Saturday, 18 July 2026

பொன்மொழிகள்

                                                              பொன்மொழிகள்

1. சிறுகுழந்தைகளை தட்டி கொடுத்து வளர்ப்பதும் சில சமயம் தட்டி வளர்ப்பதும் பெற்றவர்களின் கடமையாகும்.

2. ஒரு பெண்ணுக்கு கணவன் உயிரோடு இருப்பது முக்கியம். அதே சமயம் அவளின் உணர்வுகளை உயிரோடு வைத்திருப்பவன் தான் முக்கியம்.

3. எத்தனை முறை  தோற்றாலும் தன் கூட்டை கட்டி முடிக்கிறது சிலந்தி.

4. மண்ணுக்குள் பாதுகாப்பான விதையாக இருப்பதைவிட துணிச்சலாக விருட்சமாக வளர்ந்து இருப்பது நல்லது.

5. வாழுகின்ற வாழ்க்கை வேதனையாக இருக்கிறது என்பதற்காக இன்னொன்றை தேடாதே அது இன்னும் வேதனையாக இருக்கும்.

6. தவறு செய்த ஒருவனுக்கு அவருடைய பயமே தன்டனை.

7. வாழ்க்கை என்பது இழந்ததை பொருந்து அல்ல இருப்பதை பொருத்தது.

8. தனியாக இருக்கும்போது  சிந்தனையிலும்   கூட்டத்தோடு இருக்கும்போது  வார்த்தையிலும்  கவனமாக இருக்க வேண்டும்.

9. காட்டில் வாழும் மரங்களை யாரும் தண்ணீர் ஊற்றி வளர்ப்பதில்லை, தானாக வளர்ந்து பூத்து, காய்த்து வளர்வது போல் கற்றவர்கள் இயற்கையாகவே வளர்வார்கள்.

10. மட்டம் தட்டப்பட்ட மனமும் மட்டம் தட்டப்பட்ட தரையும் உறுதியாக இருக்கும்.


Tuesday, 26 May 2026

பொன்மொழிகள்

                                                                பொன்மொழிகள்

1. ராஜகுணத்தில் முதல் தகுதி பணிவு அது அடிமைத்தனம் இல்லை.

2. எப்போதும் தோற்க்க நினைப்பவர்கள் யாராலும் ஜெயிக்க முடியாது.

3. மன்னிக்கவே முடியவில்லை என்றால் விலகிச்செல்லுங்கள்.

4. அவமானங்கள் இல்லமல் வெகுமானங்கள் இல்லை.

5. மற்றவர்களுக்கு நீங்கள் எதை செய்கிறீர்களோ அது உங்களுக்கு திரும்பி வரும்.

6. பட்டுப்போன மரத்திற்கு பறவைகளும் வருவதில்லை பணம் இல்லாதவர்கள் வீட்டிற்க்கு  உறவுகளும் வருவதில்லை.

7. நேரம் சரியில்லை என்றால் புழுகூட பாம்பு மாதிரிதான் தெரியும்.

8. மனமே அமைதியாக இரு மாற்றத்தையும் ஏற்றுக்கொள் ஏனெனில் சில தீர்ப்புகளை மாற்ற முடியாது. அதனால் எதுவும் நிலையானது இல்லை.

9. எந்த ஒரு செயலையும் முழுமையாக புரிந்து செய்தால் வெற்றி நிச்சயம்.

10. பழி சொல்ல ஊரே வரும், வழி சொல்ல ஒருவரும் வரமாட்டார்கள் உனக்கு நீயே வழி.

Sunday, 3 May 2026

பொன்மொழிகள்

                                                                   பொன்மொழிகள் 

1. ஒருத்தரை பார்த்து கத்துக்கொள்ளுங்கள், கரைந்து போகாதீர்கள்.

2. எதிரிகளை உருவாக்குவதை விட எதிர்காலத்தை உருவாக்கலாம்.

3. கண்ணாடியை போய் நீதான் பார்க்கணும், கண்ணாடி உன்னை வந்து பார்க்காது.

4. வெளிச்சம் இருந்தால்தான் நிழல் தெரியும், வெளிச்சம் இல்லாவிட்டால் நிழல் தெரியாது.

5. வன்முறை என்பது கோழைகளின் ஆயுதம்.

6. அம்மா நடக்க கற்றுக்கொடுத்தால், அப்பா நடத்தையை கற்றுக்கொடுத்தார்.

7. மொழியை இழந்தவன் தன் முகத்தை இழக்கிறான்.

8. நிழலுக்கு யாராலும் மாலை போட முடியாது.

9. வாழ்க்கையில் அமைதியாய் இருக்கிறதுக்கு பயம் இல்லை பொருப்பு இருப்பதால்.

10. தொடர்ந்து படிப்பவர்கள் யார் என்ன சொன்னாலும்  மகிழ்ச்சியையும் துன்பத்தையும் சமமாக எடுத்துக்கொள்வார்கள்.

Saturday, 14 June 2025

வாயு தொல்லை மற்றும் வயிற்று புண் குணமாக நெய் பூண்டு




வாயு தொல்லை மற்றும் வயிற்று  புண் குணமாக நெய்  பூண்டு 

தேவையான பொருட்கள் 

        1.    பூண்டு - 10 பள்ளு
        2.    நெய் - 1 டேபிள் ஸ்பூன் 
        3.    உப்பு - 1 சிட்டிகை  
        4.     மிளகுத்தூள் - 1 சிட்டிகை

செய்முறை 
  1. வாணலில்   ஒரு  டேபிள் ஸ்பூன்  நெய் விட்டு அதில் பூண்டு,  உப்பு தூள் ஒரு சிட்டிகை, மிளகுத்தூள் ஒரு சிட்டிகை ஒன்றாக போட்டு கலந்து விடவும். 
  2. அடுப்பை சிம்மியில் வைத்து  லைட் கோல்டன் கலர் வந்தவுடன் இறக்கி வாணலிலேயே ஆறவிடவும்.
  3. இந்த பூண்டை தினம் சாப்பிட வாயு தொல்லை மற்றும் வயிற்று புண் குணமாகும். அத்துடன் தோல் பளபளப்பு கொடுக்கும்.

Thursday, 23 May 2024

ஆலிவிதையின் நன்மைகள்

                          ஆலிவிதையின் நன்மைகள்


1. ஆலிவிதை தினம் ஒரு ஸ்பூன் சாபிட்டால் உடல் தலர்ச்சி நீங்கும்.

2. இளமையாகவும் வயதான  தோறஂறம் ஏரஂபடாமல் இருக்க உதவும்.

3. பெணஂகளுக்கு  உடல் ஆரோக்கியமாக உதவுகிறது.

4. பெண்களுக்கு ஏற்படும் சூடு கட்டிகள் கரைவதற்க்கு உதவுகிறது.

5. ஆலிவிதை கழுவி வடிகட்டி  ஈரத்துடன் கடாயில் போட்டு வருக்கவும். இதை ஆறவைத்து டப்பாவில்போட்டு மூடி வைத்துக்கொள்ளவும். இதை திணம் 1ஸ்பூன் சாப்பிடவும்.

குறிப்பு:

கர்பமாக இருக்கிறவர்கள் தவிர்க்கவும்.

Friday, 17 June 2022

வாய் வரட்சி போக்கும் கொள்ளு

                              வாய் வரட்சி போக்கும் கொள்ளு 

கொள்ளு 1/4 கிலோ கருவி தண்ணீர் வடிகட்டி ஈரத்தோடு கடாயில் போட்டு நன்றாக வருத்து எடுத்து ஆறவைத்து டப்பாவில் போட்டுவைத்துக்கொள்ளவும். இதை இரவு உணவுக்கு பின்பு 1/2 ஸ்பூன் அளவு மென்று சாப்பிடவும். சாப்பிட்டப்பின் வாயில் எச்சில் வரும். வாய்வரட்சி நீங்கி நன்றாக தூக்கம் வரும். நாம் வெய்யிலில் போகும்போது கொள்ளு எடுத்து வைத்துக்கொண்டால் தண்ணீர் இல்லாதபொருது 1/2 ஸ்பூன் வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாயில் எச்சில் ஊறும்.


குறிப்பு:

1.  கற்பமானவர்கள் கொள்ளு சாப்பிடக்கூடாது.

2. கொள்ளு வறுக்காமல் சாப்பிட கூடாது.

Friday, 21 January 2022

                        தோல் கலர்  கொடுத்து தோல்  நோய் குணமாகும் 

கஸ்தூரி மஞ்சள் தூள் - 100
வேப்பிலை தூள் - 100

 இரண்டும் சம அளவு கலந்து உடம்பில் பூசி குளித்தால் உடல் கலர் கொடுக்கும் தோல் நோய் குணம் ஆகும் தோல் பாதுகாப்பாக இருக்கும்.


                                முகத்தில் உள்ள மங்கு குணம் ஆகும் 

1.முட்டை தோலை  கழுவி  காயவைத்து மிக்சியில் அரைத்து தூள் செய்து முகத்தில் பூசி குளித்து வர முகம் கலர்கொடுக்கும்.

                                                        முகப்பரு குணம் 
வேப்பிலை, சந்தனத்தை சம அளவு கலந்து உடலில் பூசி குளித்து வர உடல் கலர் கொடுக்கும் தோல் நோய் குணம் ஆகும் தோளுக்கு பாதுகாப்பு கொடுக்கும்.

Friday, 15 May 2020

பொன்மொழிகள்-34

1.           யோசிப்பதனால் நிதானமாக யோசிக்க வேண்டும்.

2.            செயல்புடுவதனால் உறுதியோடு செயல்படவேண்டும்.
 
3.            விட்டுக்கொடுப்பதனால் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்க
                வேண்டும்.

4.             வாழ்க்கை என்பது சங்கீதம் - படுக்க.

5.             வாழ்க்கை என்பது பயணம் - நிறைவு செய்க.

6              வாழ்க்கை என்பது புதிர் - விடை காண்க.

7.             வழக்கை என்பது வாய்ப்பு - பயன்படுத்துக.

8.             வாழ்க்கை என்பது கனவு - நனவாக்குக.

9.             சூழ்நிலைக்கு ஏற்றவாறு அறிவாளி மனதை மாற்றிக்கொள்வான்.   
                அறிவில்லாதவன் ஒருபோதும் மனதை மாற்றிக்கொள்ளமாட்டான்

10.           வெறும் வாய்ச்சொள்ளைவிட செயலோடு சேர்ந்த குரலே உரக்க
                கேட்கப்படும்,

Thursday, 30 April 2020

உடல் எடை குறைய அவியல்

                         உடல் எடை குறைய  அவியல்


  1. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
  2. அவரைக்காய் - 5
  3. பீன்ஸ் - 5
  4. கொத்தவரங்காய் - 10
  5. புடலங்காய் - 10 துண்டு  
  6. பீர்க்கங்காய் - 10 துண்டு  
  7. சுரைக்காய் - 10 துண்டு  
  8. பூசணிக்காய் - 10 துண்டு  
  9. கேரட் - 1
  10. உருளைக்கிழங்கு - 1
  11. கருணைக்கிழங்கு - 10 துண்டு  
  12. முள்ளங்கி - 1
  13. நூக்கல் - 1
  14. சவ்சவ் - 1
  15. காலிஃளவர் -10 துண்டு   
  16. ப்ரோக்கோலி - 10 துண்டு
  17. வாழைக்காய் - 10 துண்டு 
  18. முருங்கைக்காய் - 1  
  19. கறிவேப்பிலை - தேவையானவை 
  20. கொத்தமல்லி - தேவையானவை 
  21. பச்சைமிளகாய் அல்லது காய்ந்தமிளகாய் - 2
  22. சீரகம் - 1/2 ஸ்பூன் 
  23. தேங்காய் - 1/4 மூடி 
  24. முந்திரி -5
  25. ஆயில் - 3 ஸ்பூன் 
  26. கடுகு - 1/2 ஸ்பூன் 
  27. தண்ணீர் - 200 ml 
  28. உப்பு - தேவையானவ
     அனைத்து காய்கறிகளையும் கழுவிய  பிறகு 1இன்ச் அளவிற்கு நறுக்கி குக்கரில் போட்டு 200 ml  தண்ணீர், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை போட்டு கலந்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

     பிறகு தேங்காய், முந்திரி, மிளகாய், சீரகம் அனைத்தையும் அரைத்து விழுதாக காய்களில் கலந்து மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும்.

     ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பில்லை, கொத்தமல்லி தழை போட்டு தாளித்து இறக்கவும்.

     அவியல் ரெடி.

குறிப்பு: வீட்டில் உள்ள காய்கறிகளை வைத்தே இந்த அவியலை செய்யலாம்.
இது எல்லா வயதினரும் சாப்பிடலாம். திணம் ஒரு கப் சாப்பிடலாம். உடல் எடை குறையும். மலச்சிக்கல் சரியாகும்.

      






Sunday, 25 May 2014

உணவே மருந்து - 6

  1. குளிர்ச்சியான காய்களுடன் (முள்ளங்கி) சமஅளவு முருங்கைக்காய் சேர்த்து சமைத்தால் சளி பிடிக்காது.

அரைக்கீரை கடைசல்


தேவையான பொருட்கள்:
  1. அரைக்கீரை - 1 கட்டு 
  2. தக்காளி - 1
  3. வெங்காயம் - 1
  4. பூண்டு - 14 பல் 
  5. பச்சை மிளகாய் - 2
  6. காய்ந்த மிளகாய் - 2
  7. கடுகு - 1 ஸ்பூன் 
  8. எண்ணெய் - 1 குழி கரண்டி 
  9. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
  10. பெருங்காயம் - 1 சிட்டிகை 
  11. புளி - ஒரு சிறு நெல்லிக்காய் அளவு 
  12. தண்ணீர் - 1/2 லிட்டர்  
  13. உப்பு - தேவையான அளவு
 அரைக்கீரை கடைசல் செய்முறை:
  1. அரைக்கீரையின் வேரை நீக்கி, நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் (கத்திரிக்கோலால்-scissors நறுக்கிக் கொள்ளவும்).
  2. நறுக்கிய அரைக்கீரை, தக்காளி, நறுக்கிய வெங்காயம், 10 பல் பூண்டு (தோல் உரித்தது), பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயம், தண்ணீர் ஆகியவற்றை ஒரு சட்டியில் போட்டு நன்றாக வேகவைக்கவும்.
  3. வெந்தபின் புளியை போட்டு மேலும் 5 நிமிடம் வேகவைக்கவும்.
  4. வெந்த கீரையை மத்தால் மையக் கடையவும்.
  5. பிறகு, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், 4 பல் பூண்டு (தோலோடு நசுக்கியது) ஆகியவற்றை போட்டு தாலித்து கடைந்த கீரையில் கலந்து விடவும்.
அரைக்கீரை கடைசல் தயார்  !!!

Thursday, 22 May 2014

சாம்பார்

தேவையான பொருட்கள்:
  1. பச்சை பருப்பு (அ) துவரம் பருப்பு - 100 கிராம்
  2. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
  3. பெருங்காயம் - 1 சிட்டிகை 
  4. வெந்தயம் - 1 ஸ்பூன்
  5. பூண்டு - 4 பல் 
  6. நல்லெண்ணெய் - 1 ஸ்பூன் 
  7. தண்ணீர் - 1/2 லிட்டர் 
மேலே கூரிய பொருட்களை ஒன்றாக சேர்த்து நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.
  1. எண்ணெய் 
  2. கடுகு - 1 ஸ்பூன் 
  3. கருவேப்பிலை - 2 கொத்து 
  4. சின்ன வெங்காயம் - 1 கைபிடி 
  5. தக்காளி - 4
  6. முருங்கைக்காய் - 2
  7. முள்ளங்கி - 2
  8. பீன்ஸ் - 1 கைப்பிடி 
  9. காரட் - 2
  10. கத்திரிக்காய் - 4
  11. சாம்பார் மிளகாய் தூள் - 2 ஸ்பூன் 
  12. புளி - ஒரு சிறு நெல்லிக்காய் அளவு 
  13. கொத்தமல்லி தழை - சிறிது
  14. உப்பு - தேவையான அளவு 
  15. நெய் - 1 ஸ்பூன்
 செய்முறை:
  1. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்தபின் கடுகு, கறிவேப்பில்லை போட்டு பொறிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போடவும்.
  2. உடனே மிக்ஸியில் அரைத்த தக்காளியை இதில் போட்டு வதக்கவும்.
  3. பிறகு நறுக்கிய காய்களை இதில் போட்டு வதக்கவும்.
  4. இது வதங்கியதும், 2 ஸ்பூன் சாம்பார் மிளகாய் தூள் போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
  5. இப்பொழுது வேகவைத்த பருப்பு கலவையை இதில் சேர்க்கவும்.
  6. இதில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி, பின் புளி, தேவையான உப்பு, கொத்தமல்லி தழை போட்டு ஒன்றாகக் கலந்து காய்கள் வேகும் வரை கொதிக்க விடவும்.
  7. சாம்பார் தயாரானதும் நெய் விட்டுக் கலந்து இரக்கவும்.
சாம்பார் தயார்  !!!

Thursday, 27 February 2014

பொன்மொழிகள் - 33

  1. புதிய உயிரை பாதுகாப்புடன் இந்த பூமியில் வாழச் செய்வது பெண் இனம் என்பதை மறுப்பதற்கு இல்லை.
  2. கரு பிடித்து கருவுக்குள் பாதுகாத்து அதன் வளர்ச்சிக்கு ஏதுவாக செயல் பட்டு குழந்தை ஈன்று அதற்கு தேவையான உணவை தந்து வளர்ப்பாள் தாய் என்ற பெண்.
  3. பசி ஏற்படாமல் உணவு உண்பதால் நோய் ஏற்படுகிறது இதற்கு மருந்தே உணவு பசித்த பிறகு உண்பதே சிறந்த முறையாகும்.
  4. சிந்தனை என்பது மனதில் எழும் எண்ணங்களின் கூட்டத்தை ஒழுங்கு படுத்தி தனக்குள் கேள்வியும் பதிலும் எப்படி செய்யல்லாம் என்ற கேள்வியும். இப்படி செய்யல்லாம் என்ற பதிலும் பெருவதற்கான எண்ணங்களின் தொகுப்பே சிந்தனை.
  5. காலத்திற்கும் வசதிக்கும் ஏற்ப தண்ணீர் பாத்திரங்கள் மாறுபடுகின்றன.
  6. சந்தோசம் நாம் மற்றவர்களுக்கு கொடுத்தால்தான் நமக்கு திரும்ப கிடைக்கும்.
  7. சொல்வதை விட செய்து காட்டவேண்டும். கடமையை செய்வதில் மனநிறைவு பெறுவதே உண்மையான வழிபாடாகும்.

Monday, 24 February 2014

பொன்மொழிகள் - 32

  1. நீ சிறந்தவனாய் திகழ விரும்பினால் தன்னடக்கமும், பணிவும் கொண்டவனாய் இரு.
  2. மேன்மையான எண்ணங்களுடன் இருப்பவர்கள் எப்போதும் தனித்திருப்பார்கள்.
  3. அடுத்தவருக்கு அறிவுரை கூருவதை விட கேட்பதே நல்லது.
  4. வழி தவறுவதை விட வழி கேட்பது மேல்.
  5. தன்னை காப்பாற்றிக் கொள்ளும் சக்தி இல்லை என்றால் மற்றவர்களால் அவர்களுக்குத் தீங்கு தான் நடக்கும். நம்மை துன்பப் படுத்துபவர்களிடம் பணிந்து போகாமல் துணிந்து நிற்கவேண்டும்.
  6. குறுகிய வாழ்க்கை முறையில் காலத்தை வீண் ஆக்காதே.
  7. ஒரு புன்சிரிப்பும் இதயத் தூய்மையும் உண்மையான அழகு.
  8. ஒருவனுக்கு நல்ல புத்தகமே என்றும் மாறாத நண்பனுக்கு சமம்.
  9. முன் எச்சரிக்கையோடு செயல்படுபவர்கள் என்றும் துன்பத்தில் சிக்க மாட்டார்கள்.
  10. பெண் என்பது எல்லா உயிர்களுக்கும் ஆரம்பமாக இருக்கிறது. பெண் இனத்திலிருந்து தான் பெரும்பகுதி பூமியில் தோற்றம் அடைகிறது.

Wednesday, 12 February 2014

பொன்மொழிகள் - 31

  1. சாதிக்க முடியாதவை என்பது பெரும்பாலும் முயற்சி செய்யாதவையாகவே இருக்கும்.
  2. நன்மை செய்வதற்குத் தயங்கக் கூடாது.
  3. கர்வத்திற்கு இடம் தரக் கூடாது.
  4. தீய எண்ணத்தின் மூலமோ கொடுஞ்சொற்கள் மூலமோ பிறருக்கு தீங்கு இழைக்கக் கூடாது.
  5. ஒருவன் துஷ்டன் என்பது நன்றாக தெரியுமானால் அவனுடன் பழகக் கூடாது.
  6. பிறருடைய பொருளை அபகரிக்கக் கூடாது.
  7. பிறரைத் திருப்தி செய்வதற்காகக் கூட பொய் சொல்லக் கூடாது.
  8. வீண் சண்டைக்குப் போகக் கூடாது.
  9. பிறருடைய குறைகளை மிகைபடுத்தக் கூடாது.
  10. நம்மை இந்த உலகம் பாராட்ட வில்லையே என்று துக்கப்படக் கூடாது.

Thursday, 21 November 2013

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்


  1. ஓம் ஷண்முக பதயே நமோ நம
  2. ஓம் ஷண்மத பதயே நமோ நம
  3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம
  4. ஓம்ஷட்க்ரீட பதயே நமோ நம
  5. ஓம்ஷட்கோண பதயே நமோ நம
  6. ஓம் ஷட்கோச பதயே நமோ நம
  7. ஓம் நவநிதி பதயே நமோ நம
  8. ஓம் சுபநிதி பதயே நமோ நம
  9. ஓம் நரபதி பதயே நமோ நம
  10. ஓம் சுரபதி பதயே நமோ நம
  11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம
  12. ஓம் ஷடஷர பதயே நமோ நம
  13. ஓம் கவிராஜ பதயே நமோ நம
  14. ஓம் தபராஜ பதயே நமோ நம
  15. ஓம் இகபர பதயே நமோ நம
  16. ஓம் புகழ்முநி பதயே நமோ நம
  17. ஓம் ஜயஜய பதயே நமோ நம
  18. ஓம் நயநய பதயே நமோ நம
  19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம
  20. ஓம் குஞ்சரி பதயே நமோ நம
  21. ஓம் வல்லீ பதயே நமோ நம
  22. ஓம் மல்ல பதயே நமோ நம
  23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம
  24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம
  25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம
  26. ஓம் இஷ்டி பதயே நமோ நம
  27. ஓம் அபேத பதயே நமோ நம
  28. ஓம் கபோத பதயே நமோ நம
  29. ஓம் வியூஹ பதயே நமோ நம
  30. ஓம் மயூர பதயே நமோ நம
  31. ஓம் பூத பதயே நமோ நம
  32. ஓம் வேத பதயே நமோ நம
  33. ஓம் புராண பதயே நமோ நம
  34. ஓம் ப்ராண பதயே நமோ நம
  35. ஓம் பக்த பதயே நமோ நம
  36. ஓம் முக்த பதயே நமோ நம
  37. ஓம் அகார பதயே நமோ நம
  38. ஓம் உகார பதயே நமோ நம
  39. ஓம் மகார பதயே நமோ நம
  40. ஓம் விகாச பதயே நமோ நம
  41. ஓம் ஆதி பதயே நமோ நம
  42. ஓம் பூதி பதயே நமோ நம
  43. ஓம் அமார பதயே நமோ நம
  44. ஓம் குமார பதயே நமோ நம

Thursday, 24 October 2013

பொன்மொழிகள் - 30

  1. அனுபவமே அருமையான ஆசான்.
  2. எலும்பு வலைய பணி செய்தால் பல்லுடைய தின்னலாம்.
  3. நம்பிக்கையில்லாத இடத்தில் அன்பு இருக்காது.
  4. தாமதித்துக் கொடுப்பதும் இல்லையென மறுப்பதும் ஒன்றுதான்.
  5. அளவுக்கு மீறிய சுதந்திரம் அனைவரையும் கெடுக்கும்.
  6. நல்ல பக்கத்து வீட்டுக்காரன் விலைமதிப்பற்றவன்.
  7. தைரியசாலி மேடையேறுவான் .
  8. வெறும் பாராட்டு வயிற்றை நிரப்பாது.
  9. நீ போதிப்பதை நீயே பயிற்சி செய்.
  10. தோற்பதால் கற்கிறோம்.

Monday, 21 October 2013

Letter greeting your friend's birthday accompanying a present

No. 5, Big Street,
Anna Nagar,
Chennai.
19 December 2013.

My dear Charley,
     It is your birthday on 25.12.2013.  So, many more happy returns of the day.  Besides, I am sending you a wrist watch as a token of pleasure to celebrate the occasion.  I hope so that it will be useful to you to keep timing to complete your target on time.

     With best wishes from your friend,

Jack

Sunday, 20 October 2013

பொன்மொழிகள் - 29

  1. துன்பமே போதிக்கும் நல்லாசான்.
  2. துன்பமே ஒழுக்கத்தின் உரைகல்.
  3. துன்பம் ஒருவனை செல்வனாக்காவிடாலும் அறிவாளியாக்கும்.
  4. தன்னை அடக்கிஆலத் தெரிந்தவன் மற்றவரை எளிதில் கட்டுப்படுத்த முடியும்.
  5. பாதுகாப்பான இடத்தை அடையும் வரை பகைவனை நட்பாக்கிக் கொள்ள வேண்டும்.
  6. அன்பால் பிறரை உருக வைக்கும் குணமே நற்குணம்.
  7. வீரமும் விடாமுயற்சியும் அனைத்தையும் வெள்ளும்.
  8. கரை சேரும் மட்டும் புகழ்ந்து கொண்டிரு.
  9. செயல்கள் தான் நிலைக்கும், வார்த்தைகள் மறையும்.
  10. சோம்பேறிகளுக்கு எல்லா நாட்களும் விடுமுறையே.

Friday, 18 October 2013

பொன்மொழிகள் - 28

  1. யோசிப்பதானால் நிதானமாக யோசிக்க வேண்டும்.
  2. செயல்படுவதானால் உறுதியோடு செயல்பட வேண்டும்.
  3. விட்டுக் கொடுப்பதானால் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுக்க வேண்டும்.
  4. வாழ்க்கை என்பது சங்கீதம் - பாடுக.
  5. வாழ்க்கை என்பது பயணம் - நிறைவு செய்க.
  6. வாழ்க்கை என்பது புதிர் - விடைகாண்க.
  7. வாழ்க்கை என்பது வாய்ப்பு - பயன்படுத்துக.
  8. வாழ்க்கை என்பது கனவு - நினைவாக்குக.
  9. சூழ்நிலைக்கேற்றவாறு அறிவாளி மனதை மாற்றிக் கொள்வான். அறிவில்லாதவன் ஒருபோதும் மனதை மாற்றிக் கொள்ளமாட்டான்.
  10. வெறும் வாய்ச் சொல்லை விட செயலோடு சேர்ந்த குரலே உரக்க கேட்கப்படும்.