தேவையான பொருட்கள்:
செய்முறை:
- வெள்ளை (அல்லது) கருப்பு மூக்கடலை - 1 கப்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 2
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- கறிவேப்பிலை - சிறிதளவு
- தேங்காய் - 1/2 மூடி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- மூக்கடலையை இரவில் தண்ணிரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
- பிறகு காலையில் தண்ணீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் தண்ணீர், உப்பு, மூக்கடலை போட்டு மிருதுவாக வேகவைத்துக் கொள்ளவும்.
- மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு பொரிந்ததும் வேகவைத்த மூக்கடலையை போட்டு நன்றாகக் கலந்துக்கொள்ளவும்.
- இப்பொழுது தேங்காய், சீரகம், மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பொடியாக அரைத்து சுண்டலில் போட்டு ஒரு நிமிடம் கலந்து இறக்கவும்.
மூக்கடலை சுண்டல் தயார் !!!
No comments:
Post a Comment