பெண்ணின் பிறந்த சாதகத்தை வைத்துதான் பொருத்தம் பார்க்க வேண்டுமே தவிற ருதுஜாதகத்தைக் கொண்டு பொருத்தம் பார்க்கக் கூடாது. சரியான நேரத்தை பார்க்க முடியாது.
  2. தீய மனிதர்களுடன் நல்ல மனிதர்கள் நட்பு கொண்டால் அந்த நல்ல மனிதர்களும் தீயவர்களாகிவிடுவார்கள். எனவே நண்பற்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் அவசியம்.
  3. ஒருவன் எதிலும் குறை கண்டால் அவன் வாழ்வில் நிறைவே காணமுடியாது.
  4. வின் பேச்சினாலும் வம்பு பேசிக் கொண்டிருந்தாலும் சச்சரவிட்டுக் கொண்டிருப்பதாலும் நம் சக்தி வீணாகிறது.
  5. பிறர் கேலி பேசுவதைக் கேட்டு ஒரு போதும் அச்சப்படக் கூடாது ஆனால் நீ செல்லும் வழி நேர் வழியாக இருக்க வேண்டும்.
  6. கோயில்களில் பலிபீடம், கொடிமரம் ஆகியவைகளுக்கு அருகே மட்டும் நமஸ்காரம் செய்ய வேண்டும். மற்ற இடங்களில் நமஸ்காரம் செய்யக் கூடாது.
  7. பொதுவாக கிழக்கு மேற்கு நோக்கிய கோயில்களில் வடக்கு பக்கம் பார்த்து நமஸ்காரம் செய்ய வேண்டும். வடக்கு தெற்கு நோக்கிய கோயில்களில் கிழக்கு பக்கம் பார்த்து நமஸ்காரம் செய்ய வேண்டும்.
  8. படிக்கும் பொழுது முதுகுத் தண்டு வளையக் கூடாது. நேராக நிமிர்ந்து உட்கார்ந்து படிக்க வேண்டும்.
  9. மறதியின் காரணம் எதையும் மேம்போக்காக செய்வதே பிறர் சொல்வதை சரியாகக் கேட்டுக் கொல்லாமை அலட்சியம் ஆகியவை மறதிக்குக் காரணங்கள்.
  10. குளிக்கும் பொழுது புண்ணிய நதிகளான கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, சிந்து, காவேரி, நர்மத, வைகை, தாமிரபரணி ஆகியவற்றை மனதில் நினைத்துக் கொண்டு குளிக்கலாம்.

No comments:

Post a Comment