- உறவினர்களையும் நண்பர்களையும் பகைத்துக்கொள்ளக் கூடாது. பகை இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் மன உளைச்சல்கள் தோன்றாது.
- எவ்வளவு செல்வம் இருந்தாலும் உடலுக்கு நோய் வந்துவிட்டால் அந்த செல்வத்தை அனுபவிக்க இயலாது. அதனால் நல்ல காரியத்தை செய்வதன் மூலம் நோயை கட்டுப்படுத்தலாம்.
- மனம், வாக்கு, உடம்பு, பணம் என்ற நான்கினாலும் நாம் பாவம் செய்கிறோம். ஆசைப்பட்டு செய்யக் கூடாத ஒன்றைச் செய்வதால் பாவம் உண்டாகிறது. எனவே இதைத் தவிர்த்து இந்த நான்கினாலும் நல்ல காரியங்கள் செய்ய வேண்டும்.
- பிறர் வீட்டிலோ திருமணத்திலோ சாப்பிட்டு விட்டு அந்த உணவை இகழ்ந்து பேசக் கூடாது. எந்த விதமான விழாவாக இருந்தாலும் அழைப்பு வந்தால் கண்டிப்பாக செல்ல வேண்டும்.
- திருமணத்திற்கு செல்பவர்கள் தங்களுடைய வசதிக்கு ஏற்ப பணம் அல்லது தங்கக்காசு பரிசாகக் கொடுத்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
- ஒவ்வொரு மனிதனும் தான் படும் துன்பத்திற்கு தானே பொறுப்பாளி அவனுடைய எண்ணமும் செயலுமே அத்துன்பத்தினைக் கொடுக்கிறது.
- எதற்கெடுத்தாலும் நாம் பிறருக்கு அறிவுரை கூறக் கூடாது. அவர்கள் ஆலோசனை கேட்டால் தீர யோசித்து யாருக்கும் பாதகமில்லாமல் ஆலோசனை கூற வேண்டும்.
- தினமும் வீட்டை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆங்காங்கே புத்தகங்கள், பத்திரங்கள், துணிகள் இறைத்து வைத்தல் கூடாது. எதிலும் ஒரு ஒழுக்கம் வேண்டும்.
- மனதில் அச்ச உணர்வுகள் தோன்றக் கூடாது. அச்ச உணர்வுகள் உடலைக் கெடுப்பதும் இல்லாமல் அடுத்தடுத்து செய்ய வேண்டிய செயல்களையும் கெடுத்துவிடும்.
- அதிக உணவு சாப்பிடாமல் வயிற்றை மென்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். தலையைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். கால்களை வெப்பமாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் நோய் நொடிகள் நெருங்காது நீண்ட ஆயுள் கிடைக்கும்.
Sunday, 22 September 2013
பொன்மொழிகள் - 27
Labels:
பொன்மொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment