Wednesday, 18 September 2013

பொன்மொழிகள் - 25

  1. நம்மை அறியாமல் தவறு செய்யும் பொழுது பிறர் அதை சுட்டிக்காட்டும் பொழுது அவர் மேல் கோபம் கொள்ளாது அதை ஒப்புக்கொண்டு நம்மை திருத்திக்கொள்ள வேண்டும்.
  2. இன்பமும் துன்பமும் நிலையானது அல்ல. இந்த நிலை மாறிவிடும் என்ற எண்ணம் எல்லா சூழ்நிலையிலும் மாறுதல் மட்டுமே நிலையானது.
  3. எந்த ஒரு செயலையும் உடனுக்குடன் செய்ய வேண்டும். நாளை செய்து கொள்ளலாம் என்று ஒத்திப் போடக்கூடாது. செய்ய வேண்டிய, செயல்களை செய்ய வேண்டிய நேரத்தில் செய்தால் தான் வாழ்வில் முன்னேறலாம்.
  4. தாய் தந்தையிடமும், மனைவி கணவனிடமும் பிள்ளைகளிடமும் கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் இருந்தால் தன்னைத்தானே தண்டித்துக் கொள்ளுவதற்கு சமம்.
  5. ஒரு கணவனும், மனைவியும் ஒற்றுமையோடு சேர்ந்து வாழ்வது தான் குடும்பம். சமுதாயத்திற்கு அது வலிமை கொடுக்கும் ஒற்றுமை என்றால் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஆகும்.
  6. கணவனும் மனைவியும் விட்டுக் கொடுப்பதும்,வீம்புகள் இல்லாமல் இருப்பதும் அவர்களது குழந்தைகள் மேன்மையாக வளர வழிவகை செய்யும்.
  7. .நம்மைவிட அறிவில் சிறந்தவர்கள் ஆழ்ந்த சிந்தனை உடையவர்கள் ஆகியவர்களிடத்தில் பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும்.
  8. ஒருவனுக்கு ஏற்படும் ஆசையானது முதலில் தைரியத்தைக் கொடுத்து பின் தைரியத்தை அழிக்கிறது.
  9. பெரும்பாலும் சேமிப்பை தபால் நிலையங்கள் வங்கிகளில் மட்டுமே செய்யலாம். இதில் வட்டி குறைவாக இருந்தாலும் அசலுக்கு மோசமில்லை.
  10. பிறர் வாங்கிக் கொடுக்கிறார்கள் நமக்கு செலவில்லை என குடிக்க ஆரம்பிப்பவன் வாழ்நாளில் திருத்தமுடியாது அவனுடைய குடும்பம் வீணாகிவிடும்.

No comments:

Post a Comment