தேவையான பொருட்கள்:
செய்முறை:
- உளுந்து - 1/4 கிலோ
- பச்சை அரிசி (அல்லது) புழுங்கல் அரிசி - 1 ஸ்பூன்
- வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் - 2
- கறிவேப்பிலை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 1/2 லிட்டர்
செய்முறை:
- உளுந்தையும் அரிசியையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊறவைத்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
- பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை அரைத்த மாவில் போட்டு கலாந்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு எலுமிச்சை அளவு மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து வட்டமாக தட்டி நடுவில் ஒரு விரலால் ஓட்டை போடவும்.
- சூடான எண்ணெயில் இதனை போட்டு இரண்டு பக்கமும் திருப்பிவிடவும்.
- பொன்னிறமானதும் எடுத்துப் பரிமாறவும்.
உளுந்து வடை தயார் !!!
No comments:
Post a Comment